Tag Archives: கடலோடு இசைத்தல்

மஞ்சள்

This gallery contains 1 photo.

அடர்த்தியான  மஞ்சள்  அதிகாலைப் பொழுதில் அவளுக்குத்  திருமணம்  நடந்தது . மஞ்சள் நிறத்திலான  வாழ்த்துக்களோடும் கனவிலிருந்த   வார்த்தைகளை கனவிலிருந்த வாழ்க்கையை கனவு  தந்த  வேதனைகளை அறிய தன்  உலகத்தின்  நடைப்பாதையில்  நிற்கிறாள் . மஞ்சள்  பூக்கள் ஏந்தி  வரவேற்கிறார்கள் அவளது  இஷ்ட  தேவதைகள்  அவ்வழியில் . வெட்கத்தின்  நிழல் மெல்ல  அசைந்து இடம் பார்த்து வெளியேறுகிறது … Continue reading

Advertisements
படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பறவையின் குரல்

This gallery contains 1 photo.

அலைபேசியில்    குரல்களாய் அடைகின்ற பறவைகள் முகம்  திருப்பிப்  பறக்கின்றன தொலைவிடம்   நோக்கி  . ஏதுமறியாத சிட்டுக்குருவியின்   இதயத்தில் படர்ந்திருக்கிறது மின்பதற்றம்  . பேசிக்கொண்டிருந்தோம் பேசிக்கொண்டிருக்கிறோம் பறவைகள் பற்றியும்  . காதலும் வெறுப்பும் பிரிவும் காமமும் கட்டளைகளுமென முகம்கொண்ட வார்த்தைகள் மின் வார்த்தைகளாகின்றன  . ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பின்னும் பலருக்கும்  . வெளியில் மிதந்து  கலைகிறது . … Continue reading

Advertisements
படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தாலாட்டு

This gallery contains 1 photo.

. . என்னை அவஸ்தைக்குள்ளாக்கும் எத்தனையோ காரணங்களில் நீ விடுபட்டதே  இல்லை . ஒருவேளை நாம்  உணராதது மேலும்   உனக்குத்    தெரியாதது . வானத்தைப்  பார்க்கும்பொழுது அது நீலமாக  இருக்கும்  அல்லது கருமையை  அப்பிக்கொண்டிருக்கும் ஜிகினாப்  போல மின்னும்  நட்சத்திரங்கள் உன்  கண்களையோ அல்லது  என் கண்களையோ ஞாபகமூட்டும் . நான் நானாகவே  இருக்க விரும்புகையில் … Continue reading

Advertisements
படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தனிமையின் வெளி

This gallery contains 1 photo.

மௌனத்தால் தன்னை உணர்த்தவியலவில்லை . ப்ரியங்களுக்கு இணையான  வார்த்தைகள்  எதுவும் இல்லையென  மொழி உணர்த்துகிறது . குரலின்  வழி உதிர்ந்த சொல் சற்றுமுன் கண்களில் நீர்த்துளியாக மிதந்து  கொண்டிருந்தது . ஒற்றை  வார்த்தையாய் மௌனமாக  வந்தடைந்த அது . இவ்விடத்தை இச்செயலை இப்பொழுதைக் கடந்திருக்க வேண்டும் . நூலகத்தின் அமைதியென மௌனம் இடைவெளிகளில் நிரம்பி  வழிகிறது … Continue reading

Advertisements
படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காதலின் மௌனம்

This gallery contains 1 photo.

மாலை நேரத்தில் கோபுரத்திற்கு  திரும்பிக்  கொண்டிருந்தன  புறாக்கள்  . மழைத்துளிகளில் மலையினருகே வானவில்லில் சற்று  பிறகு வரும் நிலவொளியில் மற்றும் நட்சத்திரங்களில் உன் ஞாபகங்களை   மீட்க  முயல்கிறேன்  . இரவில் ஒளிரும்  நட்சத்திரங்கள் என் வார்த்தைகளை மட்டுமே உன்னிடம்  சேர்க்க  மினுங்கிக்கொண்டிருக்கின்றன  . என்னிடம்  பேசாமலிருப்பவன் நீ அல்லது என்னிடம்  பேசமுடியாமலிருப்பவன்  . முடிந்த  இசையின்  … Continue reading

Advertisements
படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

சீனப் பெருஞ்சுவர்

This gallery contains 1 photo.

இத்தனை அகலமாக இருக்குமென்பது எனக்குத்  தெரியாது நான் அப்படிப்பட்ட  தேசத்திலிருந்து வந்தவளல்ல இத்தனை பெரிய  சுவர் தேவையா என்பதும் எனக்கு தெரியாது எத்தனை எத்தனை   கற்கள் எத்தனை எத்தனை  உயரம் எத்தனை எத்தனை  உழைப்பு இத்தனைக்கும் மேல்  நடக்கிறார்கள் ஓடுகிறார்கள் வாகனங்களை ஓட்டுகிறார்கள் ஆகாயத்தின்  மீதிருந்து  படமெடுக்கிறார்கள் எதிலும் பதிவாகவில்லை அத்தனை  அத்தனை மரணங்கள் ஒரு … Continue reading

Advertisements
படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கனவுகள் புதைந்த வீடு

This gallery contains 1 photo.

என் மனஅறையில் உன்  நினைவுகள்  மட்டுமே நிரம்பியிருந்த  ஒரு  மாலைப்பொழுது  அது .  அடர்வனம்  சூழ்ந்திருக்கும் அந்த வீட்டிற்குள் நான் அடியெடுத்து வைக்கின்றேன்  . கனத்த வெற்றிடத்தை நிரப்பவியலாத பெரும் சுவர்களும்  ஜன்னல்களும் அற்புத  வேலைபாடுகளினால் நிரம்பியிருக்கின்றன  . கனவுகள் புதைக்கப்பட்ட பிரம்மாண்டமான அவ்வீட்டிற்குள் வழிப்போக்கனைப்  போன்று பார்வையாளனாகிறேன்  . காலங்காலமாக வாழ்வோமென்ற நம்பிக்கையில் கட்டப்பட்ட … Continue reading

Advertisements
படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்