வேர் பரப்பிய நினைவுகள்

ஓடும் நதியில் தவறி விழும் ஒற்றையிலை
சலனப்படுத்துவதில்லை நீரின் போக்கினை
என்றறிந்திருந்த மனம்
விம்மிக் கசிகிறது
பழுத்த மஞ்சளும்
வெளிர் பச்சையும் கலந்து
மையம் அகன்று முனை குறுகிய அந்த இலை
நதியில் மிதந்து கொண்டிருக்க
அவன் கண்களை நினைவூட்டியபடியிருந்தது.
விருட்சமென வளரத் துவங்கியது
அவனது வேர்கள்
 
புலனிலகப்படாமல் கிளைத்துப் பரவின
நிலமெங்கும்
நதியின் போக்கில் செல்லும் அவ்விலை
கண்களிலிருந்து மறைய
நிசப்தமாகிறது காற்று.
……………………………………………………………………..சக்தி ஜோதி
This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to வேர் பரப்பிய நினைவுகள்

  1. mohanamoorthy சொல்கிறார்:

    nice

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    அவனது கண் வழி பயணம் , அவள் கண்ணோடு கலந்து , மணமாகி மனதில் வேர் விட்டு, சிறு தளிர் விட்டு..
    பயணம் , சுகமே ..!!!

  4. muthukuma சொல்கிறார்:

    அருமையான கவிதை………..!!

  5. na.jeyabalan சொல்கிறார்:

    நிசப்தமாகிறது காற்று..varikalukkul vaalkirathu kavithai!

பின்னூட்டமொன்றை இடுக