Category Archives: நிலம் புகும் சொற்கள்

நினைவின் பயணம்

This gallery contains 1 photo.

. . என் நினைவுகளோடு இருக்கும் நீ என்னுள்  கரைகின்றாய்  . காத்திருக்கின்றாய்  . அருவியின்  ஓசையாய் மனம் அதிர்வது புரிகிறது  எனக்கு  . அது என் மீதும் படரத்தான்  செய்கிறது  . உன் நினைவில் வெம்மையில் உருகுவது  அறியாமல்  . நான் நதியில் கரைவதைப்  பார்க்கின்றாய்  . தூரதேசத்துப்  பறவையாய்  ஆனாலும் கடலை விழுங்கி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

மீட்சி

This gallery contains 1 photo.

. . மலை முகட்டிலிருந்து வழியும் நீர்  வீழ்ச்சியாய்  . ப்ரியங்களைப் பொழிகிறாய்  . இலக்கின்றிப் பயணிக்கும் காற்றைப்  போல . உன் அன்பு பள்ளத்தாக்கை  அடைகையில்  . கால்களும் கைகளும் செய்வதறியாது  திகைக்க  . முத்தங்கள் ஊற்றெடுக்கும் நிலத்தில்  . கடலெனப் பெருகிய காதல் உன்னை மீட்கிறது . ……………………………………………………………………………………………..சக்தி ஜோதி 

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மிதக்கும் மேகம்

This gallery contains 1 photo.

. . உன்னிடம் பகிர்ந்து   கொள்வதெற்கென மேகத்தை ஏந்திக்  கொண்டிருக்கின்றேன்  . உன்  நினைவின்  போக்கில் நகரும்  அதைக் கட்டுப் படுத்த  இயலாது இம்முறையும்   தவிக்கின்றேன்  . நீர்த்துளிகளைச்    சுமந்திருக்கும் இந்த  மேகத்திற்கு கருணையென்பதே இல்லை  . என்னை  எரித்துக்  கொண்டிருக்கும் உன் மீதான நினைவை அணைக்காது  நகைக்கின்றது  . மின்னலை  உதிர்க்கும் உனது  உரசல்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காதல் வழி

This gallery contains 1 photo.

. . ஆற்றின்  கரைகளுக்கு இடையில் இருக்கின்றேன்  . வெள்ளம்  என் மீது புரண்டோடுகின்றது  . தொண்டை  வறண்டு தாகத்தில்  தவிக்கின்றேன்  . கால்கள் நீரில்  மிதக்கின்றன  . ஆற்றின்  போக்கை எதிர்க்க இயலாமல் மீனாய்  மாறுகின்றேன்  . தப்பிக்க  இயலாது இனி நானும்  . என்னிடம்  இருந்து நீரும் . …………………………………………………………………………………………..சக்தி ஜோதி 

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மலர்தல்

This gallery contains 1 photo.

. . நிலாவென நான் ஒளிர்வதாகக்  கூறுகிறாய் சூரியனாய்  இருந்து  கொண்டு  . என் நினைவின்   அடுக்குகளில் எத்தனையோ  கதைகள் பொதிந்துள்ளன    நிலா இரவுகள் அன்று  இருந்தது  போல் இல்லை  . பால்யம் கடந்த  இந்த  இரவுகளில் . பாட்டிகளின் மரபில் வந்து போன  இளவரசனாய்  . ஏழு  குதிரைகளில் நீ வருகையில்  . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஒற்றைச் சொல்

This gallery contains 1 photo.

கேள்விகளுக்கான பதில் ஒன்றுமில்லையென ஒலித்துச் சிதறுகின்றன  எப்பொழுதும்  . அது மன  வெளியின் அழுத்தங்களற்று மிதந்து  நகர்கின்றது  . அன்பு நட்பு காதல் காமம் அனைத்தும்  ஒற்றைச்  சொல்லில் வெளிப்பட இயலாது மௌனத்தில் உறைந்து  கிடக்கின்றது .   ……………………………………………………………………………………….சக்தி ஜோதி

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பிணி தீர்த்தல்

This gallery contains 1 photo.

. . அந்த மழைக்கால கரிய இரவில்  . மின்னல் சிமிட்டிய  கணத்தில் என் கண்களில் வந்தமர்ந்தாய்  . உன்னால் சிவந்தன  கண்கள் என்பதறியாத என் தாய் செய்யும் மருத்துவம்  கண்டு நகைக்காது  . உன்னால் வாடிக் கொண்டிருக்கும் என்னருகில்  வந்தால்  . உன் மார்பில் முகம் புதைத்து கைகளில்  கட்டுண்டு  . தீர்த்துக் கொள்ளப் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

காதல் துளிகள்

This gallery contains 1 photo.

. , அன்பின்  சமுத்திரமென நான்  நினைத்தது துளி  நீரென மாறிவிட்டது  . வெறுப்பின்  மேகங்கள் குளிர்ந்து அன்பின்  திவலைகள் என்னை நனைக்கும்  போது  . ஆச்சர்யத்தின்  படகில்  தத்தளித்தபடி ஒரு துளியும்  சிதறி  விடாமல் சேகரிக்கின்றேன் கடலை  நினைத்தபடி  . கடலாய்  மாறி அலையாய்  அலைகையில் துளி  நீராய் என் கண்களில் துளிர்க்கிறது உன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சந்திப்பு

This gallery contains 1 photo.

.. அனுமதிக்கப்படுவதும் மறுதலிப்பதும் அனைத்துச்  சந்திப்புகளிலும் நிகழ்ந்தேறி   விடுகின்றது நிகழ்த்தப்படாத  சந்திப்புகளில் ஏற்படுகின்ற நினைவின்  அத்துமீறல்  . காற்றாய் வரைமுறைக்குட்படாதிருப்பினும் வழக்கமான வார்த்தை விளையாடலின் அவசியங்களற்று  அமைந்து   விடுகின்றது எதிர்பாராமல் அமைந்து விடுகின்ற சந்திப்புகள் சொற்களைத் தேடும்  இடைவெளியில் உறைந்து  விடுகிறது அக்கணம் . …………………………………………………………………………….சக்தி ஜோதி 

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அன்பின் முடிவிலி

This gallery contains 1 photo.

. நமதன்பின் தழுவல்களை எண்ணத் துவங்குகிறேன் . அவை முடிவற்ற  எண்களால் நிறைந்து  வழிகிறது . முதல் முத்தமென நீளும் நம்  காதல் முடிவற்ற  எண்களைக் கண்டு மருள்கிறது . இடப்படாத  முத்தங்களால் உயிர்த்திருக்கிறது இந்த உடல் .  எண்ணிக்கையில் அடங்காக் கனவுகளோடு …………………………………………………………………………..சக்தி ஜோதி 

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாணம்

This gallery contains 1 photo.

அந்திக்  கருக்கலில் சுனை  நீரென ஊற்றெடுக்கின்றது உன் மீதான  காதல் .  என்னை உனக்களிக்கும் நாளை  நோக்கி நகர்ந்து  கொண்டிருக்கின்றேன்  . நம் மனங்கள் ஒன்றெனக் கலந்த  நாளிலிலிருந்து சேகரமாகிக்  கொண்டிருக்கும் முத்தங்களை  எண்ணிக் கொண்டிருக்கிறது .  என்னுடன் தனித்திருக்கும்  நாணம்  அச்சத்தோடு . …………………………………………………………………………………..சக்தி ஜோதி

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

உயிர்த்திருத்தல்

This gallery contains 1 photo.

உன் வெப்பத்தால் நிறைந்த  கருவறை இருளால்  சூழ்ந்திருக்கிறது .  உயிர்த்தெழுந்த  என்னை அது உயிர்ப்பிக்கிறது  . நெருப்பும் நெருப்பும் அணைகையில் அணையும் நெருப்பில்  உயிர்க்கிறேன்  . உன்னை உயிர்ப்பிக்கிறேன் .   …………………………………………………………………..சக்தி ஜோதி

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தவிப்பு

This gallery contains 1 photo.

நீ வேட்கை  மிகுந்து என் மீது  கவியும் போது நிலவின்  ஒளியெனச்   சுடர்கின்றேன்   கலவிக்குப்  பின் உணர்கின்ற வெறுமையில் விலகிப்  பிரிகின்ற  உனதுடல் அன்பு  நீங்கிய உயிரெனக்  கிடக்கின்றது   பொங்கிப்  பெருகும்  வியர்வையில் நனைந்தபடி குளிர்ந்த என் உடல் கொதிக்கத்  தொடங்குகையில்   கிழக்கில் கடலிலிருந்து எழுந்து  படர்கிறது நிலமெங்கும் மஞ்சள்  வெயில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மரணத்தின் ருசி

This gallery contains 1 photo.

  இலையுதிர்  காலத்து இலைகளை   நிலமெங்கும்  உதிர்க்கின்ற மரத்தில்   வசந்தகாலத்  தளிராய் துளிர்க்கின்ற முத்தமொன்று   ருசித்துக்  கொண்டிருக்கிறது காமத்தின்  வழி   மரணத்தை. …………………………………………………………………………………………………………சக்தி ஜோதி .

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திசை மானி

This gallery contains 1 photo.

. . எத்தனை  வகையில் தான் வெளிப்படுத்துவாய் உனதன்பை  . என் கவிதைகளில் ஒளிரும் உன் வார்த்தைகள் என்னை ஒளியூட்டிக்  கொண்டிருக்கின்றன  . அது உனது அன்பைப்  போலவே இருக்கின்றது  . எனக்குள் இருக்கும் உன்னை இந்த  கவிதைகளைத்  தவிர யார் அறிவார் . எத்தனை திசைகள் இருப்பினும் இந்த காந்தம் உன்னை நோக்கியே இருப்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்