சுமை

நானாக இருப்பது இத்தனை சிரமம்
சுமை என்றால் அத்தனை சுமை
உங்களுக்குப் புரியாது சுமந்தவர்கள் அறிவார்கள்
நுனிமுதல் அடிவரை சுமை
அந்தச் சுமையை சுவை என்பார்கள்
சுமந்தே பார்க்காமல்
சுவைத்துப் பார்ப்பவர்களுக்கு சுமையின்
அருமை தெரியுமா
அத்தனை சிரமம் இத்தனை சுமையை சுமப்பது
ஆடையாக இருக்கலாம்
உறவாக  இருக்கலாம்
காவலாக இருக்கலாம்
எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம்
வெகுசிராமம் இத்தனை சுமையை சுமப்பது
.
நான் யாரென்று கேட்கிறீர்களா
அவ்வாறு கேட்டால்
.
நீங்கள் ஓர் ஆண்
……………………………………………………………………….சக்திஜோதி
This entry was posted in கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to சுமை

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  2. mohanamoorthy சொல்கிறார்:

    mmm. konjam ovarathaan iruku

  3. Mariappan.M சொல்கிறார்:

    அருமை.

பின்னூட்டமொன்றை இடுக