Monthly Archives: நவம்பர் 2011

அலைச்சல்

This gallery contains 1 photo.

  காற்றின்  ஈரத்தை உணவாக்கி உயிர்த்திருக்கும் மரமென அடி  பெருத்து அசைகின்ற முத்தம்  ஒன்றை நீண்ட  அலகுடைய கனவுப்பறவை கொத்திக் கொண்டு  செல்கிறது பாலைவன  மெங்கும் இன்னும் ஒருமுத்தம்  தேடி.   ………………………………………………………………………………….சக்தி ஜோதி  Advertisements

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வெளிப்பாடு

This gallery contains 1 photo.

உன் நினைவில் தாமரைக்  கொடியெனச் சுகித்திருக்க கதிர்களால்  உயிரூட்டுகின்றாய் உன்னை விட்டகன்றால் பிரிவுத்துயர் என்னை வாட்ட காய்ந்துச்  சாகின்றேன் நெருப்பை  விழுங்கிக்  கொண்டு குளிர்  ஒளியை  வெளியெங்கும் விரிக்கும்  நிலவென பிரிவின்  வாதையைச்  சுமந்து கொண்டு புன்னகையோடு  உற்றோரை எதிர்கொள்கிறேன் உன்னைப் பிரிகையில் பெருகும்  துயரத்திற்குக் குறைந்தது  இல்லை நினைவின் மகிழ்வு. ………………………………………………………………………….சக்தி ஜோதி

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தனிமையின் வெளி

This gallery contains 1 photo.

மௌனத்தால் தன்னை உணர்த்தவியலவில்லை   ப்ரியங்களுக்கு இணையான  வார்த்தைகள்  எதுவும் இல்லையென  மொழி உணர்த்துகிறது   குரலின்  வழி உதிர்ந்த சொல் சற்றுமுன் கண்களில் நீர்த்துளியாக மிதந்து  கொண்டிருந்தது   ஒற்றை  வார்த்தையாய் மௌனமாக  வந்தடைந்த அது   இவ்விடத்தை இச்செயலை இப்பொழுதைக் கடந்திருக்க வேண்டும் நூலகத்தின் அமைதியென மௌனம் இடைவெளிகளில் நிரம்பி  வழிகிறது எல்லாவற்றையும்  … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

இளைப்பாறல்

This gallery contains 1 photo.

விலா  எலும்புகள் பொதிந்துள்ள திரட்சிமிகு  சதைப்பற்று வற்றி மெல்லிய சிறகுகள் இப்போதுதான்  முளைவிடத்  துவங்கியுள்ளன   காற்றறைகள் நிரம்பி பறத்தலுக்கு எத்தனித்துக் கொண்டிருக்கிறது சின்னச்  சிறகுள்ள  எறும்பும் நீள  உடல்  தட்டானும் வண்ணத்துப்  பூச்சிகளும்  இன்னும் பலவகை  பறவைகளும் பறத்தலின்  மாதிரிகளாய் உள்ளன   கூடவே படபடக்கும்  சிறகினைக் கவிழ்த்து விரிந்த  கரம்  தேடியமர்வதையும் கற்றுத்தருகின்றன … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பலன்

This gallery contains 1 photo.

இலைகளால் தன்னை மறைத்தபடி நிற்கின்றது மரம்   வானத்திலிருந்து  பொழியும் மழை நீர் மரத்தை  நனைக்காமல் பார்த்துக்  கொள்கிறது மரத்தின்  இலைகள்   இலைகளின்  மேல் கோபம்கொண்ட வருணன் காற்றின் துணை கொண்டு இலைகளை  அசைக்கின்றான்   பலனேதுமின்றி இலைகளில்  காத்திருக்கும் நீர்த்துளிகள்   மரத்தை  அடைய இயலாமல் சொட்டிச்  சொட்டி நிலத்தை  அடைய   … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

விடுதலை

This gallery contains 1 photo.

    நாம் அருகருகே இருக்கையில்   நம்மிடைச்  சிக்கிக்  கொள்ளும் காற்று விடுபட  இயலாமல்  தவிக்கிறது   உள்ளும் புறமும் நாம் கலந்த  வேளை   பால் சுரக்கும்   உணர்வுகள் கனவின்  வழி கடந்து  செல்கிறது   அதன்  பெருவெளியில். …………………………………………………………………………………சக்தி ஜோதி

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சிவப்பிலான உடை

This gallery contains 2 photos.

      மிகச்சரியான  பருவத்தில்  கிடைத்த இருக்கைக்கென  இவ்வுடையை  தேர்வு  செய்திருந்தாள்  சிவப்பிலான  உடை இனி  அவள்  அடையாளமாகப்போகிறது   அவளது  தொடுதலில் பறவையென  உருமாறிப் பறக்கப்போகிறது மேலும்  சில  உயிர்கள்   அவர்கள் முட்டையில்  சிகப்புச்  சாயமிட்டு  பரிசளிக்கும் கனவைக்  காணத்  தொடங்கவுள்ளனர்   வரவேற்பறை  கம்பளத்தை  கண்ட தளர்ந்த  நடைகளும் தோல்வியில்   … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்