Tag Archives: சக்திஜோதி கவிதைகள்

ஒரு யானை

This gallery contains 1 photo.

எனக்குத் தெரிந்த யானையை வேறு எவருக்கும் தெரியாது நீளமான தும்பிக்கையும் பருத்த கால்களும் சிறிய கண்களும் இருக்கும்தான் என் சிறுவயதில் யானை பார்க்க நின்றிருப்போம் ஆற்று நீரை தும்பிக்கையாய் உறிஞ்சி குளிக்கையில் சிதறி தெறிக்கும் நீர்த்துளிகளில் மனது சிலிர்க்கும் காடெல்லாம் சுற்றி வந்து உணவில் பங்கு கேட்டு கூட்டத்தோடு வீட்டு வாசலில் நிற்கும் ஆற்றினைக் கடக்க … Continue reading

More Galleries | Tagged , , , , | 11 பின்னூட்டங்கள்

தவம்

This gallery contains 1 photo.

இன்று நீ என்னைப் பார்த்தே ஆக வேண்டும் அல்லது நான் இல்லையென்றால் நாம் காத்திருக்க வேண்டும் குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் . காலம் பற்றி உன்னை விட நான் நன்கறிவேன் . காலம் சமரசமற்றது மேலும் அதனிடம் பேரம் பேச இயலாது . நான் தவம் செய்தேன் ஒன்றை அடைவதற்கு இத்தனை காலமாக . நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அறிதலின் சுவை

This gallery contains 1 photo.

மாமரத்தினடியில் நிற்கும் என்னிடம் கொய்யாப் பழம் கேட்கிறவர்களுக்கு நான் நாவல் பழங்களைப் பரிசளிக்கிறேன்   என்னிடம் கொய்யாப்பழம் கேட்பவர்களுக்கு மாம்பழத்தையும் தெரியவில்லை கொய்யாப்பழத்தையும் அறியவில்லை   குறைந்தபட்சம் அவர்களுக்கு நாவல் பழங்களையாவது அறிமுகம் செய்துவைக்கிறேன். ………………………………………………………………………………….சக்தி ஜோதி

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

வேர் பரப்பிய நினைவுகள்

This gallery contains 2 photos.

ஓடும் நதியில் தவறி விழும் ஒற்றையிலை சலனப்படுத்துவதில்லை நீரின் போக்கினை என்றறிந்திருந்த மனம் விம்மிக் கசிகிறது பழுத்த மஞ்சளும் வெளிர் பச்சையும் கலந்து மையம் அகன்று முனை குறுகிய அந்த இலை நதியில் மிதந்து கொண்டிருக்க அவன் கண்களை நினைவூட்டியபடியிருந்தது. விருட்சமென வளரத் துவங்கியது அவனது வேர்கள்   புலனிலகப்படாமல் கிளைத்துப் பரவின நிலமெங்கும் நதியின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உற்சாகம்

This gallery contains 1 photo.

  ஒருத்திக்கு எப்பொழுது உற்சாகமடைவாள் தெரியாது ஏன் உற்சாகமடைகிறாள் என்பதும் தெரியாது உற்சாகத்திற்கு காரணமானவனுக்கும்கூட காரண காரியமின்றி சில சம்பவங்கள் நடக்கலாம் ஒரு சொல் போதும் ஒருவன் சாவதற்கு ஒரு சொல் போதும் ஒருவன் வாழ்வதற்கு இதில் சொல்பவர் யார் என்பதுதான் சொல்லின் முக்கியம் இந்தச் சொற்களுக்குப் பின்னால் ஓர் ஆணும் இருக்கலாம் ஒரு பெண்ணும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

வாழையடி

This gallery contains 2 photos.

  புஜ்ஜிக் குட்டியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் புஜ்ஜிக் குட்டிக்கு என்னைப் பிடிக்கும் . புஜ்ஜிப் பையனையும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் புஜ்ஜிப் பையனுக்கும் என்னைப் பிடிக்கும் . புஜ்ஜி பையன் அப்பா மாதிரி  இருக்கிறான் புஜ்ஜிக் குட்டிக்கு முயல்களைப் பிடிக்கும் புஜ்ஜிப் பையனுக்கு வண்ண வண்ணக் குருவிகளைப் பிடிக்கும் புஜ்ஜி பையனும் புஜ்ஜிக் குட்டியும் சண்டை போட்டுக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மேகங்கள் உரசிக் கொள்ளும்போது

This gallery contains 1 photo.

நாங்கள் வேறு வேறு திசைகளில் பயணிப்பவர்கள் . சிலபோது  எதிரெதிரே கடந்து செல்வோம் எங்களை நாங்கள் பார்த்தவாறு . அவன் கண்களில் மின்னல் பூக்கும் என் கண்கள் அதைத் தாங்கித் கொள்ளும் . மீண்டும் நாங்கள் எதிர் கொள்கையில் என் கண்களில் மின்னல் பூக்கும் . அவனால் தாங்கவே இயலாது ………………………………………………………………………………………..சக்திஜோதி

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சொற்களைச் சுகித்திருக்கும் இரவு

This gallery contains 3 photos.

……………………………………………………………………………………சக்தி ஜோதி 

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சுமை

This gallery contains 1 photo.

நானாக இருப்பது இத்தனை சிரமம் சுமை என்றால் அத்தனை சுமை உங்களுக்குப் புரியாது சுமந்தவர்கள் அறிவார்கள் நுனிமுதல் அடிவரை சுமை அந்தச் சுமையை சுவை என்பார்கள் சுமந்தே பார்க்காமல் சுவைத்துப் பார்ப்பவர்களுக்கு சுமையின் அருமை தெரியுமா அத்தனை சிரமம் இத்தனை சுமையை சுமப்பது ஆடையாக இருக்கலாம் உறவாக  இருக்கலாம் காவலாக இருக்கலாம் எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மஞ்சள்

This gallery contains 1 photo.

அடர்த்தியான  மஞ்சள்  அதிகாலைப் பொழுதில் அவளுக்குத்  திருமணம்  நடந்தது . மஞ்சள் நிறத்திலான  வாழ்த்துக்களோடும் கனவிலிருந்த   வார்த்தைகளை கனவிலிருந்த வாழ்க்கையை கனவு  தந்த  வேதனைகளை அறிய தன்  உலகத்தின்  நடைப்பாதையில்  நிற்கிறாள் . மஞ்சள்  பூக்கள் ஏந்தி  வரவேற்கிறார்கள் அவளது  இஷ்ட  தேவதைகள்  அவ்வழியில் . வெட்கத்தின்  நிழல் மெல்ல  அசைந்து இடம் பார்த்து வெளியேறுகிறது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

திசைகளுக்கு இடையே

This gallery contains 1 photo.

  எனக்கு ஒரு போதும் தெரியாது திசைகள் என்பது பெண் என்று நிலத்தை பெண் என்பார்கள் கடலை பெண் என்பார்கள் மொழியை பெண் என்பார்கள் நிலத்தையும்கூட பெண் என்பார்கள் ஆனால் ஒருபோதும் அறியமுடியாத திசையை எவ்வாறு சொல்ல முடியும் பெண் என்று   ஒருவன் சொன்னான் திசைகளுக்கு இடையே இருக்குமென நான் ஒரு பெண்ணாய் கேட்டுக்கொண்டிருந்தேன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

நினைவின் பயணம்

This gallery contains 1 photo.

. . என் நினைவுகளோடு இருக்கும் நீ என்னுள்  கரைகின்றாய்  . காத்திருக்கின்றாய்  . அருவியின்  ஓசையாய் மனம் அதிர்வது புரிகிறது  எனக்கு  . அது என் மீதும் படரத்தான்  செய்கிறது  . உன் நினைவில் வெம்மையில் உருகுவது  அறியாமல்  . நான் நதியில் கரைவதைப்  பார்க்கின்றாய்  . தூரதேசத்துப்  பறவையாய்  ஆனாலும் கடலை விழுங்கி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

மீட்சி

This gallery contains 1 photo.

. . மலை முகட்டிலிருந்து வழியும் நீர்  வீழ்ச்சியாய்  . ப்ரியங்களைப் பொழிகிறாய்  . இலக்கின்றிப் பயணிக்கும் காற்றைப்  போல . உன் அன்பு பள்ளத்தாக்கை  அடைகையில்  . கால்களும் கைகளும் செய்வதறியாது  திகைக்க  . முத்தங்கள் ஊற்றெடுக்கும் நிலத்தில்  . கடலெனப் பெருகிய காதல் உன்னை மீட்கிறது . ……………………………………………………………………………………………..சக்தி ஜோதி 

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மிதக்கும் மேகம்

This gallery contains 1 photo.

. . உன்னிடம் பகிர்ந்து   கொள்வதெற்கென மேகத்தை ஏந்திக்  கொண்டிருக்கின்றேன்  . உன்  நினைவின்  போக்கில் நகரும்  அதைக் கட்டுப் படுத்த  இயலாது இம்முறையும்   தவிக்கின்றேன்  . நீர்த்துளிகளைச்    சுமந்திருக்கும் இந்த  மேகத்திற்கு கருணையென்பதே இல்லை  . என்னை  எரித்துக்  கொண்டிருக்கும் உன் மீதான நினைவை அணைக்காது  நகைக்கின்றது  . மின்னலை  உதிர்க்கும் உனது  உரசல்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காதல் வழி

This gallery contains 1 photo.

. . ஆற்றின்  கரைகளுக்கு இடையில் இருக்கின்றேன்  . வெள்ளம்  என் மீது புரண்டோடுகின்றது  . தொண்டை  வறண்டு தாகத்தில்  தவிக்கின்றேன்  . கால்கள் நீரில்  மிதக்கின்றன  . ஆற்றின்  போக்கை எதிர்க்க இயலாமல் மீனாய்  மாறுகின்றேன்  . தப்பிக்க  இயலாது இனி நானும்  . என்னிடம்  இருந்து நீரும் . …………………………………………………………………………………………..சக்தி ஜோதி 

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்