மிதக்கும் மேகம்

.
.
உன்னிடம்
பகிர்ந்து   கொள்வதெற்கென
மேகத்தை ஏந்திக்  கொண்டிருக்கின்றேன்
 .
உன்  நினைவின்  போக்கில்
நகரும்  அதைக் கட்டுப் படுத்த  இயலாது
இம்முறையும்   தவிக்கின்றேன்
 .
நீர்த்துளிகளைச்    சுமந்திருக்கும்
இந்த  மேகத்திற்கு
கருணையென்பதே இல்லை
 .
என்னை  எரித்துக்  கொண்டிருக்கும்
உன் மீதான
நினைவை
அணைக்காது  நகைக்கின்றது
 .
மின்னலை  உதிர்க்கும்
உனது  உரசல்களை
எனதுடல்  தாங்காதெனினும்
 .
பாலைவனத்தில்
உயிர்த்திருக்க  மழை வேண்டித்
தவமிருக்கும்  மலர்ச்செடியென
 .
காத்திருக்கின்றது
அத்தருணத்திற்காக.
………………………………………………………………………………………………….சக்தி ஜோதி 
This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to மிதக்கும் மேகம்

  1. சின்னப்பயல் சொல்கிறார்:

    உன் நினைவின் போக்கில்
    நகரும் அதைக் கட்டுப் படுத்த இயலாது
    இம்முறையும் தவிக்கின்றேன்

  2. Naanjilpeter சொல்கிறார்:

    நல்ல தமிழ்ப் பாடல். நன்றிகள் பல உரித்தாகுக!

  3. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    மேகம் என்பது அன்பின் திவலைகளால் சூழப்பட்ட இதயம் ..இந்த இதயம் , அவனின் அல்லது அவளின் அன்பான நினைவுகளால் ஆன காற்றால் மட்டுமே கட்டுபடுத்த இயலும் ..அற்புத வரிகள்..நீர்த்வலைகள் நிரம்பியுள்ள மேகம் பொதுவாக குளிர்ச்சியாக இருக்கும் ..ஆனால், அது சுட்டரிக்கும் நினைவுகளை , குளிர்விக்காது , இதயத்துடன் ஒரு சுக விளையாட்டை ஆடுகின்றது..சுகமான சொல்லாடல் ..மேகமும் மின்னலும் சேர்ந்தால் , உணர்வின் உயிர்ப்க்கு வானவில்தான் ..காத்திருக்கும் தருணங்கள் , மயில் மழை மேகம் கூடும் போது, தோகை விரித்து கலி நடனம் செய்யும் அழகிற்கு ஒப்பானது ..

  5. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    காத்திருக்கும் தருணங்கள் , மயில் மழை மேகம் கூடும் போது, தோகை விரித்து களி நடனம் செய்யும் அழகிற்கு ஒப்பானது ..

  6. Dhana Sekar சொல்கிறார்:

    காலொடித்து மேகமாய் மோகமதை குறியிட்டு “என்னை எரித்துக் கொண்டிருக்கும்

    உன் மீதான

    நினைவை

    அணைக்காது நகைக்கின்றது” என்று உயிரின் வாதயை உயிரோடு வடித்திருக்கிறார் .

பின்னூட்டமொன்றை இடுக