Monthly Archives: திசெம்பர் 2011

நிலவென்று சொல்லாதே

This gallery contains 1 photo.

நிலவென்று சொல்கிறார்கள் என்னை  நிலவென்று சொல்கிறார்கள் எனக்கு விருப்பமில்லாப் பெயர் அது இரவல் ஒளியில்  ஒளிர்ந்து  கொண்டிருப்பது எப்படி நானாக முடியும்  . நான் எனது  சொற்களால்  ஆனவள் எனது விரல்களிருந்து  கசிவது என் இரத்தம் அது என்  முதுகுத்தண்டில் உற்பத்தியாகி உலகெங்கும்  பரவுவது  . நான் பெண் நிலவல்ல நான் உயிர்ப்புடனிருப்பவள் நிலவல்ல ஆயிரம்  … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நினைவுகளின் வாசனை

This gallery contains 2 photos.

வாசனைகள் அவனை  ஞாபங்கொள்ளச்  செய்கின்றன  . பனித்திவலை  படிந்த பசும்புற்களின் வாசனை அவனுடனிருந்த   அதிகாலையை  நினைவூட்டுகிறது  . உருளும்  பனித்துளிகளில் அவன் கண்கள்  மூடி  இமைக்கும்  காட்சி மனதில்  எழுந்து   அடங்குகிறது  . முந்தைய  முற்பகல்  தினத்தில் ஒருநாள்  அவளது  இருப்பிடம்  வந்திருந்தான் பகலின்  வாசனை தேனீராக மாறியிருந்தது  . பகலிலிருந்து அவனுடைய வாசனையை பிரிக்கவியலாது … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கடிதம்

This gallery contains 1 photo.

ஒரு கடிதத்தை எளிதாக எழுதத் தொடங்கி விடுகிறார்கள் நிறைய கடிதங்களை வாசித்திருக்கிறேன் பிறர் பிறருக்கு எழுதிய கடிதங்களை நண்பர் நண்பருக்கு எழுதிய கடிதங்களை எழுத்தாளர் வாசகருக்கு எழுதிய கடிதங்களை வாசகர் எழுத்தாளருக்கு எழுதிய கடிதங்களை ஒரு தூக்குத் தண்டனை கைதி அவனுடைய தாய்க்கு எழுதிய கடிதங்களையும் வாசித்திருக்கிறேன் மட்டுமல்லாமல் ஒரு கடிதம் எவ்வாறு எழுதப்பட வேண்டுமெனச் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

அதிகாலைச் சூரியன் வருகையில்

This gallery contains 1 photo.

தூக்கத்தை இழப்பதற்கு உன்  வார்த்தைகள் தேவையில்லை  எனக்கு நீ என்னை நினைப்பதைத்  தவிர்த்துவிட்டாலே  போதும் மனத்தின் சஞ்சலத்தை மேலும் அதிகப்படுத்தும் உன் மௌனம் என்னுடல் வெளிறி ஒளியிழந்து  போக உன் வருகை  நிகழாத  என் வாசல் போதும் நம்  மகிழ்வான நாட்களில் சிரிப்பும்  குதூகலக்  கண்ணீரும் இன்று காதலை  உருமாற்றியிருக்கிறது நெடுநாள்  உறக்கம்  இழந்தபின்பு துயிலும்  … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நாட்டியமாடும் நாள்

This gallery contains 1 photo.

வழக்கத்திற்கு மாறாக அதிகாலையில் எழுந்து கொண்டாள் அந்தச் சிறுமி . பள்ளி நாட்களின் சோம்பலிலிருந்து நாட்டியமாடப் போகிற நாள் . குளிர்ந்த நீரில் குளித்து நீள் கூந்தலை உலர்த்தினாள் ஒப்பனைகள் ஒவ்வொன்றாய் நடந்து முடிந்தன நீள் விழிகளை விரித்து மையிட்டுக்கொண்டாள் உதடுகளில் சாயம் பூசிக்கொண்டாள் இறுதியாக நாட்டிய உடையினை அணிந்து கொண்டாள் . தன் முன்னிருக்கும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அறியப்படாத சுவை

This gallery contains 1 photo.

அம்மாவிற்கு நன்றாக சமைக்கத் தெரியும் பரிமாறவும் தெரியும் அம்மாவிற்கு அன்புகாட்டத் தெரியும் அவளுக்கு தெரியாததெல்லாம் வெறுப்பு அவள் சமைத்துப் போட்டுக் கொண்டேயிருப்பாள் அவள் விரல்களில் எதைத்தான் வைத்திருப்பாள் எவருக்கும் தெரியாது . ரசம் வைப்பாள் வித விதமாய் சாம்பார் வாசனையால் தெரு மணக்கும் உணவு வகைகளை சலிக்காமல் செய்வாள் உப்புப் போட அவள் மறந்ததேயில்லை ஒருவேளை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கடந்து செல்லும் காலம்

This gallery contains 1 photo.

இந்தப்  பயணம்தான் எத்தனை  எளிதாய்  துவங்கிவிட்டது  . மலைகள் குன்றுகள் நதிகள் உருப்பெற்று நிலைபெறும்  முன் நிலவெளியில் காற்றெனத் துவங்கியது  . அவளால் அவனது  பொழுதுகள்   முழுமையடைந்திருந்தன  . வெம்மை குளிர்மை  என அவளை  உணர்ந்திருந்தான் .  அப்பொழுதெல்லாம் ஒருபோதும்  முடிந்துவிடாத  பயணத்தை யாவருடனும் துவங்கிவிட  இயலாது  என்பதை அவன்  அறிந்திருக்க  வில்லை  . காற்றைப்  … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்