காற்றில் மிதக்கும் நீலம்

காற்றில் மிதக்கும் நீலம் – சக்திஜோதி

வாழை குமார;

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே மெய்யாகவே விடுதலையாவீர;கள்… என்று யோவான்: எட்டு: முப்பத்தாறாவது வசனத்தில் வரும். ஆம்… நாம் வன்மத்திடமிருந்தும் துரோகத்திடமிருந்தும் சிறைபட்டு உழன்ற போது. அதிலிருந்து விடுதலை பெற குமாரனை சிருஷ்டித்தோம். அந்தக் குமாரனும் தன்னை சிருஷ்டித்த எல்லோரையும் கண்டுணர;ந்தான். ஆனாலும் அக்குமாரனிடம் அன்பைப் பெறுபவர;கள் மட்டுமே விடுதலை பெறமுடியும் என்றார;கள். சந்தேகம் ஏதுமில்லை மெய்யாகவே மெய்யாகவே விடுதலை பெறமுடியும் என்றார;கள்.

அப்படியானால் அவரின் அன்பைப் பெறுவது என்பது அத்தனை எளிதான விஷயமா? அத்தனைக் கடினமானது துhய்மையினால் ஆன கவிதைகளைப் படைப்பது. அதைத் தொடர;ந்து தன் கவிதைகளில் படைத்து வரும் சக்திஜோதி. பேரன்பை நோக்கி விரைந்து செல்கிறார;. அவரின் கவிதைகளை பின் தொடர;வதன் மூலம் நெல்லுக்குப் பாயும் நீராய் புல்லுக்குக் கிடைக்கும் அந்தக் குமாரனின் அன்பு நமக்குக் கிடைப்பதும் நியாயமானதுதானே!

நீ விலகிச் செல்கிறாய்
என் சொல்லையோ
அல்லது
என்னையோ எடுத்துக் கொண்டு
உன் நிழலை என் நிலத்தில் விட்டுவிட்டு…

என்று தன் காதலனின் இருப்பை விரும்பும் பொருட்டு, அவர; வடிக்கும் வரிகளோ, பிரிவின் குறியீடான மாட்டுச் செவ்வந்திப் பு+க்களோடு கோழிக்கொண்டைப் பு+வை சேர;த்துக் கட்டும் கதம்பம். அந்தப் பிரிவு எவ்வளவு வலியைத் தந்த போதிலும் அதை..
ஒரு முற்றம்
தன்னை நிலவொளியில்
நிரப்பிக் கொள்ளவே விரும்புகிறது
என்கிறார;. என்ற போதும் காதலன் தொடர;ந்து பிரிவின் வலியைத் தந்து கொண்டேயிருக்க,

உனக்கு
என் நினைவு இருக்காதென்பதை
நானறிவேன்
போதிலும்
உன் மனது எந்தச் சுடரை அடைய விரும்பியதோ
அதை அணையாமல் பார;த்துக் கொண்டிருக்கிறேன்..

என தனக்குத் தானே ஆறுதல் கொள்ளும் அவள் இந்தச் சுடர; அணைவதற்கு முன்பே தன் காதலன் எப்படியும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையுடன், இப்படிச் சொல்கிறாள்.

என் மூச்சுக் காற்றால்
விளக்கின் சுடரை எரியச் செய்து கொண்டிருக்கிறேன்
காதலின் பொருட்டு..

இவ்வாறு தனக்கேயுரிய மொழியில் காதல் சார;ந்த காட்சிகளை மிக எளிதாக பதியமிடும் அவர;, அதில் பற்றிக் கொண்டு உருவாகும் பல்வேறு காட்சிகளை கண்டும் காணாதது போல் கடந்துவிடுவதுதான் அவரை அடையாளப்படுத்திக் கொள்ளும் இடமாக இருக்கிறது.

பெண்ணாக பிறப்பது பற்றிய உயர;வான பதிவுகளை முந்தைய தொகுப்பிலிருந்தே செய்து வரும் சக்திஜோதி, பல முற்போக்கு பெண் கவிஞர;கள் போன்று, சில கவிதைகளில் ஓர; உச்சபட்ச வெறுப்பின் பாற்பட்டு ஆணாய் பிறந்திருக்கலாம் என்று பதிவு செய்து, அதைத் தாண்டியும் ஓர; ஆண் பற்றிய புரிதலை இப்படிச் செய்துவிட முடியுமா என்று வியப்பு மேலிடுற அளவிற்கு பல கவிதைகளைப் படைத்திருக்கிறார;..

ஒரு பெண்ணை
வானிலிருந்து தரையிறக்குவதுதானே
உனது விருப்பம்
என்ற போதிலும்
உனக்கான சிறகசைப்பு
அதுவென நீ அறிவாய்..

ஒரு ஆண் எவ்வளவு மோசமானவன் என்பதை அவன் மனைவியிடம் காட்டிவிடுகிறான் என்பதைப் போல, ஆணாதிக்கம் பற்றிய புரிதலாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான பார;வையிலிருந்து விலகி, ஆணுக்கான எதார;த்தம் அது என்று சொல்லும் சக்திஜோதியின் புரிதல் சரிதானா? என்று பல பெண் கவிஞர;கள் சண்டைக்கு வரக்கூடும். ஆனாலும் அவர; பல கவிதைகளில் பேசுகிற, இருபாலுக்கான பகிர;தல்; என்பது பொது என்று வாதிடும் குணம் உன்னதமானது. அதை விவாதிக்க ஒரு பெரும் சூழலை உருவாக்கித் தரும் அவரின் கவிதைகளும் கவனிக்கத்தக்கது.

அம்மாவின் சமையல் சுவையாய்
அவனைப் பிடித்திருந்தது
அவனைப் பிடிக்கும் என்பது நான் அறியாத சுவை
என்பது அம்மா அறியாதது
அவள் அறிந்ததும் நான் அறியாததுதான்
(அறியப்படாத சுவை)

நான்
ஆடைகளால் மட்டும்
சூழப்பட்டவள் அல்ல
கடந்து செல்கிறேன்
ஆயிரம் ஆயிரம் கனவுகளை
என் மீது காண்பவர;கள் பற்றிய
கனவுகளோடும்
ஆச்சர;யங்களோடும்
மேலும் கொஞ்சம் புதிர;களோடும்…

இந்த இரு கவிதைகள் பேசும் எல்லைகளை உற்று நோக்கினால் விரியும் பார;வைகள் ஏராளம். ஓன்றின் மீது ஒன்றாய் அடுக்கடுக்காய் வைத்து விழும் வரைக்கும் பேச வைக்கும் இவ்வரிகள் சொல்லும் சேதிகள் எத்தனையோ? ஒரு நடிகையை மேயும் கண்களைக் காட்டிலும் இவர; பதிவு செய்யும் கண்கள் சற்று கூர;மையானவை.

மகளின் ரகசியங்களை மகளுக்குத் தெரியாமல் அணுஅணுவாய் அறிந்து வைத்திருக்கும் அம்மா, தன்னால் வெளிபடுத்த முடியாது போன ரகசியங்களை ரகசியங்களாகவே விட்டுவிடுவதும், ஆனால் தற்காலத்திய மகளானவள் தான் கண்டுணர;;ந்த பரவசங்களை, ரகசியங்களை மேலும் மேலும் தேடிச் செல்பவளாகவும், தன்னை உட்கிரகித்து கடந்து செல்பவளாகவும் வெளிப்படுத்திக் கொள்வது சற்று துணிச்சலான காரியம்தான். இதில் ஆச்சர;யம் என்னவெனில் சக்திஜோதியின் எல்லை விரிவடைந்திருக்கிற பரப்பின் வெளியில் பெண்ணின் மென் உணர;வுகள் சுழன்று சுழன்று கவிதைகளில் வெளிக் கிளம்புவதுதான்.

இவ்வாறு எழுதிக் கொண்டிருக்கிற போது கூட, நான் என்ன இத்தொகுப்புக்கு அணிந்துரையா எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றுதான் தோன்றியது. வேறு என்ன செய்வது அவரின் கவிதைகளும் அதற்குத் தகுந்த படிதான் இருக்கின்றன. எனக்கு வேறு மாதிரியாக எழுதவும் தெரியவில்லை. இக்கருத்து தவறு என விமர;சித்து எழுதிவிடவும் முடியவில்லை. அத்தனை உருவ அமைதியுடன் செய்நேர;த்தியுடன் பொருந்தி வந்திருக்கின்றன அவரின் கவிதைகள். யுhர; எழுதினாலும் அப்படித்தான் வரும் போல. வேண்டுமானால் அவர; சொல்லைக் கொண்டே இத்தொகுப்பு குறித்தான அறிமுகத்தை முடித்துவிடலாம்.

எந்த புராணத்தைப் பற்றியும்
பேச விரும்பவில்லை
ஒரு சொல் என்பது
ஒருவனை வாழ வைக்குமென்றால்
அந்தச் சொல்லைச் சொல்வேன்…

அந்தச் சொல்தான் எல்லோருக்குமான சொல். அன்பில் திளைக்கும் சொல். அச்சொல்லை தொடர;;ந்து சொல்லும் சக்திஜோதியை, எந்த வன்மத்தையும் துரோகத்தையும் கொண்டு எளிதில் நெருங்கிவிட முடியாது என்பதை இத்தொகுப்பை வாசிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.

காற்றில் மிதக்கும் நீலம் – சக்திஜோதி
வெளியீடு – உயிர;எழத்து பதிப்பகம் – திருச்சி
விலை – 75.00

This entry was posted in அனைத்தும், கட்டுரை, காற்றில் மிதக்கும் நீலம், மதிப்புரை and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக