ஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)

This gallery contains 2 photos.

சக்திஜோதி ஆண்-பெண் உறவு என்பது பிரிவு காலத்திலேயே மிகுந்த வலிமையுடன் இருக்கிறதை அறியலாம். பிரிவு காலத்தில் தனிமையில் வருந்தும் தலைவி மிகவும் வாடியிருப்பாள். அவள் வாழும் சூழலின் கருப்பொருட்கள் மூலமாகவும் தலைவனின் நினைவில் மேலும் துயர் அடைவாள். அது போலவே பிரிந்து சென்றிருக்கும் தலைவன், தான் செல்லும் வழியின் கருப்பொருட்கள் மூலமாக தலைவியை நினைவு கொள்வான். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள்

This gallery contains 1 photo.

சக்திஜோதி சாலையில் வேகமாகச் செல்லும் பொழுது வேகத்தடையைக் கடக்கும் சிறிய கணமொன்றில்கண்ணில் பட்டு மனதிலிருந்து அகலாமல் பதிந்திருக்கும் ஒரு காட்சி…வத்தலக்குண்டுவிலிருந்து நிலக்கோட்டை செல்லும் வழியில் மல்லனம்பட்டியில் சாலையோர பெட்டிக்கடை ஒன்றில் ஒரு பெண் குழந்தையை தூளி ஆட்டிக்கொண்டிருந்தார். இழுத்து  இழுத்து விடுகிற அவருடைய கைகள் தொட்டிலை ஆட்டியபடியிருக்க, கண்கள் தொலைவாக இன்னும் தொலைவாக  என  எங்கோ … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

உடல் மனம் மொழி -ஒரு பெண் காத்திருக்கிறாள்

This gallery contains 1 photo.

 உடல் மனம் மொழி ஒரு பெண் காத்திருக்கிறாள் சக்தி ஜோதி தமிழர் வாழ்வில் இன்று நாம் காண்கின்ற பல்வகை வாழ்வியல் அம்சங்களை வெளிப்படுத்தும் பாடல்களை சங்க இலக்கியங்களில் காணலாம். ‘அகம் – புறம்’ என்ற இருவகை வாழ்வை, ‘காதல் – வீரம்’ என்கிற அழியாத் தன்மை கொண்ட அடையாளங்களாக தமிழர் தம் மேல் தரித்துக் கொண்டுள்ளனர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்

This gallery contains 1 photo.

ஒரு பெண் வழிப்படுத்துகிறாள் சக்திஜோதி பெண் என்பவள் ஆணின் ஆதார சக்தியாக எவ்விதம் இயங்குகிறாள்?  இப்படி, ஓர் ஆணிடம் கேட்டால் ஒருவிதமான பதிலையும், ஒரு பெண்ணிடம் கேட்டால் வேறு ஒருவிதமான பதிலையும் கண்டடைய முடியும். அநேகம் ஆண்கள் கிண்டலாகவும் சொல்லக்கூடும்… அநேகம் பெண்களுக்கு தாங்கள் எவ்விதம் சமூகத்தின் ஆதாரம் என்பது தெரியாமலிருக்கக்கூடும். பெண்களின் வழிவந்த சமூக … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள்

This gallery contains 1 photo.

ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள் மூகத்தில் பெண் என்பவள் தாய் அல்லது மனைவி என்கிற நிலையில்தான் பெரும்பாலும் அடையாளப்படுத்தப்படுகிறாள். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று பொருளாதார வாழ்வில் பெண்கள், ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம். மற்றது இந்தப் பொருளாதாரச் சார்பு நிலையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள பண்பாட்டுச்சூழல். வீட்டு வேலைக்குப் பெண் எனவும் அந்த வீட்டையும் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்

This gallery contains 1 photo.

ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள் பொதுவாக இந்தக் காலத்தில் காதல் என்பது எவ்விதம் தொடங்குகிறது? கண்டதும் காதல், காணாமல் காதல், தொலைபேசி காதல், அலைபேசி காதல், குறுஞ்செய்தி காதல், மின்னஞ்சல் காதல், முகநூல் காதல் எனத் தொழில்நுட்ப வசதிகளுடன் தொடங்கப்படுகிறது. காதல் என்கிற சொல் அடுத்த தலைமுறையினரிடம் மிக இயல்பாக பரிமாறப்பட்டிருக்கிறது. Love and Hugs என்று … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு பெண் நிகழ்த்துகிறாள்

This gallery contains 6 photos.

சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னை செல்லும் ரயில்பயணத்தில் ஒரு முதிர்ந்த தம்பதியைப் பார்த்தேன். மனைவிக்கு 65 வயதிருக்கலாம்… கணவருக்கு 70 இருக்கலாம். அந்த இரவு நேரப் பயணத்திலும் அவர்கள் இருவருக்கும் களைத்துப் போகாத தெளிந்த முகம். அவர்களது செயலும் பாவனைகளும் மட்டுமல்ல… உடலும் கூட ஒன்று போலவே இருந்தது. நீண்டகால தாம்பத்தியம் அவர்களை அவ்விதமாக ஒன்று போலவே … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு பெண் திடப்படுகிறாள்

This gallery contains 1 photo.

ஒரு பெண் திடப்படுகிறாள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குணநலன்களோடு ஒரு பெண் வளர்வதும் அதனைப் பின்பற்றி நடப்பதும்தான் பெண்ணுக்குப் பாதுகாப்பு என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மீறி நடப்பது என்பது அவர்களுக்கு ஆபத்தையும் துயரையும் தரும் என பெண்களிடமும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.ஒரு பெண் வளரும் பொழுது சமூகம் வரையறுத்துக் கொடுத்திருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றியே வளர்க்கப்படுகிறாள். திருமணம் செய்து கொடுத்து ஒருபெண்ணை … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

இவள்

PicturePicture 001Picture 002 Picture 003

Posted in அனைத்தும் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

மழையான பின்

Screen Shot 2014-03-21 at 6.12.52 pm

Posted in அனைத்தும், கவிதை | Tagged , | 1 பின்னூட்டம்

சொல்லெனும் தானியம்

photo (4)

Posted in அனைத்தும் | 2 பின்னூட்டங்கள்

ஒரு யானை

This gallery contains 1 photo.

எனக்குத் தெரிந்த யானையை வேறு எவருக்கும் தெரியாது நீளமான தும்பிக்கையும் பருத்த கால்களும் சிறிய கண்களும் இருக்கும்தான் என் சிறுவயதில் யானை பார்க்க நின்றிருப்போம் ஆற்று நீரை தும்பிக்கையாய் உறிஞ்சி குளிக்கையில் சிதறி தெறிக்கும் நீர்த்துளிகளில் மனது சிலிர்க்கும் காடெல்லாம் சுற்றி வந்து உணவில் பங்கு கேட்டு கூட்டத்தோடு வீட்டு வாசலில் நிற்கும் ஆற்றினைக் கடக்க … Continue reading

More Galleries | Tagged , , , , | 11 பின்னூட்டங்கள்

தவம்

This gallery contains 1 photo.

இன்று நீ என்னைப் பார்த்தே ஆக வேண்டும் அல்லது நான் இல்லையென்றால் நாம் காத்திருக்க வேண்டும் குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் . காலம் பற்றி உன்னை விட நான் நன்கறிவேன் . காலம் சமரசமற்றது மேலும் அதனிடம் பேரம் பேச இயலாது . நான் தவம் செய்தேன் ஒன்றை அடைவதற்கு இத்தனை காலமாக . நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அறிதலின் சுவை

This gallery contains 1 photo.

மாமரத்தினடியில் நிற்கும் என்னிடம் கொய்யாப் பழம் கேட்கிறவர்களுக்கு நான் நாவல் பழங்களைப் பரிசளிக்கிறேன்   என்னிடம் கொய்யாப்பழம் கேட்பவர்களுக்கு மாம்பழத்தையும் தெரியவில்லை கொய்யாப்பழத்தையும் அறியவில்லை   குறைந்தபட்சம் அவர்களுக்கு நாவல் பழங்களையாவது அறிமுகம் செய்துவைக்கிறேன். ………………………………………………………………………………….சக்தி ஜோதி

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

வேர் பரப்பிய நினைவுகள்

This gallery contains 2 photos.

ஓடும் நதியில் தவறி விழும் ஒற்றையிலை சலனப்படுத்துவதில்லை நீரின் போக்கினை என்றறிந்திருந்த மனம் விம்மிக் கசிகிறது பழுத்த மஞ்சளும் வெளிர் பச்சையும் கலந்து மையம் அகன்று முனை குறுகிய அந்த இலை நதியில் மிதந்து கொண்டிருக்க அவன் கண்களை நினைவூட்டியபடியிருந்தது. விருட்சமென வளரத் துவங்கியது அவனது வேர்கள்   புலனிலகப்படாமல் கிளைத்துப் பரவின நிலமெங்கும் நதியின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்