ஒரு யானை



எனக்குத் தெரிந்த யானையை
வேறு எவருக்கும் தெரியாது
நீளமான தும்பிக்கையும்
பருத்த கால்களும்
சிறிய கண்களும் இருக்கும்தான்
என் சிறுவயதில் யானை பார்க்க நின்றிருப்போம்
ஆற்று நீரை
தும்பிக்கையாய் உறிஞ்சி குளிக்கையில்
சிதறி தெறிக்கும் நீர்த்துளிகளில்
மனது சிலிர்க்கும்
காடெல்லாம் சுற்றி வந்து
உணவில் பங்கு கேட்டு கூட்டத்தோடு
வீட்டு வாசலில் நிற்கும்
ஆற்றினைக் கடக்க
அதன் மேலேறி பயணித்தும்
யானைச் சாணத்தை மிதித்து
கதகதப் பூட்டிக் கொண்டதுமான
ஒரு சிறுமி
இன்னும் உயிர்ப்புடனிருக்கிறாள்
மனதிற்குள்
காட்டு மரங்களின் ஊடே
கருத்த மேகம்போல ஊர்ந்து செல்லும்
யானை
ஒரு போதும்
பட்டுடையும் நகைகளையும் உடுத்திக் கொண்டு
வருவோர் போவோருக்கு
ஆசி வழங்கும் சமத்து யானைகளுடன்
ஒப்பிடவே முடியாது
காட்டு யானையே
என்னை சுதந்திரப் பெண்ணாய்
உணரச் செய்துகொண்டிருக்கிறது
……………………………………………………………………………………….சக்தி ஜோதி
This entry was posted in அனைத்தும், கவிதை and tagged , , , , . Bookmark the permalink.

11 Responses to ஒரு யானை

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    யானைக்கு தும்பிக்கை . பெண்ணுக்கு நம்பிக்கை ..
    யானைக்கு சிறிய கண்கள்.. பெண்ணுக்கு கூரிய பார்வை..
    யானைக்கு கட்டபட்டுள்ள சாதாரண கயறு, அதன் வலிமையை உணராமல் செய்ய..
    பெண்ணுக்கு , மஞ்சள் கயிறு பெருமை கூட்டி, வலிமை குறைக்க ….
    யானை ஏற்படுத்திய பிரமாண்டம் காட்டு வாழ்வில்..
    பெண் ஏற்படுத்திய பிரமாண்டம், வீட்டு வாழ்வில்..
    இரண்டுமே நம் வாழ்வின் நிதர்சன அதிசய வலிமை பூக்கள்…

  3. na.jeyabalan சொல்கிறார்:

    அருமை.!

  4. நல்லாருக்கு. இறுதி வரிகள் அருமை.

  5. Lakshmanen SM சொல்கிறார்:

    “காட்டு யானையே
    என்னை சுதந்திரப் பெண்ணாய்
    உணரச் செய்துகொண்டிருக்கிறது”

    அருமையான வரிகள் . நெஞ்சை தொடுகிறது

  6. MAHESH.P சொல்கிறார்:

    யா​னை யா​​னையாய இருந்தால் ​போற்றப்படுகிறது, ​பெண் ​பெண்​மையாய் இருந்தால் ​போற்றப்படுகிறது சில இடங்களில், இன்​றை சூலலில் ​பெண்​மை​யோடு கூடிய ஆண்​மை ​தே​வைப்படுகிறது தற்காத்துக் ​கொள்ள

  7. uma சொல்கிறார்:

    Vazhkaiyil Porattathai Yethi Kollum Pothu…Yaanaiyin Balathai Perugiren…

  8. கீதமஞ்சரி சொல்கிறார்:

    வணக்கம். தங்கள் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
    வாசிக்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_18.html
    நன்றி.

  9. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_18.html?showComment=1411012022369#c8444431922796668986

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  10. இளமதி சொல்கிறார்:

    வணக்கம் சகோதரி!

    இன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டு இங்கு வந்தேன்.

    எத்தனை உயிர்துவமான வரிகள்!.. மிக மிக அருமை!
    காட்டு யானையாய்ச் சுதந்திரமாக உலவ ஏங்கும் எத்தனையோ பெண்கள்
    இந்த நவீன நாகரீக வளர்ச்சியின் பின்னும் இருக்கின்றனர் என
    மிக இயல்பாகக் கூறினீர்கள்! மிகவும் ரசித்தேன்!

    வாழ்த்துக்கள்!

பின்னூட்டமொன்றை இடுக