ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை 

 

தோற்றம் :
                   ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை  21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்சமயம்  திண்டுக்கல், தேனி  780 கிராமங்களில்  செயல்படுகிறது.
பார்வையும் நோக்கமும் :
                       “சிறந்ததை  நோக்கி….” சக்தி அறக்கட்டளை  நிறுவனம் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சி , நிலைத்த வளர்ச்சி மற்றும் தொடர் வளர்ச்சி ஆகியவற்றை சாத்தியப்படுத்துவதன் மூலம் சிறந்ததொரு சமூகத்தை உருவாக்குவதை தன் இலட்சியமாக கொண்டு செயல்படுகிறது.
                      ஒவ்வொரு தனிமனிதனும் உணவு உடை இருப்பிடம் இவற்றை உறுதி செய்யவேண்டியிருக்கிறது. அடிப்படைத் தேவையான  உணவு ,உடை, உறைவிடம் ஆகியவற்றின் விழைவை சாத்தியப்படுத்தும் காரணிகளாக நிலம், நீர், பெண்கல்வி ஆகிய மூன்றையும்  சக்தி அறக்கட்டளை தனது தாரக மந்திரமாக வரிந்து கொண்டுள்ளது.
கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதையும் ,
கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதையும், அவர்களுக்கு வளம்  குன்றா வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்துவதையும் ,
விளிம்பு நிலை மனிதர்களின்  ஆதார சக்தியை திரட்டிஅவர்களை சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதையும் ,
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆக்கத்திறன்களை வெளிக்கொணர்வதையும்  ,
ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு துண்டு நிலமெனும் கிடைக்கச் செய்வது ,
 வளம்குன்றிய  நிலத்தில்  மழைமரங்களை உருவாக்கி நீராதாரத்தை பாதுகாப்பது ,
செழிப்பிக்கப் பட்ட நிலவளத்தின் மூலமாக  பெறுகின்ற  அதிக விளைச்சலை அவற்றை சந்தை பொருட்களாக மாற்றும் பணியையும் அது சார்ந்த வேலை வாய்ப்புக்களையும் உருவாக்குதல்
நிலம் ,நீர்  ஆகிய மூல வளங்களைக் காக்கவேண்டியதன் அவசியம் மற்றும் வழிமுறைகளின் மீதான விழிப்புணர்வை ஒரு இயக்கமாகக் கொண்டு செல்ல பெண் சக்தியைத் தயாரிக்கும் வண்ணம் அவர்களுக்கான கல்வியை சிறுவயதிலிருந்தே சாத்தியமாக்குதல் ,
பெண்குழந்தைகளின் கல்வி இடைநிறுத்தம் செய்யப்படாதவண்ணம் அயராமல் மேற்கண்ட மூலவளப் பாதுகாப்பையும் பயன்பாட்டையும் அதன் வெகுமதியையும் உறுதிசெய்து கொண்டேயிருத்தல்
இவைகளையே சிறந்ததொரு சமூகத்தை உருவாக்கும்  தனது இலட்சியத்தை அடைவதற்கான செயல்திட்டங்களாக சக்தி அறக்கட்டளை  வகுத்துக் கொண்டுள்ளது.
சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்:
மகளிர் மேம்பாட்டில்
கிராமப்புற பெண்களை குழுக்களில் இணைத்து அவர்களின் ஆக்கதிறனை வெளிக் கொணர்வது மூலம் பெண்களை பொருளாதார ரீதியாக தற்சார்புடையவர்களாக இயங்கச் செய்வது.
1. 780 கிராமங்கள் , 3880 சுய உதவிக் குழுக்கள் , 46560  உறுப்பினர்கள் .
2. மகளிர் குழுக்களுக்கு தொழிற்பயிற்சிகள் மற்றும் சுய தொழில் துவங்க ஆலோசனை வழங்குவது.
3. பாரத ஸ்டேட் வங்கி , கனரா வங்கி  மற்றும் சக்தி நுண்கடன் திட்டம் மூலமாக மகளிர் குழுக்களுக்கு  கடனுதவி வழங்குவதன் மூலம் தொழில் முனைவோர்களை உருவாக்குவது.
சுற்றுச் சூழல் மேம்பாட்டில்
சுற்று சூழல் மேம்பாடு சார்ந்த கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடைய சமூகக் காடுகளையும், பண்ணைக்காடுகளையும் உருவாக்குதல். இந்தவகையில் ஆண்டுதோறும் ஆயிரம் மரக்கன்றுகளை பள்ளிமாணவர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களின்  துணை கொண்டு  பள்ளிகள் , அரசு மருத்துவமனைகள் , பேரூந்து நிலையங்கள் , மற்றும் சாலையோரங்களில் நட்டு பராமரிப்பது மூலமாக சமூகக் காடுகளை உருவாக்குதல் .  விவசாயிகளுக்கு அவர்களுடைய நிலங்களை பண்படுத்தி பழமரங்கள் , காட்டுமரங்களை வளர்க்க உதவுவதன் மூலமாக பண்ணைக்காடுகளை உருவாக்குதல்.
இதுவரையிலும் நட்டு பராமரிக்கப்படுகின்ற மரங்களின் எண்ணிக்கை இருபதாயிரம் .
நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
இயற்கையன்னையின் மூல வளங்களை காப்பாற்றி பயன்படுத்திக் கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி  சுய முன்னேற்ற முனைப்போடு கூடவே இன்று சக்தி அறக்கட்டளை தன்னை ஒரு சூழல் காப்பு இயக்கமாகவும் முன்னேற்றிக் கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்கிறது. இதனை தன்னுடைய கிராமப்புற மேம்பாடு சார்ந்த சிந்தனையின் தொடர்ச்சியாகவே வளர்த்தெடுக்கவேண்டிய கோட்பாடாகவே அது பார்க்கிறது .
இதன் செயல் வடிவமாகவே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)
திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.
மருத்துவ முகாம்கள் :
கண் பரிசோதனை முகாம், தாய் சேய்  நல விழிப்புணர்வு  முகாம் , சர்க்கரை நோய் விழிப்புணர்வு  உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28,000 மக்கள் பயனடைந்துள்ளனர்.
சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
மீட்கப்பட்ட விவசாயத்துடன் நேரடியாகவும் சார்பு நிலையிலும் தொடர்புகொள்ளும் வகையில் பெண்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதன் மூலம் பெண்ணின் சுயசார்பையும் பெண்ணின் தனியியல்பான படைக்கும் பண்பையும் சமூகப் பண்பாக உருவாக்கும் வகையில் சக்தி சுய தொழிற் பயிற்சிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன .
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. சணல்பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி
யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது
ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மற்றும்  மாணவர்களுகு  இறகுப் பந்து பயிற்சியளிக்க உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.
பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.
சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள்
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கங்கள்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.
7.மாணவர்களுக்கான விவசாய சுற்றுலா
8.மாணவர்களிடையே புராதன ,வரலாற்று இடங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
அங்கீகாரம்:
பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டி.
ACWW – இலண்டன்
கருத்தரங்குகள் :
உலக அளவில் பெண்களின் நிலை பற்றியும் அவர்கள் மேம்பாடு அடையச் செய்யும் முயற்சிகள் பற்றியும் ACWW நடத்திய கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளது.
அமெரிக்கா : உலக அளவில் பெண்களின் நிலை பற்றிய கருத்தரங்கம்
ஸ்ரீலங்கா  : உலகப் பெண்களின் வெற்றிப் பாதை பற்றிய கருத்தரங்கம்
இதன் தொடர்ச்சியாக மத்திய தெற்கு ஆசிய நாடுகளுக்கான கருத்தரங்கினை ( மதுரை ) இந்தியாவில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறது சக்தி அறக்கட்டளை . இதற்கு இந்தியா , பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஸ்ரீலங்கா, நேபால், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டார்கள்.(https://sakthijothi.wordpress.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/)
நிர்வாகி மற்றும் பயிற்சியாளர்கள் பெற்றுள்ள பயிற்சிகளில் சில :
நவீன  விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை பற்றிய பயிற்சி – இஸ்ரேல்.
நுண்கடன் திட்டம்  மற்றும் நிர்வாகம் – லக்னோ
பயிற்சியாளர்களுக்கான  பயிற்சி , கிராமப்புற மேம்பாடு – கோவை
சுயஉதவிக் குழு மேலாண்மை பயிற்சி – காந்திகிராமம்
கிராமிய நுண்கடன் திட்டம் – தாய்லாந்து
தொழில்  முனைவோர் பயிற்சி  – சிங்கப்பூர்
நிறுவன மேலாண்மை பயிற்சி – மலேசியா
நிறுவன நிர்வாகமும் கிராமப்புற மேம்பாடும் பற்றிய பயிற்சி – ஹைதராபாத்
விருதுகள் :
1.. நபார்டு விருது.
2. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
3. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது – 2 முறை
4. லைவ் விருது – லயோலா கல்லூரி
5. மக்கள் தொலைக்காட்சி விருது
6. சி.பா.ஆதித்தனார் விருது
7.பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரியின் மகளிர் மகளிர் மேம்பாட்டிற்க்கான விருது
8. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
9.தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் மாநில விருது
மேலும்,
தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் மூலமாக மாநிலத்தின் சிறந்த சமூக சேவகராக சக்தி அறக்கட்டளை நிர்வாகி திருமதி S.P. ஜோதி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய சீனா நல்லுறவு தூதுக் குழுவில்  தமிழகத்தின் சார்பாக சீனாவிற்கு சென்று வந்துள்ளார்.
http://srisakthitrust.org/

15 Responses to ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

 1. Dr.K.Palanisamy சொல்கிறார்:

  உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

 2. s.raajakumaran சொல்கிறார்:

  எங்கெங்கு காணினும் சக்தி எனும் அளவு வளரட்டும் உங்கள் சக்தி.வாழ்த்துக்கள்.

 3. Senthil Kumar சொல்கிறார்:

  valarka umathu thondu
  needoli valka

 4. thaansayne சொல்கிறார்:

  thodarattum ungal samuga pani vaazhthukal

 5. mohanamoorthy சொல்கிறார்:

  panamum gunamum inaivathu kadinam. ezaigaluku udava ninaikum ungal pani thodarattum

 6. aravindan.c சொல்கிறார்:

  உங்களுடைய நற்பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

 7. R Balakrishnan சொல்கிறார்:

  உங்களது பணி மென்மேலும் சிறப்ப நல்வாழ்த்துக்கள்.

 8. R Balakrishnan சொல்கிறார்:

  உங்களது பணி மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்.

 9. jeyakumarpm சொல்கிறார்:

  nannum ungolodaa sernthu paniyatraa verupam

 10. parthipan சொல்கிறார்:

  i am very proud to see the social activities of sakthijothi . what a wounderfull jop.lot of womens needed our country like you. Can I join with your organisation ? IF yes, i am ready to do to our country. Thanks allotted
  parthipan(9346801010)

 11. தி. குலசேகர் சொல்கிறார்:

  அன்பு படைப்பாளர் சக்திஜோதி,
  இது தி. குலசேகர்
  எழுத்தாளர் மற்றும் திரைக்கலைஞர்
  சொந்த ஊர் பட்டிவீரன்பட்டி திண்டுக்கல் மாவட்டம்
  9941284380
  withlovekuttypalam@gmail.com
  தங்களின் எழுத்துக்களை நாஞ்சில்நாடன் வலைத்தளத்திற்குள் செல்லும்போது அதன் இணைப்பில் தற்செயலாய் பார்த்தேன். உங்களின் ஹோம்லியான புகைப்படம் கவனிக்க செய்தது. சில வரிகள் படித்தேன். யானை தன் துதிக்கையில் எனது குழந்தைப்பருவத்திற்குள் அழைத்துச் சென்று மகிழ்ச்சித் தூவல்களை தூவத் துவங்கியது. லயித்துப்போய் படித்தேன்.
  தமிழ் கூறும் இலக்கிய உலகில் பல திறமையாளர்கள் வெகுஜன கவனிப்பு வளையத்திற்குள் வராமலே இருப்பதன் சமூகஅரசியல் புரியத்தான் இல்லை.
  அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை வேதியல் படித்து, தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் சில காலம் பணி புரிந்து, அன்னம், சந்தியா, ஆழி முதலான பதிப்பங்களில் 20க்கும் மேலான நூல்கள் எழுதி, பின் வேலையை விட்டுவிட்டு, சென்னை வந்து திரைப்படத்துறையில் சேர்ந்து கே.பாக்யராஜ், வசந்த், ரேவதி, ரா. பார்த்திபன் போன்ற இயக்குநர்களிடம் துணைஇயக்குநராக பணியாற்றி தற்சமயம் இயக்குநராவதற்கான முதல் புராஜக்ட்டின் துவக்க வேலைகளில் இருக்கிறேன். மெட்ரோ நாவல் என்கிற பெயரில் திரையிலக்கிய மாத நாவல் இதழ் ஆசிரியராக பொறுப்பேற்று சமீபத்தில் மாதம் ஒரு நாவல் அதில் எழுதுகிறேன். உலகின் மிகச் சிறந்த காதல் திரைக்கதையை தழுவி மொழிஆக்கமாய் இந்தியத்தன்மையோடான நாவலாக ட்ரான்கிரியேட்டிவ் வகை இலக்கியமாக அந்த முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். நண்பர்கள் தயாரிக்க முதல் இயக்கத்திற்கான படைப்பு ஆக்க வேலையையும் இன்னொரு பக்கம் துவங்கியவண்ணம் வாழ்க்கையின் தேடல் பறந்து கொண்டிருக்கிறது.
  கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை அசோக்நகரில் வாசம்.
  சிநேகத்துடன்,
  தி. குலசேகர்
  15.10.2012

 12. Rmlakshmanan சொல்கிறார்:

  AIIthebest ungalpanigalyparkumpluthuperumaikolkeren valvuiuyravendum

 13. balasubramanian சொல்கிறார்:

  vaalthukkal

 14. மேன்மேலும் வளர வாழ்த்துகள்…!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s