நினைவின் பயணம்

.
.
என் நினைவுகளோடு
இருக்கும்
நீ
என்னுள்  கரைகின்றாய்
 .
காத்திருக்கின்றாய்
 .
அருவியின்  ஓசையாய்
மனம்
அதிர்வது
புரிகிறது  எனக்கு
 .
அது
என் மீதும்
படரத்தான்  செய்கிறது

 .

உன் நினைவில்
வெம்மையில்
உருகுவது  அறியாமல்
 .
நான்
நதியில்
கரைவதைப்  பார்க்கின்றாய்
 .
தூரதேசத்துப்  பறவையாய்  ஆனாலும்
கடலை
விழுங்கி
உனையடைவேன்
 .
ஒரே
ஒரு  சனத்தில்
………………………………………………………………………………………...சக்தி ஜோதி
This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to நினைவின் பயணம்

  1. Naanjilpeter சொல்கிறார்:

    /தூரதேசத்துப்/
    /சனத்தில்/
    இவைகளுக்குப் பதில் தமிழ்ச்சொட்கள் சேர்த்தால், பாடல் இலக்கிய சுவை அடையும். வாழ்த்துக்கள்.

  2. ravi (swiss) சொல்கிறார்:

    நினைவுகளை சுருட்டி வீசுகிறது கவிதை புயலாய் எழுந்து. “நினைவின் பயணம்” என்ற தலைப்புத் தட்டியையும் பிடுங்கி எறிந்து வேகம் கொள்கிறது வார்த்தைகள். இந்தக் கவிதையின் களேபரம் காதல்வயப்படும் மனசுகளுள் புயலாய் இறங்கி தென்றலாய் அமைதியுறும்.

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    நினைவின் பயணம் , அன்பு என்னும் பூக்களால் நிரம்பி வாழ்கின்றது…இருவரிடமும் , அது படர்ந்து கரைகின்றது..அந்த பறவை ஒரு நதி அருகே நின்று கொண்டு , நனைய தொடங்குகின்றது ..ஆனால், இருவரிடைய உள்ள தூரம் அதிகம் என்பது , கடல் என்பதின் வழியாக வெளிபடுகின்றது..ஆனாலும் , அன்பு என்னும் வெம்மை இங்கு கடலை க்ஷ்ண நொடிக்குள் , ஆகர்ஷணம் பண்ணி விட முடியும் என்பது காதலின் ஆழத்தை …கவிதை, சுகமான மலர் பூக்கள் தெளித்த ,பன்னிர் சாரலுடன் தொடரும் காதல் பயணம்..தொடர வாழ்த்துகள்..

  4. mohanamoorthy சொல்கிறார்:

    pazaiya ninaivukaluku azaithuselgirathu ungal kavithai. vinadigal endralum enn vaaliba ninaivugaluku anupiyatharku nandri
    l

  5. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  6. G.Pandiyan சொல்கிறார்:

    what is the meaning of sanam,if it denotes people no meaning for poem,if it is kanam it gives meaning.
    can you pl clarify?

  7. தி. குலசேகர் சொல்கிறார்:

    கடைசி பாரா காதலின் டைம் மெஷினில் ஏற்றிக்கொண்டு காதல் பிரபஞ்சம் நொடியின் நொடிக்குள் அழைத்துச் சென்றுவந்த வண்ணம் இருக்கிறது.
    தி. குலசேகர்

பின்னூட்டமொன்றை இடுக