Monthly Archives: ஜூலை 2011

தாவர வண்ணங்களால் வரையப்பட்ட சித்திரங்கள்

This gallery contains 8 photos.

வண்ணதாசன் அணிந்துரை Advertisements

படத்தொகுப்பு | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

எனக்கான ஆகாயம்

This gallery contains 3 photos.

நான் மிதந்து கடக்கிறேன் எனக்கான வானத்தை சக்தி ஜோதி புகைப்படம்: நெல்லை ஏர்வாடி ”வாஷிம் ஷா”

படத்தொகுப்பு | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

நிலம் புகும் சொற்கள் – கவிதை

This gallery contains 2 photos.

சக்தி ஜோதி (வாழ்க்கையின் இயங்குதளத்தின் கடந்து செல்லும்போது ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கின்றது.அதை விட்டு வெளியேறமுடியாமல் அதுவாகவே கருத்தரித்து வெளிவந்து மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புக்களையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக்கொண்டு ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மன வெளியைக் கொண்டிருப்பது கவிதைத்தளம்.இன்னும் கூடுதலாகச் சொல்வதானால் மனித அழகியலின் உள்ளுணர்வுகளைக் கிளர்த்துவது … Continue reading

படத்தொகுப்பு | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

நிலம் புகும் சொற்கள்

This gallery contains 4 photos.

ஆற்றின் கரைகளுக்கு இடையில் இருக்கின்றேன் வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது தொண்டை வறண்டு தாகத்தில் தவிக்கின்றேன் கால்கள் நீரில் மிதக்கின்றன ஆற்றின் போக்கை எதிர்க்க இயலாமல் மீனாய் மாறுகின்றேன். தப்பிக்க இயலாது இனி நானும் என்னிடமிருந்து நீரும். சக்திஜோதி எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

வஞ்சனையும் துரோகமும் வன்மமும் காதலின் பகுதிகளா?

This gallery contains 2 photos.

சுகுமாரனின் வேழாம்பல் குறிப்புகள் மதுரை தாகம் இலக்கிய அமைப்பு 13 மார்ச் 2011 அன்று நடத்திய ஆறு கவிதை நூல்கள் – விமர்சன உரையாடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.  இதில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்புக்கு முதலில் நன்றி. தமிழில் இன்று கவிதை நூல்கள் அதிகம் வெளியாகின்றன.அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால் கவிஞர்களும் கவிதைகளும் பெருகியிருக்கிற … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சக்திஜோதியின் 3 கவிதை நூல்கள் – ஒரு பார்வை

This gallery contains 5 photos.

ஆத்மார்த்தி வெகு காலமாக கவிதைகளை வாசித்து வருபவன் என்கிற செருக்கு, எனக்குள்ளிருந்து அவ்வப்பொழுது வெளிப்பட்டு வந்தே இருக்கிறது. உலகத்திலிருக்க கூடிய அத்தனை கவிதைகளையுமே வாசித்து முடித்தவன் போன்றதொரு அகத்தொனியை அது அவ்வப்பொழுது ஏற்படுத்துவதை வசதியாக மறந்து போயும் இருந்து இருக்கிறேன். என் இரட்டை ஆளுமைகளில் நான் தெரிவிக்க மறுக்கும் எனது அகத்தை கட்டமைத்ததில் கவிதைகளுக்கு மிக … Continue reading

படத்தொகுப்பு | Tagged , | 2 பின்னூட்டங்கள்

சக்திஜோதியின் ‘கடலோடு இசைத்தல்’ – ஒரு பார்வை

This gallery contains 1 photo.

பொன்.குமார்   கவிதையில் அகம், புறம் என்னும் கூறுகள் உண்டு. அகம் பாடுவது புதியதல்ல. சங்க காலம் முதலே தொடர்ந்து வருகிறது. ‘அக நாநூறு’ என்னும் தனித் தொகுப்பும் சான்றாக உள்ளது. இன்றும் அகம் பேசுபவர்கள் உள்ளனர். ஆனால் எத்தனை விழுக்காடு கவிதை இருக்கிறது என்பது ஆய்வுச் செய்யப்பட வேண்டியுள்ளது. அகத்தைப் பேசினாலும் அழுத்தமாக, அழகாக, … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , | 1 பின்னூட்டம்