மஞ்சள்

அடர்த்தியான  மஞ்சள்  அதிகாலைப் பொழுதில்
அவளுக்குத்  திருமணம்  நடந்தது
.
மஞ்சள் நிறத்திலான  வாழ்த்துக்களோடும்
கனவிலிருந்த   வார்த்தைகளை
கனவிலிருந்த வாழ்க்கையை
கனவு  தந்த  வேதனைகளை அறிய
தன்  உலகத்தின்  நடைப்பாதையில்  நிற்கிறாள்
.
மஞ்சள்  பூக்கள் ஏந்தி  வரவேற்கிறார்கள்
அவளது  இஷ்ட  தேவதைகள்  அவ்வழியில்
.
வெட்கத்தின்  நிழல்
மெல்ல  அசைந்து
இடம் பார்த்து
வெளியேறுகிறது
.
வெட்கத்தின்  சுவையை அறியுமவள்
அதன் நிறம் மஞ்சளென
ருசி  கொள்கிறாள்
ஆதலால்  நோயுருகிறாள்
வெட்கம்  தணியத்  தொடங்குவதன்
காரணமறியுமுன்னே  சூலடைகிறாள்
*………………………………………………………………………………………….சக்தி ஜோதி
This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to மஞ்சள்

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

 2. T.N.MURALIDHARAN சொல்கிறார்:

  கவிதை நன்று

 3. sudhakar சொல்கிறார்:

  அருமையான கவிதை தோழி …..
  அதுவும் வெட்கத்திற்கு ஒரு நிறம் கொடுத்தீர்களே….
  உண்மையில் அருமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s