Monthly Archives: செப்ரெம்பர் 2011

ஒரு கவிஞை நினைவில் அமர்கிறாள்

This gallery contains 1 photo.

ரவி (சுவிஸ்) கவிதை மொழி நன்கு கைவரப்பெற்றிருக்கிறது உங்களுக்கு சக்திஜோதி. புராண இதிகாச கதைகளின் ஒற்றைப் பரிமாணக் கூறுகளை உவமைகளாக புதுக் கவிதைக்குள் புகுத்தும் வழமை கவிதையை மாறுபட்ட வாசிப்புக்குள் சுழலவிடாமல் தடுப்பனவாகவே நான் பார்ப்பதுண்டு. இதற்குள் அகப்படாத உங்கள் கவிதைகள் இயற்கையை வாசிக்கின்றன. இயற்கை பன்முகப் பரிமாண வாசிப்புக்கு அள்ள அள்ளக் குறையாத சுரபி. … Continue reading

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

நினைவின் சுவை

This gallery contains 1 photo.

சக்தி ஜோதி     வண்டுகள் ரீங்காரிக்கும் இவ்விரவில் அறியப்படாத சுவையொன்று நாவில் ஊறியபடி இருக்கிறது இரவுக்குப் முந்திய பகல் நலிவைத் தருவதாதாக இருந்தது மழை பெய்து குளிர்ந்த தினைச்செடிகள் செழித்திருக்க மலைச்சரிவில் மூங்கிலின் நிழலும் வெயில் படிந்த அவன் முகமும் எனக்குள் விம்மியடங்குகின்றன நீள்மலைத் தொடர் காட்டில் உறங்காதிருக்கும் வண்டுகள் இசைத்துக்கொண்டிருக்கின்றன நலிவின் பாடலை … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பெண் படைப்புலகம் – பால் வேறுபாடுகளைக் கடந்து

This gallery contains 2 photos.

அன்பாதவன்  , விழி.பா. இதயவேந்தன்  நடத்திய’ பெண் படைப்புலகம்- இன்று ‘ என்கிற கருத்தரங்கில் பெண் படைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு கட்டுரை வாசித்தனர். அதில் கவிஞர் சக்தி ஜோதி  , ‘ பால் வேறுபாடுகளைக் கடந்து ‘ என்கிற தலைப்பில்  வாசித்த கட்டுரை.                                                                2000  க்கு பின் பெண்ணியம் ,பெண்மொழி ,பெண் படைப்பாளிகள், என்று உரக்கவே         … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நெருப்பு

This gallery contains 1 photo.

நான் சந்திக்கும்  பல பெண்களில்  வாழ்வாதாரங்களின்  பிரச்சினைகளைப்  புரிந்துகொள்ள முடிகிற எனக்கு அவர்களது அகஉணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது .இக்கவிதைகள் பெரும்பாலும்   உணர் பூர்வமான  மெல்லிசையின்  அகச்சப்தமாக  கருதுகிறேன் .ஒரு பறவையும்  பூவும்  மழை சார்ந்த  என் கிராமமும்  அதன் நிலமும்   எனக்கும்  என் கவிதைக்கும்  வெளிப்பாட்டு  முறையாக அமைந்துவிட்டது  சக்தி ஜோதி காய்ந்த கிளைகளை சேர்த்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நினைவெனும் பெருவெளி

This gallery contains 1 photo.

சக்தி ஜோதி பனிகால வெயில் உன் நினைவுகளிலிருந்து எழுப்புகிறது என்னை பூக்களுக்கு நிறத்தைத் தூவியபடி நகர்கிறது வெயில் கொடியது இப்பனி அல்ல பனிக்காலத்தில் வரும் உன் நினைவுகள்தான் அந்த நினைவுகள் அக்கினி காலத்து சூரியஒளியைப் போல சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன பறவைகளை கோடையில் தண்ணீருக்கென அலைய செய்வதுபோல பனியிலிருந்தோ அந்தக் காலத்தின் துயரம் மிகுந்த சம்பவங்களிலிருந்தோ விடுபட … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

மண்வாசனை

This gallery contains 1 photo.

சக்தி ஜோதி   நூறாயிரம் வீரர்கள் தொடர சென்றிருக்கிறாய் குதிரைகளோடும் யானைகளோடும் வீரர்கள் வாட்களையும் வேல்களையும் ஏந்தி பின் தொடர்கிறார்கள் உன் உடல் கவசங்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது உன் கண்களில் நிலத்தின் மீதான வெறி சுடர்கிறது புழுதியால் காற்று நிரம்புகிறது எதிரிகளின் நிலம் அதிர்கின்றன நான் அறிவேன் நீ விரும்பிய நிலத்தை வென்று திரும்புவாய் என உனது நிலத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

காற்றில் அசையும் கனவு

This gallery contains 3 photos.

வண்ணதாசன்…….இன்றைய அவருடைய கவிதையில், ’நம்மிடையேயான தூரத்தை எப்படிக் கடந்து செல்வது, நம் அருகாமையிலிருந்து எப்படி விலகுவதென’ என மயில் அகவும். ஆலங்கட்டி மழை பெய்யும். முற்றத்தில் முல்லை அரும்பும். தெப்பம் மிதக்கும். ஆம்பல் இலைகள் குளம் போர்த்தும். செங்காந்தள் மலர், தாமரை விழிகள், புங்கை மரம் எல்லாம் காற்றில் கனவசைக்கும். காமனை வேண்டிய நாச்சியார் மணலை … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கடத்தல்

This gallery contains 1 photo.

  சக்தி ஜோதி   ஒரு போதும் உணர்ந்த அன்பை சொற்களில் வெளிப்படுத்த முடிந்ததில்லை   ஒரு மரம் முறிந்து விழும் ஓசையைப்  போன்றது அல்லது கழுத்து அறுபடும் ஆட்டின் குரலைப்  போன்றது   எத்தனை முயன்றும் உடலில் பெருகும் வெளிச்சத்தை விளக்க இயன்றதேயில்லை   ஓர் இலக்கை நோக்கிச்  செல்லும்போது அது நம்மை  நோக்கி வருவதுபோல் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

மனசின் ஈரம்

This gallery contains 1 photo.

சக்தி ஜோதி   இரவு நேரத்தில் பேசிக்  கொண்டிருக்கும்  ௬ண்டுப்  பறவைகள் எதைத்தான்  சொல்லிக்  கொண்டிருக்கும்   ஒருவேளை பொய்த்த  கனவைச் சொல்லி கேலி  செய்கிறதோ   நீலவானம் காற்றில்  கரைகிறது கோடையின் இரவு மெல்ல நீள்கிறது  திசைமாறி  மழைமேகம்   எங்கோ  பொழிகிறது   சற்றுமுன் கனவிலிருந்து   விழித்தெழுந்தேன்   மழையின் ஊடாக வீடடைந்த  அவனை தேநீரும்  … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பறவையும் பூட்டும்

This gallery contains 1 photo.

சக்திஜோதி   எவரும்  அறிந்திராத உலகில் அந்தக் கிளி பயணம்  செய்தது ஒரு போதும் கிளிகளே பறக்காத தேசத்தில்   இருமருங்கிலும் இருக்கின்ற வேம்பு தன் கிளைகளை  அசைத்துப்  பூக்களை உதிர்க்கின்றது   ஒருவரும் புரியா உலகத்தில் புரிந்து கொண்டபடி நடனமாடுகின்ற அனைத்துக் கால்களிலும் பூட்டப்பட்டிருக்கின்றது ஒரு பூட்டு.     எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கனவும் புனைவும் கலந்து நெய்த மாண்டேஜ் கவிதைகள்

This gallery contains 1 photo.

– அன்பாதவன் நூல் மதிப்புரை கடலோடு இசைத்தல் கவிதைகள் சக்திஜோதி உயிரெழுத்து வெளியீடு “நமது மொழி எளிமையானது;இனியது ;உயர்ந்தது ;தனித்து இயங்கும் திறன் உள்ளது ;செம்மையானது ; நம்முடைய கவிதை இரண்டாயிரம் ஆண்டு நீண்ட நெடிய மரபு உடையது .செழுமையான அனுபவங்களும் உணர்வுகளுமாக நிரம்பியது .உலகக்கவிதைத் தரத்துக்கு ஒப்பானது .எளிமையானது;உண்மையானது ; நவீன கவிதைக்கு நல்ல … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புராதனக் கனவு

This gallery contains 2 photos.

  சக்தி ஜோதி   பனிக்குளிர்  மேகம்  போர்த்தியிருக்கும் பழம்பெரும்  நகரம் உச்சிநிமிர்ந்த  சிகரத்தின் சமதளத்தில்  அமைந்திருந்த அது சிதைந்திருக்க மனிதர்களின்   வாழ்விடங்கள் மேற்கூரையற்ற தூண்களில் மறைந்திருந்தன வாழ்வின்  தடயங்கள் சுழன்று  வீசும்  காற்றினால் பரவியிருக்க இத்தனை  பெரிய  நகரை கட்டியவர்கள் எங்கு  போனார்கள் பிடி  மண்ணை  சேகரித்தேன் கூடவே ஆயிரமாயிரம்  காதலர்களின் கால்  தடங்களையும் . … Continue reading

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

கூச்சம்

This gallery contains 1 photo.

சக்தி ஜோதி   அனைத்துத்  தயாரிப்புகளும் அந்த  நாளை  நோக்கியே அமைந்து விடுகின்றன   முன்னிரவில் தொற்றிக்கொண்ட  பதற்றத்துடன் புலர்கிறது அன்றையதினம்   நினைவுகளால்  நிரம்பித்  தளும்பும் மனத்தை  அடக்கவியலாது திணருகிறேன்   மரங்களையும் நிலத்தையும் பின்னகர்த்தி  விரையும்  வாகனம் மனஒட்டத்திடம் தோற்றபடியேச்  செல்கிறது      பயணமுடிவில் பிரிவைத்  தாங்கிக்கொண்ட துயரத்திற்குப்  பிராயச்சித்தமாய் அவனை  முத்தமிடுகிறேன் இறுக்கி … Continue reading

More Galleries | Tagged , , , , | 5 பின்னூட்டங்கள்

நீ அறியாத பரிசு

This gallery contains 2 photos.

      சக்தி ஜோதி   காலணிகளின்  மீதான நினைவுகள் என்னைத்  துரத்தியபடி இருக்கிறது   என் நினைவாக  நீ எடுத்துச்சென்ற ஒற்றைக் காலணியை எப்படிக் கண்டுபிடித்தாய்   ஒற்றை மனசென அதை  கையில்  வைத்து  அழகு  பார்க்கிறாய்   காலணியை அன்பின் குறியீடாக பாதுகாப்பின் அடையாளமாகக் கற்பிதம்  கொண்டிருந்தேன்   காலணியை காதலனுக்குரிய  பரிசு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

இல்லாமல் போதல்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் >.. சில சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு, புண்படப் பேசியும் இருக்கிறேன், தமிழ்க்கவிதை சமகாலத்தில்  தானே கட்டிச்சமைத்த சுற்றுச் சுவர்களுக்குள் சிக்கி வெளிவரக் கூசுகிறதோ என, வறண்ட மொழியில்  பாடியதைப் பாடிக் கொண்டிருக்கிதோ என, கம்பனின் வாரிசுகள் சொல்லிழந்து போய்விட்டார்களோ என. சக்தி ஜோதியின் ‘கனவுகள் புதைந்த வீடு’ எனும் கவிதை போல் ஆகிவிடுமோ … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்