Monthly Archives: ஒக்ரோபர் 2011

பெண்மை 1

This gallery contains 1 photo.

  பிறந்த  குழந்தை  பேசிச்சிரிக்கிறது தானாக விளக்கென  மினுங்கும்   கண்களில் யாவரையும்  பார்த்துச் சிரிக்கிறாள் கள்ளிப்பாலுக்குத் தப்பிய பெண் ஜென்மமெனக் கலங்கும்  பிரசவித்த  தாய் பால்  புகட்டுகிறாள்  வேதனை  ௬டி   நஞ்சிட்டுக்  கொன்றிட  யோசித்தவள் பனிபொழியும்  அதிகாலையில்  ஊதாநிறத்தில் முளைவிட்டு  வெண்நரம்புகளோடிய பயிர்களால்  மீண்டெழுகிறாள்   அப்பயிர்களில்  மாபெரும்  காலம்  படிந்திருக்கிறதைக்  காண்கிறாள்    … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கடல்

This gallery contains 1 photo.

  குளமென  இருந்த மனம் நான் வளர வளர கடலெனவாகியது என் குற்றமல்ல   சமுத்திரத்தைக்  கூட அறிந்திட முடியுமென கூறும் நீ என்னைக் கண்டு கலைங்குவதேனோ   அருவியாய் நதியாய் வெளியெங்கும் திரிகிறாய் சிறு பள்ளம்  கண்டு௬ட  பாய்கிறாய்   நிறைவடையாமல் பொங்குகிறாய் என்னை  நோக்கி  நகர்கிறாய்   என்னோடு கலந்தால் என்னை  அறிந்து  … Continue reading

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

எனக்கான ஆகாயம்

This gallery contains 1 photo.

    மழைக்கால  மாலைகளில் தவறாமல் மழை  வந்துவிடுகிறது   குடைபிடித்துச்  செல்வோர் சாலைகளில் கடக்கின்றனர் வாகனங்களின்  விளக்குகள் மங்கலாக  ஒளிர்கின்றன   நிலவற்ற  வானம் எனக்கு  மேலே  விரிந்திருக்கிறது மழையில்  நனைந்த அதன் சிறகுகளை  உலர்த்திக்கொண்டு   காற்றில்  அலையும் என் ௬ந்தல்  ஆகாயத்தை  வருடியபடி மயங்கிக் கிடக்கிறது .   இந்த மழைக்கால … Continue reading

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

கடல் பயணம்

This gallery contains 1 photo.

கல்கி தீபாவளி மலரில் வெளிவந்த கவிதை நான் மீண்டும் நிலம் சேரலாம் அல்லது கடலில் மூழ்கலாம் நீல வானை மிதந்து கடக்கலாம்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணமிழந்த செயல்

This gallery contains 1 photo.

  சூரிய  உதயத்திற்கு  முன்பாக என்னிடமிருந்து  சென்றுவிடுவான்   எனது இரவும்  பகலும் ஒரே  நிறத்திலானதாய் மாறிவிட்டது   எனது இரவையும்  பகலையும் கண்டுணரச்  செய்ய அவனது  விழிகளைத்  தந்திருக்கிறான்   அந்த  விழிகளைக்கொண்டு  கடந்து   வந்திருக்கிறேன் இரவுகளை   அவன் என்னிலிருந்து  நீங்கிச்  செல்லும் ஒவ்வொரு  விடியலும் துயரம்  மிக்கதாகவே  புலர்கிறது   இரவுக்கும்  … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அறிதல்

This gallery contains 1 photo.

    மஞ்சள்  ஒளி  படர்ந்த என் நிலத்தில்   விதைத்த  உனதன்பு வேர்களால் என்னைச்  சுற்றுகிறது   என் ப்ரியங்களில் இருந்து துளிர்க்கும்  உன்  கிளைகளில் அடையும்   பறவைகள்   சுதந்திரத்தின் இசையை  இசைக்கும்  போது அறிவதில்லை   தியாகத்தின் மொழியை …………………………………………………………………………….சக்தி ஜோதி எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

முடிச்சு

This gallery contains 2 photos.

    மனம் சொல்வதையெல்லாம் கைகள்   செய்யுமா  என்பது  தெரியவில்லை   ஆடை அவிழும் போது நீளும்  கரங்களும்   அன்பு  மிகும் போது அணைக்கும்  கரங்களும்   ஒன்றாவெனவும்  புரியவில்லை   கைகளும் மனமும் வெவ்வேறா  என்பதையும் அறிய  முடியவில்லை .   …………………………………………………………………………………………………சக்தி ஜோதி

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நீங்குதல்

This gallery contains 1 photo.

  நீ வந்து நீங்கியபின் உடல் தணலாகக் கொதிக்கின்றது   பின் உன்  நினைவு  காற்று  என்னைக்  குளிர்விக்க என்னை  மீட்டுக் கொள்கின்றேன்   அந்த இரவில் . ………………………………………………………………………………………………….சக்தி ஜோதி

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

வண்ணங்களின் பிறப்பிடம்

This gallery contains 1 photo.

  அவளின்  விரல்களில்  அமர்ந்திருந்தது வண்ணத்துப்பூச்சி பறந்து  செல்வதற்கு  மனமற்று அவளையே   வனமென்று  கொண்டது   விரல்களை கிளையென்னும்  உதடுகளை  மலரென்றும் அமர்ந்தமர்ந்து  உணர்ந்தது  வண்ணத்துப்பூச்சி    தன்னில்  பதிந்த  வண்ணங்களை அகற்ற  விரும்பாது அவள் சேகரிக்கிறாள்  தன்  மேனியெங்கும் பல வண்ணங்களை    பிறகு அவளே   வண்ணத்துப் பூச்சியென  பறக்கிறாள் அவளது  ஆகாயத்தில் அவளது … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

பரிமாணம்

This gallery contains 1 photo.

இசையென்றாய் பாடலென்றாய்  நல் அமுது  என்றாய் நிலவு  என்றாய் நீங்காத  கனவு  என்றாய் கனவின் தேவதையென்றாய் மலை என்றாய் மலை முகடு என்றாய் மலை முகட்டை உரசிச்  செல்லும் மேகம்   என்றாய் மேகம்  குளிர்ந்து  பெய்யும் மழை என்றாய் மழை பெருகி  ஓடும் நதி  என்றாய் கடல் என்றாய்  கடலின் அலை என்றாய் காதலின் நெருப்பு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

நீரலை விலகும் பொழுது

This gallery contains 1 photo.

  பாதங்களை வருடிச் செல்கிறது மருதா நதி கூடவே சில மீன்கள்   மேய்ச்சல் முடிந்து திரும்பும் மாடுகள்  நீர் அருந்திச் செல்கின்ற அந்த மாலையில்   தண்ணீரை அள்ளிப் பருகும் அவனது கைகள் அவள் கரம் பற்ற எதன் பொருட்டோ நழுவிவிட்டது   பின்பொரு மாலையில் மருதாநதியின் கரையோரம் இரவு கண்ட கனவை நினைத்தபடி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

காதலின் வாதை

This gallery contains 2 photos.

  மழை சாரலாய்  புல்வெளியில் சொரிகிறது   வயல்வெளிகள் பூத்துக் குலுங்குகிறது காதலின் குதூகலம்   நீண்ட மலைத்தொடரின் வழியாக நெளிந்து  செல்லும்  கனவுகள்   பெரும் மழையை நனைக்கின்றன   மழையும் புல்வெளியும் மலைகளும் மலர்களும் இன்னும் தென்றலும்   எதனால்  நிறைகிறது என்பது காதல்  அறியும்   உன்  நினைவால் உருவாகும் வாதையை … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

நீட்சி

This gallery contains 1 photo.

  பனியில் இரவு  முழுக்க நனைந்த  மலர்போல்   குழிந்து  கிடக்கின்ற அன்பு என்மேல்   முத்தங்களாய் பொழிகிறது   அதன்  மூச்சுக்காற்று இதமாய்  என்னை வருட மலராய்  இதழ்கள்   விரிக்கிறேன்   ஒருபுறம் என் மகளுக்காகவும்   மறுபுறம் மகளாகவும் . …………………………………………………………………………….சக்தி ஜோதி

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கானகத்தில் தொலைந்து போதல்

This gallery contains 1 photo.

தொலைந்து போவது நல்லது அல்லது தொலைந்து போவதை உணர்வது நல்லது பலமுறை தொலைந்து போயிருக்கிறேன் பலமுறை என்னை மீட்டெடுத்திருக்கிறார்கள் ஒருமுறை தொலைந்து போனபோது எவருமே என்னை மீட்டெடுக்கவில்லை நான் அப்போது பறவைகள் தேசத்திலிருந்தேன் பறவைகளின் தேசம் என்பது புதிர்களால் ஆனது நான் எத்தனை விரும்பியும் வீடு திரும்ப இயலவேயில்லை சோர்ந்து போய் அந்தத் தேசத்திலேயே தங்கிவிட்டேன் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இருள் விழிகள்

This gallery contains 1 photo.

கண்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன கண்களுக்கு எத்தனையோ அர்த்தங்கள் இருக்கின்றன மலர்களும் கண்கள் போலத்தான் அர்த்தங்கள் நிரம்பியவை கண்கள் மலர்ந்ததா மலர்கள் விழித்தா என நள்ளிரவில் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள் மலர் மலரும் கண்கள் திறக்கும் என்றபோதும் தகுதியுள்ளவர் யார் தகுதியற்றவர் யார் என கண்களுக்கும் தெரியாது மலர்களுக்கும் தெரியாது அவை மூடிக் கிடக்கையில். ………………………………………………………………சக்தி ஜோதி எஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்