பறவையின் குரல்

அலைபேசியில்    குரல்களாய்
அடைகின்ற
பறவைகள்
முகம்  திருப்பிப்  பறக்கின்றன
தொலைவிடம்   நோக்கி
 .
ஏதுமறியாத
சிட்டுக்குருவியின்   இதயத்தில்
படர்ந்திருக்கிறது
மின்பதற்றம்
 .
பேசிக்கொண்டிருந்தோம்
பேசிக்கொண்டிருக்கிறோம்
பறவைகள் பற்றியும்
 .
காதலும்
வெறுப்பும்
பிரிவும்
காமமும்
கட்டளைகளுமென
முகம்கொண்ட வார்த்தைகள்
மின் வார்த்தைகளாகின்றன
 .
ஒருவரிடமிருந்து
ஒருவருக்கு
பின்னும்
பலருக்கும்
 .
வெளியில்
மிதந்து  கலைகிறது
.
சிட்டுக்குருவிகள்
அமர்ந்து  பேசவியலாத
ஆகாயத்தில்
சிவப்பு  வண்ணம்
படர்ந்திருக்கிறது.
……………………………………………………………………………………சக்தி ஜோதி
This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to பறவையின் குரல்

  1. G.Pandiyan சொல்கிறார்:

    so peples are polluting the envoirment byuseless talk

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    என்ன ஒரு சுற்றுப்புற சுழல ஆர்வம்..மனித உணர்வுகள், மின் உணர்வுகள் என மாற்றம் கொண்டு —, ”கிச் கிச் ” என்று அன்பு வார்த்தைகள் மூலம் தன் காதலை வெளிபடுத்தும் குருவிகளின் வாழ்வை….நம் உணர்வை தெரிவிக்க , சிட்டு குருவிகளின் உயிர் ….தன் உயிர் கொடுத்து . மானிட உணர்வை சுமந்து சென்று சிட்டென தன் உயிரை பணயம் வைக்கும் , சிட்டு குருவிகளின் அன்புக்கு , என்ன ..? இறுதி வரிகள் , மானிட மனதை பிசய செய்கின்றது..அலைபேசி அளவை குறைப்போம் ..சிட்டு குருவிகளின் சிங்கார விளையாட்டை …’காக்கை குருவி எங்கள் ஜாதி”–கவிதை , கசிய வைக்கும் வார்த்தைகள் கொண்டு ….

  3. Naanjilpeter சொல்கிறார்:

    வார்த்தைகள் = சொற்கள்
    ஆகாயம் = வானம்
    என்று வடமொழி தவிர்த்தால் பாடல் இன்னும் மென்மை பெறும்.
    வாழ்த்துக்கள் உங்கள் தமிழ்ச்சேவைக்கு.
    வணக்கம் உங்கள் குமுகாய சேவைகளுக்கு.
    நன்றிவுடன்
    நாஞ்சில் பீற்றர்
    http://www.fetna.org

  4. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  5. சுந்தர்ஜி சொல்கிறார்:

    வலிக்கிறது சக்திஜோதி.

    இந்த வலி எதில் மோதிக்கொண்டோம் என்று தெரியாது மோதிக்கொண்ட வலிஅல்ல.

பின்னூட்டமொன்றை இடுக