Category Archives: காற்றில் மிதக்கும் நீலம்

தவம்

This gallery contains 1 photo.

இன்று நீ என்னைப் பார்த்தே ஆக வேண்டும் அல்லது நான் இல்லையென்றால் நாம் காத்திருக்க வேண்டும் குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் . காலம் பற்றி உன்னை விட நான் நன்கறிவேன் . காலம் சமரசமற்றது மேலும் அதனிடம் பேரம் பேச இயலாது . நான் தவம் செய்தேன் ஒன்றை அடைவதற்கு இத்தனை காலமாக . நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

வேர் பரப்பிய நினைவுகள்

This gallery contains 2 photos.

ஓடும் நதியில் தவறி விழும் ஒற்றையிலை சலனப்படுத்துவதில்லை நீரின் போக்கினை என்றறிந்திருந்த மனம் விம்மிக் கசிகிறது பழுத்த மஞ்சளும் வெளிர் பச்சையும் கலந்து மையம் அகன்று முனை குறுகிய அந்த இலை நதியில் மிதந்து கொண்டிருக்க அவன் கண்களை நினைவூட்டியபடியிருந்தது. விருட்சமென வளரத் துவங்கியது அவனது வேர்கள்   புலனிலகப்படாமல் கிளைத்துப் பரவின நிலமெங்கும் நதியின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உற்சாகம்

This gallery contains 1 photo.

  ஒருத்திக்கு எப்பொழுது உற்சாகமடைவாள் தெரியாது ஏன் உற்சாகமடைகிறாள் என்பதும் தெரியாது உற்சாகத்திற்கு காரணமானவனுக்கும்கூட காரண காரியமின்றி சில சம்பவங்கள் நடக்கலாம் ஒரு சொல் போதும் ஒருவன் சாவதற்கு ஒரு சொல் போதும் ஒருவன் வாழ்வதற்கு இதில் சொல்பவர் யார் என்பதுதான் சொல்லின் முக்கியம் இந்தச் சொற்களுக்குப் பின்னால் ஓர் ஆணும் இருக்கலாம் ஒரு பெண்ணும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

காற்றில் மிதக்கும் நீலம்

This gallery contains 1 photo.

காற்றில் மிதக்கும் நீலம் – சக்திஜோதி வாழை குமார; ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே மெய்யாகவே விடுதலையாவீர;கள்… என்று யோவான்: எட்டு: முப்பத்தாறாவது வசனத்தில் வரும். ஆம்… நாம் வன்மத்திடமிருந்தும் துரோகத்திடமிருந்தும் சிறைபட்டு உழன்ற போது. அதிலிருந்து விடுதலை பெற குமாரனை சிருஷ்டித்தோம். அந்தக் குமாரனும் தன்னை சிருஷ்டித்த எல்லோரையும் கண்டுணர;ந்தான். ஆனாலும் அக்குமாரனிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திசைகளுக்கு இடையே

This gallery contains 1 photo.

  எனக்கு ஒரு போதும் தெரியாது திசைகள் என்பது பெண் என்று நிலத்தை பெண் என்பார்கள் கடலை பெண் என்பார்கள் மொழியை பெண் என்பார்கள் நிலத்தையும்கூட பெண் என்பார்கள் ஆனால் ஒருபோதும் அறியமுடியாத திசையை எவ்வாறு சொல்ல முடியும் பெண் என்று   ஒருவன் சொன்னான் திசைகளுக்கு இடையே இருக்குமென நான் ஒரு பெண்ணாய் கேட்டுக்கொண்டிருந்தேன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

காற்றில் மிதக்கும் நீலம்

This gallery contains 1 photo.

. . ஆதி நாள் துவங்கி அந்த நிலம் வெப்பத்தினால் கனன்று கொண்டிருந்தது . வெண்மையால் தும்பைப் பூக்கள் மஞ்சளாய் ஆவாரம் பூக்கள் . காட்டுச் சுண்டைகாயின் மகரந்தம் மினுங்கும் பூக்கள் என செழித்திருந்த அந்த தரிசு நிலம் எங்கும் துளசியின் வாசம் பரவியிருக்க . ஏர் பிடித்து உழப்படாமலும் பண்படுத்தி விவசாயம் செய்யப்படாமலும் தனித்திருந்தது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறவையின் விருட்சம்

This gallery contains 1 photo.

சிறகுகளின் அசைவில் உருவாகும் ஒளியால் என்னை அழைக்கிறாய் . உனக்கான சிறகசைப்பு அது என்பது நீ அறிந்ததே . உயிர் கசிந்து பேரார்வத்துடன் விண்ணில் பறக்கும் தருணம் விருட்சங்களில் பூக்கள் மலர்கிறதை நீ அறிந்து தானிருப்பாயா இல்லையேல் நான் ஒரு பறவை என்பதையாவது . என் சிறகுகளின் அசைப்பில் உருவாகும் ஒளியால் நீ திரும்பத் திரும்ப … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

காவியா

This gallery contains 1 photo.

. ஒரு முல்லை மொட்டுப் போல அவளிருக்கிறாள் அவள் கருப்பு முல்லை கருப்பு முல்லை எப்பொழுது மலருமென்று நீங்கள் கவனித்துக் கொண்டிருப்பதுபோலவே நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஒரு மொட்டு பூக்கும் முன் சிரிக்குமா சிரிக்கும்போது கன்னக்குழி விழுமா மேலும் அந்த மொட்டிற்கு கண்கள் இருக்குமா  . அந்தக் கண்களும் கருப்பாகவே இருக்க எவ்வாறு ஒரு மொட்டு மலருவதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நிலா முற்றம்

This gallery contains 1 photo.

  முற்றம் இல்லாத வீட்டில் ஒருபோதும் நிலவின் வரவு நிகழ்வதேயில்லை . முற்றத்தைத் தேடிச் செல்கிறேன் வீதிதோறும் அலைகிறேன் . சின்ன ஜன்னலின் இடையே வான்வெளியில் ஒளிரும் நிலவை எனக்குப் பிடிப்பதேயில்லை . வீடுகளின் தாழ்வாரத்தில் கிணற்றடியில் நீள் வீதியில் என எதன் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் ஒளியை பரப்பிக் கொண்டேயிருக்கிறது நிலவு . ஒரு முற்றம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

புத்தக வெளியீடு- காற்றில் மிதக்கும் நீலம்

This gallery contains 18 photos.

சென்னை புத்தக கண்காட்சியில் உயிர் எழுத்து பதிப்பகம் ஸ்டாலில் கவிஞர் சக்தி ஜோதியின் “காற்றில் மிதக்கும் நீலம்” கவிதைத் தொகுப்பு வண்ணதாசனால் வெளியிடப் பட்டபோது எடுத்த புகைப்படங்கள்

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

இருவேறு வாசனைகளுள்ள மலர்

This gallery contains 2 photos.

காற்றில் மிதந்து வருகிற ஒரு முத்தத்தை எதிர்கொள்வது சாத்தியம் ஒரு பெண்ணுக்கும் ஓர் ஆணுக்கும் . செல்பேசிகள் ஒரே கணத்தில் ஒரு கோடி இணைப்புகளை செவிகளுக்கு எடுத்துச் செல்கின்றன பெண் மனங்களைப் போல . ஒரு பெண் எவ்வாறு ஒரு முத்தத்தை எதிர்கொள்வாள் அது முத்தத்தை எதிர்கொள்ளும் வெட்கத்தைப் பொறுத்ததே . காதல் அறிந்ததில்லை ஒரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காதல் விதி

This gallery contains 1 photo.

எத்தனை முறைதான்  இந்தக் குளிர்நிலவில் நனைவது மேலும் இந்தக் குளிர்காற்று ஏன் என்னைத் துன்புறுத்துகிறது  . நான் உன்னால் நிலவாகக் குளிர்ந்து கொண்டிருக்க என்னால் நீ ஏன் தகித்துக் கொண்டிருக்கிறாய் எதிர் எதிர் திசைகளில் பயணிக்கும் நாம் எவ்வாறு ஒருவரை ஒருவர் ஆகர்ஷிக்கிறோம்  . சுழன்று கொண்டிருக்கும் இந்தப் பூமி விதிகளால் நிரம்பியது . எந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

காத்திருப்பு

This gallery contains 2 photos.

நீண்ட காலம் கழித்து இப்போதுதான்  வீடு திரும்பியிருக்கிறான் அவன் அறையில் படிப்பதற்காக காத்திருக்கும் புத்தகங்கள் எழுதும் பேனா மேஜை நாற்காலி தூசி படிந்திருக்க இவற்றுடன் என்னுடைய கடிதமும் . அவன் என் கடிதத்தைப் படிக்கையில் பயணத்தில் தவற விட்டக் காட்சியைக் காண்பது போல அதிகாலை பூத்த முதல் மலரைக் காண்பதுபோல அல்லது நேர்ந்த வன்முறையை ஞாபகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கடிதம்

This gallery contains 1 photo.

ஒரு கடிதத்தை எளிதாக எழுதத் தொடங்கி விடுகிறார்கள் நிறைய கடிதங்களை வாசித்திருக்கிறேன் பிறர் பிறருக்கு எழுதிய கடிதங்களை நண்பர் நண்பருக்கு எழுதிய கடிதங்களை எழுத்தாளர் வாசகருக்கு எழுதிய கடிதங்களை வாசகர் எழுத்தாளருக்கு எழுதிய கடிதங்களை ஒரு தூக்குத் தண்டனை கைதி அவனுடைய தாய்க்கு எழுதிய கடிதங்களையும் வாசித்திருக்கிறேன் மட்டுமல்லாமல் ஒரு கடிதம் எவ்வாறு எழுதப்பட வேண்டுமெனச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நாட்டியமாடும் நாள்

This gallery contains 1 photo.

வழக்கத்திற்கு மாறாக அதிகாலையில் எழுந்து கொண்டாள் அந்தச் சிறுமி . பள்ளி நாட்களின் சோம்பலிலிருந்து நாட்டியமாடப் போகிற நாள் . குளிர்ந்த நீரில் குளித்து நீள் கூந்தலை உலர்த்தினாள் ஒப்பனைகள் ஒவ்வொன்றாய் நடந்து முடிந்தன நீள் விழிகளை விரித்து மையிட்டுக்கொண்டாள் உதடுகளில் சாயம் பூசிக்கொண்டாள் இறுதியாக நாட்டிய உடையினை அணிந்து கொண்டாள் . தன் முன்னிருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்