உற்சாகம்

 

ஒருத்திக்கு எப்பொழுது
உற்சாகமடைவாள்
தெரியாது
ஏன் உற்சாகமடைகிறாள் என்பதும்
தெரியாது
உற்சாகத்திற்கு காரணமானவனுக்கும்கூட
காரண காரியமின்றி
சில சம்பவங்கள் நடக்கலாம்
ஒரு சொல் போதும் ஒருவன் சாவதற்கு
ஒரு சொல் போதும் ஒருவன் வாழ்வதற்கு
இதில் சொல்பவர் யார் என்பதுதான்
சொல்லின் முக்கியம்
இந்தச் சொற்களுக்குப் பின்னால்
ஓர் ஆணும் இருக்கலாம்
ஒரு பெண்ணும் இருக்கலாம்
பெண் என்பவள்  சக்தி என்றால்
ஆண் என்பவன் யார்
ஆண் என்பவன் சக்தி என்றால்
பெண் என்பவள் யார்
எந்தப் புராணத்தைப் பற்றியும்
பேச விரும்பவில்லை
ஒரு சொல் என்பது
ஒருவனை வாழ வைக்குமென்றால்
அந்தச் சொல்லை சொல்வேன்
………………………………………………………………………………….சக்தி ஜோதி 
This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to உற்சாகம்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  2. kaliyuganathan சொல்கிறார்:

    அதுதான் உயிர்ச்சொல் , நன்று .

  3. Balachandran சொல்கிறார்:

    உங்கள் கவிதைஎனக்குமிகவும் பிடிக்கும்
    பாலச்சந்திரன் (canada)

  4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    யாவும் சக்தியாய் வியாபித்திருக்கும் இப் பூவுலகு …
    எங்கு காணினும் அதன் …
    சொல்லும் ஒற்றை சொல்லும் , உயிர்ப்பை ..
    அச் சொல் ஜனிக்கும் நேரம் ..உலகை அன்பு சூழ் கொள்ளும்..
    உற்சாகம் , நம உள்ளத்தில்..

  5. Riyaz சொல்கிறார்:

    அந்த ஒரு சொல் வாழ வைக்கும் சொல்லாகவே இருக்கட்டும் என்றும்..!
    – ரியாஸ், 9677911337

  6. na.jeyabalan சொல்கிறார்:

    ஒரு சொல் என்பது
    ஒருவனை வாழ வைக்குமென்றால்
    அந்தச் சொல்லை சொல்வேன் manitham marithu kondirukkum kaalathil, manitharkalukku thevai

    ………

  7. J Justin Pious சொல்கிறார்:

    The Following words impressed me.Wonderful imagination.Excellent concept. Congrats .Keep on writing to enthuse the tamil community.

    ஒரு சொல் போதும் ஒருவன் சாவதற்கு
    ஒரு சொல் போதும் ஒருவன் வாழ்வதற்கு
    இதில் சொல்பவர் யார் என்பதுதான்
    சொல்லின் முக்கியம்

    ஒரு சொல் என்பது
    ஒருவனை வாழ வைக்குமென்றால்
    அந்தச் சொல்லை சொல்வேன்

பின்னூட்டமொன்றை இடுக