மலர்தல்

.
.
நிலாவென
நான்
ஒளிர்வதாகக்  கூறுகிறாய்
சூரியனாய்  இருந்து  கொண்டு
 .
என்
நினைவின்   அடுக்குகளில்
எத்தனையோ  கதைகள்
பொதிந்துள்ளன 

 

நிலா இரவுகள்
அன்று  இருந்தது  போல்
இல்லை
 .
பால்யம்
கடந்த  இந்த  இரவுகளில்
.
பாட்டிகளின்
மரபில்
வந்து போன  இளவரசனாய்
 .
ஏழு  குதிரைகளில்
நீ
வருகையில்
 .
சூர்யகாந்தியாய்
மலர்கிறேன்
 .
நிலா ஒளிரும்  பொழுதிலும் .

 

…………………………………………………………………………….சக்தி ஜோதி 
This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to மலர்தல்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    சூர்யன் உயிர்ப்பை உலகிற்கு அளித்தாலும் , நாம் விரும்புவது நிலவின் குளிரைதான் ..இரவின் வலிமை தான் , மறு நாள் சூர்ய வெளிச்சத்தில் நாம் உழைக்க ஏதுவாகின்றது ..பாட்டி சொன்ன கதைகள் என்றும் உயிரோட்டம் உள்ளது ..கற்பனை குதிரைகளின் பாய்ச்சல் அது ..பால்யம் கடந்த இரவுகள் அறிவின் முதிர்ச்சி என்று சொல்லி கொள்ளும் இரவுகள்(!) (?)..நிலா ஒளிர்ந்தாலும் , எழு குதிரைகளில் வருவது சூர்யன்தான் ..அப்பொழுது , இயற்கை , சூர்ய காந்தி மலரை அற்புதமாக இதழ் விரிக்க செய்யும்..கவிதை, நிலவின் குளிர்ச்சி உள்ள சூர்யன் ..

  3. G.Pandiyan சொல்கிறார்:

    like this

  4. dhanasekar சொல்கிறார்:

    நீதான் என் ஒளிர்விர்க்கும் ,மலர்விர்க்கும், காரணம் என்பதை இப்படியும் சொல்ல முடியுமா ? கவிஞரே !!!!!!

  5. மு.பழனிக்குமார். சொல்கிறார்:

    உண்மைதான் நிலா இரவுகள் அன்று இருந்தது போல் இன்று இல்லை. என் பால்ய நாட்களில் தொலைக்காட்சிகள் இல்லை.நானும், அம்மாவும், அப்பாவும் மொட்டை மாடியில் அமர்ந்து, கதைகளோடும், பேச்சோடும் சாப்பிட்டதும் அப்படியே உரங்கிப்போனதும், நினைவிரங்கி வருகிறது. மொட்டை மாடிக் கனவுகள் , நிலவோடும், நட்சத்திரங்களுடனுமாய் இன்னும் மனதில் மின்னிக்கொண்டிருக்கிறது.. உங்கள் கவிதை என் பால்யத்தின் வானில் சில மின்னல்களை வீசி நினைவு வெளிச்சங்களை ஒளிரவிட்டது. நன்றி தோழர் சக்தி.

பின்னூட்டமொன்றை இடுக