அரும்புகள் மலரும் பருவம்

 

அதிகாலை  பெருமழையில்
முற்றத்து  முல்லை  அரும்புகள்
தன்  இதழ்களிலிருந்தும்
நீர்த் துளிகளைக் சொட்டிக்  கொண்டிருக்கின்றன

.

தெப்பம் போல
நீரில்  மிதக்கிறது
உனது  உருவம்
.
காகங்கள்
வீடுதோறும்  அமர்ந்து  கரைகின்றன

.

மலர்ந்திருக்கும்
முல்லைப் பூக்களைச் சூடிக்கொள்வதற்கு
நீ
இன்னமும்  வரவில்லை

.

துளிநீரை
தன் இதழ்களில்  ஏந்தி
மொட்டவிழும்  அரும்புகளின்  வாசனை
உன்னை
என் பிரபஞ்சவெளியெங்கும்
பரவச்  செய்துகொண்டிருக்கிறது
…………………………………………………………………………………………………………..சக்தி ஜோதி
This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அரும்புகள் மலரும் பருவம்

  1. Venkatesan Shanmugam சொல்கிறார்:

    துளிநீரை
    தன் இதழ்களில் ஏந்தி
    மொட்டவிழும் அரும்புகளின் வாசனை
    உன்னை
    என் பிரபஞ்சவெளியெங்கும்
    பரவச் செய்துகொண்டிருக்கிறது – முன்பு பாலகுமாரணின் வரிகளை சுவாசித்த அதே ஞாபகம் . நல்ல உணர்வு பூர்வமான வரிகள்

  2. ponnambalam kalidoss ashok சொல்கிறார்:

    This poem s filled with the fragrance of flowers with tiny rainy drops touching us with a touch of tender love..Wonderful feeling on love..theppam on water , a divine thought on love.. this poem, மொட்டவிழும் அரும்புகளின் வாசனை…

  3. ravi (swiss) சொல்கிறார்:

    //துளிநீரை

    தன் இதழ்களில் ஏந்தி

    மொட்டவிழும் அரும்புகளின் வாசனை

    உங்களை உங்கள் கவிதை வெளியெங்கும்
    பரவச்செய்துகொண்டிருக்கிறது.

ponnambalam kalidoss ashok -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி