Monthly Archives: ஓகஸ்ட் 2011

ஓவியம்

This gallery contains 1 photo.

    சக்தி ஜோதி   என்னைச் சித்திரமாக வரைந்து கொண்டிருக்கும் உனக்குத் தெரியாது   நான் எத்தனை முறை வரையப் பட்டுள்ளேன் என்பதும்   ஒவ்வொரு முறையும் என் முகம் எவ்வாறு மாறிப்போனது என்பதும்   நான் யார் யாருக்கோ அடையாளமாக இருக்கையில்   உன்  நினைவில் என்னிருப்பை உணர்கின்றேன்   நீயும் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

நிலாக்காலம்

This gallery contains 2 photos.

சக்தி ஜோதி பிரிவின் வலியைத் தாங்குவதும், சகிப்பதும், சமாளிப்பதும் வாழ்வின் ஒரு செயலென உணர்த்திச் செல்கின்றன சில கவிதைகள். முடிந்துபோன கதைகளுக்குள்ளும் உயிர்த்துக் கொண்டிருக்கும் ஜீவனை, அடுத்த காலத்திற்கும் கொண்டு சேர்க்கும் நேசம் சக்திஜோதிக்கு வாய்த்திருப்பது சிறப்பு. மேலும் நினைவுகளைப் பத்திரப்படுத்தி அவற்றை ஒரே நூலிழையில் தொடர்ந்து படரவிடுவதும் அவருக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது.

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

மீண்டெழுதல்

This gallery contains 2 photos.

(நிலம்,நீர்,ஆகாயம்,காற்று,நெருப்பு  ஆகிய அனைத்தும் பெண்ணின் வடிவங்கள்  என்று  கவிஞர் நம்புகின்றார்.ஆனால்  இயற்கையைப் போல ஆற்றல் படைத்த பெண்ணை இச்சமுதாயத்தில்  இயற்கையாய்  இருக்க விடுவதில்லை.) சக்தி ஜோதி எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இயற்கையின் நியதி

This gallery contains 2 photos.

(“அனுமதிக்கப்படுவதும் மறுதலிப்பதும் அனைத்துச் சந்திப்புகளிலும் நிகழ்ந்தேறி விடுகிறது நிகழ்த்தப்படாத சந்திப்புகளில் ஏற்படுகின்ற நினைவின் அத்துமீறல்” கவிதைகளின் சந்திப்பு என்பது ஓர் நிகழ்வு என்பதை மையமாகக் கொண்டு நினைவோடு மறுதலிப்பது என்பதை சக்தி ஜோதி சொற்களில் உறைய வைக்கிறார்.) சக்தி ஜோதி எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

ஐந்து நிலங்களிலிருந்தும் எழுந்துவரும் சொற்கள்

This gallery contains 8 photos.

பிரபஞ்சன் (காதல் பிரபஞ்ச உயிர்ப்பின் ரகசியம். எவரும் கற்றுக் கொடுப்பதால், கற்றுக் கொண்டு வருவதல்ல அது. தானே அறிய இயலாமல், எக்கணம் இது தனக்குள் நிகழ்கிறது எனத் தெரியாமல், சட்டென தலை நீட்டி அக்கணம் பூத்த பூவாய் அது மலர்ந்து மகிழ்விக்கும். சக்தி ஜோதியின் அந்த அக மகிழ்வை, அந்த மனதின் உணர்வுகளை இந்தத் தொகுப்பு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

சமையலறை உலகிலிருந்து

This gallery contains 3 photos.

சக்தி ஜோதி (ஒரு பெண் எவ்வளவு அறிவு பெற்றிருந்த பொழுதும் ‘குடும்பம் ‘என்ற  அமைப்பிற்குள்   செக்குமாடு  போன்று கழல வேண்டிய நிலை உள்ளது . ஆனால்,அவளை எந்த கூட்டிலும் போட்டுப் பூட்டி வைக்கவில்லை  என்ற ஏளனத் தொனி நம்மைச் சிந்திக்க  வைக்கிறது. அந்தக் கிளி (பெண் )வீட்டைச் சுற்றி  வருவதிலேயே  அதன் வாழ்நாள்  கழிந்துவிடுகிறது. )   … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இருத்தலின் அடையாளம்

This gallery contains 4 photos.

கவிஞர் சக்தி ஜோதி பிரிவின் வலியைத் தாங்குவதும், சகிப்பதும், சமாளிப்பதும் வாழ்வின் ஒரு செயலென உணர்த்திச் செல்கின்றன சில கவிதைகள். முடிந்துபோன கதைகளுக்குள்ளும் உயிர்த்துக் கொண்டிருக்கும் ஜீவனை, அடுத்த காலத்திற்கும் கொண்டு சேர்க்கும் நேசம் சக்திஜோதிக்கு வாய்த்திருப்பது சிறப்பு. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கடலை அறிந்தவள்

This gallery contains 2 photos.

சக்தி ஜோதி (ஒரு கவிதையைப் புரிந்தேதான் ஆக வேண்டும் எனச் சொல்ல முடியாது. ஏனெனில் படிப்பவரின் மனதை பொறுத்துத்தான் புரியும்படியாக இருக்க வேண்டும் .கவிதை என்பது படைப்பாளியின் சுதந்திரத் தன்மையோடு தொடர்புடையது. சக்திஜோதியின் கவிதைகளின் நவீனக் கவிதை மொழியைக் குறித்துப் பேசலாம்.இவரின் கவிதைகள் இப்படித்தான் நவீனக் கவிதை மொழி இருக்க வேண்டும் என்ற வரையறைகளைக் கொண்டிருக்கின்றன … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கேள்வியும் பதிலும்

This gallery contains 2 photos.

சக்தி ஜோதி (புரிந்து கொள்ள முடியாது என சக்திஜோதியின் கவிதைகளைத் தள்ளி வைக்க முடியாது ‘வாழ்க்கையில் இருக்கக்கூடிய ஓர் அம்சத்தைத்தான் தம் படைப்புக்களில் எங்கும் சொல்லியிருக்கிறார்.சிறு சிறு நிகழ்வுகளைக் கூடத் தம் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் .) எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

சக்தி ஜோதியின் கவிதைகளின் “வலி+அனுபவம் =கவிதை ”

This gallery contains 1 photo.

பூ.மு.அன்புசிவா, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10 செல் -9842495241 .   வாழ்க்கையின் இயங்குதளத்தின் கடந்து செல்லும்போது ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கின்றது.அதை விட்டு வெளியேறமுடியாமல் அதுவாகவே கருத்தரித்து வெளிவந்து மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புக்களையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக்கொண்டு ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மன … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

இசக்கருவியின் கதை

This gallery contains 1 photo.

சீனமூலம்: பாய் ஜீயி தமிழில்: சக்தி ஜோதி   கவிஞர் பாய் ஜீயி (கி.பி.772 -கி.பி.846) சீனாவில்  ஜ்யூஜியாங் நகரின் அரசு உயர் அதிகாரியான பாய் ஜீயி பணியிறக்கம் செய்யப்பட்ட வேதனையில் தன் நண்பர்களோடு யாண்ட்ஸ் நதிக்கரையில் மது அருந்திக் கொண்டிருந்த போது கேட்ட இனிமையான இசைப்பாடலை இசைத்த பெண்ணுக்காக எழுதிய நீண்ட கவிதை. பிபா … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கடல்

This gallery contains 2 photos.

(காதலும் பிரிவும் அதுசார்ந்த காட்சிகளும் நிரந்தரமாக எனது கவிதைகளின் அடையாளமாகி விட்டன. சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதில் காதல் பெரும் பங்கு வகிக்கிறது’ என்று சக்தி ஜோதி குறிப்பிடுகிறார். ஓர் நபரின் மீதான காதல் மட்டுமல்ல; பிற உறவுகளின் மீதான காதல்,இயற்கை மீதான காதல் என்று இந்தக் கவிதைகள் வெவ்வேறு உருக் கொள்கின்றன.) சக்தி ஜோதி எஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நினைவின் பயணம்

This gallery contains 2 photos.

மொட்டு பூவாய் மலர்கிறது, காய்கிறது, கனிகிறது. இந்த நிகழ்வு எதையும் நம் கண்ணால் காண இயலாது. அதைப் போன்றதுதான் காதல் மலரும் தருணமும். அந்த மென்மையான தருணத்தை தான் நான் பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் சக்திஜோதி. இந்த ‘நிலம் புகும் சொற்கள்’ கவிதைத் தொகுப்பில் அவரே அளித்த முன்னுரை இது.  சக்தி ஜோதி   எஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கவிஞர் சக்திஜோதியின் கவிதைகளின் பெண்ணியம்

This gallery contains 1 photo.

சி.ஆர்.மஞ்சுளா,  தமிழ் விரிவுரையாளர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  படூர்   பழங்காலச் சமுதாயத்தில் ‘குடும்பம்’என்ற அமைப்பு காணப்படவில்லை.அன்று பெண் சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறாள். ஆனால் இடைக்காலத்தில் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்  இன்றும் அதிலிருந்து விடுபட  தனக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். அதற்கான அவளின் முயற்சி கவிதையாகவும்  உருப்பெற்றது. ‘இலக்கிய  வீதி ‘   என்ற அமைப்பு தமிழகத்திலேயே  முதன்முதலாக பெண்  கவிஞர்களின் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விதை

This gallery contains 2 photos.

எதையும் கவிதையாக மாற்றிப் போடக்கூடிய வல்லமை சக்திஜோதியை பிறரிடமிருந்து அன்னியப்படுத்திக் காட்டுகிறது.மொழிவன்மையும்,இயங்கிக் கொண்டே இருக்கக் கூடிய அவஸ்த்தையுமே சக்திஜோதியின் கவிதைகளில் அழகியல் எந்த மிகையுமின்றித் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொள்வதை காண முடிகிறது.  சக்தி ஜோதி

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக