வாழையடி

 
புஜ்ஜிக் குட்டியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
புஜ்ஜிக் குட்டிக்கு என்னைப் பிடிக்கும்
.
புஜ்ஜிப் பையனையும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
புஜ்ஜிப் பையனுக்கும் என்னைப் பிடிக்கும்
.
புஜ்ஜி பையன் அப்பா மாதிரி  இருக்கிறான்
புஜ்ஜிக் குட்டிக்கு முயல்களைப் பிடிக்கும்
புஜ்ஜிப் பையனுக்கு வண்ண வண்ணக் குருவிகளைப் பிடிக்கும்
புஜ்ஜி பையனும்
புஜ்ஜிக் குட்டியும் சண்டை போட்டுக் கொள்வார்கள்
பிரிக்கவோ சமாளிக்கவோ இயலாது அந்தப் பஞ்சாயத்தை
நானும் அவனும் புஜ்ஜிக் குட்டியாகவும் புஜ்ஜிப் பையனாகவும்
இருந்த தருணங்களை
நினைவு படுத்தும் அவர்களின் சண்டை
 காலையில் அவ்வளவு நட்பாய் இருப்பார்கள்
.
புஜ்ஜிப் பையன் வளர்ந்து கொண்டிருக்கிறான்
புஜ்ஜிக் குட்டி வளர்ந்து கொண்டிருக்கிறாள்
நினைத்துக் கொள்கிறேன்
புஜ்ஜிப் பையனுக்கு
ஒரு  புஜ்ஜிக் குட்டியும்
புஜ்ஜிக் குட்டிக்கு
புஜ்ஜிப் பையனும் பிறப்பார்கள்
.
நாங்கள் புஜ்ஜிப் பையனாகவும்
புஜ்ஜிக் குட்டியாகவும்
வளர்ந்துகொண்டிருப்போம்
……………………………………………………………………………………..சக்தி ஜோதி
This entry was posted in அனைத்தும், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வாழையடி

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    வாழ்த்துகள்.

  2. cuddalore bala சொல்கிறார்:

    wow the best……..
    wishes

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    வித்து வேர் விடும்பொழுது , தளிர்க்கும் , வளரும், மலரும்..
    தொடரும் பந்தம்..வித்தின் மகிழ்ச்சி, தளிர் வழியாக

பின்னூட்டமொன்றை இடுக