நெருப்பு

நான் சந்திக்கும்  பல பெண்களில்  வாழ்வாதாரங்களின்  பிரச்சினைகளைப்  புரிந்துகொள்ள முடிகிற எனக்கு அவர்களது அகஉணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது .இக்கவிதைகள் பெரும்பாலும்   உணர் பூர்வமான  மெல்லிசையின்  அகச்சப்தமாக  கருதுகிறேன் .ஒரு பறவையும்  பூவும்  மழை சார்ந்த  என் கிராமமும்  அதன் நிலமும்   எனக்கும்  என் கவிதைக்கும்  வெளிப்பாட்டு  முறையாக அமைந்துவிட்டது 
சக்தி ஜோதி
காய்ந்த கிளைகளை சேர்த்து
தீயிடுகிறேன்
எரிந்தடங்குகிறது
பூந்தோட்டத்தைக் கடக்கிற பொழுதை
கணக்கிட்டு காத்திருந்த
நேற்றைய நினைவுகள்
அதிகாலை மார்கழியில்
குளிர்காயும்
சிறுமிகளுடன் சேர்ந்து கொள்கிறேன்
காய்ந்த கிளைகள்
தன் பட்டைகள் வெடிக்க எரிகிறது
கூடவே
பற்றியெறிவது
மலராத சில பூக்களும்தான்
……. …….. …… ……. ……. …….. ……… …… ………. …….. …. …… … ……. … …..
எஸ் ஐ சுல்தான்
This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக