Category Archives: கடலோடு இசைத்தல்

மஞ்சள்

This gallery contains 1 photo.

அடர்த்தியான  மஞ்சள்  அதிகாலைப் பொழுதில் அவளுக்குத்  திருமணம்  நடந்தது . மஞ்சள் நிறத்திலான  வாழ்த்துக்களோடும் கனவிலிருந்த   வார்த்தைகளை கனவிலிருந்த வாழ்க்கையை கனவு  தந்த  வேதனைகளை அறிய தன்  உலகத்தின்  நடைப்பாதையில்  நிற்கிறாள் . மஞ்சள்  பூக்கள் ஏந்தி  வரவேற்கிறார்கள் அவளது  இஷ்ட  தேவதைகள்  அவ்வழியில் . வெட்கத்தின்  நிழல் மெல்ல  அசைந்து இடம் பார்த்து வெளியேறுகிறது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பறவையின் குரல்

This gallery contains 1 photo.

அலைபேசியில்    குரல்களாய் அடைகின்ற பறவைகள் முகம்  திருப்பிப்  பறக்கின்றன தொலைவிடம்   நோக்கி  . ஏதுமறியாத சிட்டுக்குருவியின்   இதயத்தில் படர்ந்திருக்கிறது மின்பதற்றம்  . பேசிக்கொண்டிருந்தோம் பேசிக்கொண்டிருக்கிறோம் பறவைகள் பற்றியும்  . காதலும் வெறுப்பும் பிரிவும் காமமும் கட்டளைகளுமென முகம்கொண்ட வார்த்தைகள் மின் வார்த்தைகளாகின்றன  . ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பின்னும் பலருக்கும்  . வெளியில் மிதந்து  கலைகிறது . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தாலாட்டு

This gallery contains 1 photo.

. . என்னை அவஸ்தைக்குள்ளாக்கும் எத்தனையோ காரணங்களில் நீ விடுபட்டதே  இல்லை . ஒருவேளை நாம்  உணராதது மேலும்   உனக்குத்    தெரியாதது . வானத்தைப்  பார்க்கும்பொழுது அது நீலமாக  இருக்கும்  அல்லது கருமையை  அப்பிக்கொண்டிருக்கும் ஜிகினாப்  போல மின்னும்  நட்சத்திரங்கள் உன்  கண்களையோ அல்லது  என் கண்களையோ ஞாபகமூட்டும் . நான் நானாகவே  இருக்க விரும்புகையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தனிமையின் வெளி

This gallery contains 1 photo.

மௌனத்தால் தன்னை உணர்த்தவியலவில்லை . ப்ரியங்களுக்கு இணையான  வார்த்தைகள்  எதுவும் இல்லையென  மொழி உணர்த்துகிறது . குரலின்  வழி உதிர்ந்த சொல் சற்றுமுன் கண்களில் நீர்த்துளியாக மிதந்து  கொண்டிருந்தது . ஒற்றை  வார்த்தையாய் மௌனமாக  வந்தடைந்த அது . இவ்விடத்தை இச்செயலை இப்பொழுதைக் கடந்திருக்க வேண்டும் . நூலகத்தின் அமைதியென மௌனம் இடைவெளிகளில் நிரம்பி  வழிகிறது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காதலின் மௌனம்

This gallery contains 1 photo.

மாலை நேரத்தில் கோபுரத்திற்கு  திரும்பிக்  கொண்டிருந்தன  புறாக்கள்  . மழைத்துளிகளில் மலையினருகே வானவில்லில் சற்று  பிறகு வரும் நிலவொளியில் மற்றும் நட்சத்திரங்களில் உன் ஞாபகங்களை   மீட்க  முயல்கிறேன்  . இரவில் ஒளிரும்  நட்சத்திரங்கள் என் வார்த்தைகளை மட்டுமே உன்னிடம்  சேர்க்க  மினுங்கிக்கொண்டிருக்கின்றன  . என்னிடம்  பேசாமலிருப்பவன் நீ அல்லது என்னிடம்  பேசமுடியாமலிருப்பவன்  . முடிந்த  இசையின்  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

சீனப் பெருஞ்சுவர்

This gallery contains 1 photo.

இத்தனை அகலமாக இருக்குமென்பது எனக்குத்  தெரியாது நான் அப்படிப்பட்ட  தேசத்திலிருந்து வந்தவளல்ல இத்தனை பெரிய  சுவர் தேவையா என்பதும் எனக்கு தெரியாது எத்தனை எத்தனை   கற்கள் எத்தனை எத்தனை  உயரம் எத்தனை எத்தனை  உழைப்பு இத்தனைக்கும் மேல்  நடக்கிறார்கள் ஓடுகிறார்கள் வாகனங்களை ஓட்டுகிறார்கள் ஆகாயத்தின்  மீதிருந்து  படமெடுக்கிறார்கள் எதிலும் பதிவாகவில்லை அத்தனை  அத்தனை மரணங்கள் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கனவுகள் புதைந்த வீடு

This gallery contains 1 photo.

என் மனஅறையில் உன்  நினைவுகள்  மட்டுமே நிரம்பியிருந்த  ஒரு  மாலைப்பொழுது  அது .  அடர்வனம்  சூழ்ந்திருக்கும் அந்த வீட்டிற்குள் நான் அடியெடுத்து வைக்கின்றேன்  . கனத்த வெற்றிடத்தை நிரப்பவியலாத பெரும் சுவர்களும்  ஜன்னல்களும் அற்புத  வேலைபாடுகளினால் நிரம்பியிருக்கின்றன  . கனவுகள் புதைக்கப்பட்ட பிரம்மாண்டமான அவ்வீட்டிற்குள் வழிப்போக்கனைப்  போன்று பார்வையாளனாகிறேன்  . காலங்காலமாக வாழ்வோமென்ற நம்பிக்கையில் கட்டப்பட்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மழைப் பொழுது

This gallery contains 1 photo.

அந்த மாலையில் அடர்மழை பொழிந்தது என் மகளோடு  மகளாய் மழையில் நனைந்தேன்  . வானமோ மின்னல்களை உதிர்த்தவாறே மழையைப் பொழிந்த  வண்ணம்  இருந்து எங்கள்  உடைகள் நனைந்தன இரத்தம்  வெதுவெதுப்பாய் உடலெங்கும்  பரவியது நான்  மகளாயும் அவன்  நானாயும் மாறி குதித்துக் கொண்டிருந்தோம் எங்களது   முற்றத்தில்   . புற்கள் செடிகள்  மரங்கள் இன்னும் வீடு  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நிலவென்று சொல்லாதே

This gallery contains 1 photo.

நிலவென்று சொல்கிறார்கள் என்னை  நிலவென்று சொல்கிறார்கள் எனக்கு விருப்பமில்லாப் பெயர் அது இரவல் ஒளியில்  ஒளிர்ந்து  கொண்டிருப்பது எப்படி நானாக முடியும்  . நான் எனது  சொற்களால்  ஆனவள் எனது விரல்களிருந்து  கசிவது என் இரத்தம் அது என்  முதுகுத்தண்டில் உற்பத்தியாகி உலகெங்கும்  பரவுவது  . நான் பெண் நிலவல்ல நான் உயிர்ப்புடனிருப்பவள் நிலவல்ல ஆயிரம்  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உறைந்த காலம்

This gallery contains 1 photo.

ஒன்றின் மேல் ஒன்றாக இல்லாதபடிக்கு பழமையின் கற்கள் எங்கும் சிதறியிருந்தன வெண்மேகம் தரையிறங்கினாற் போல கொட்டிக்கிடந்த  கற்குவியல்களில் கட்டியெழுப்பியதும் இடித்துச்  சிதைத்ததுமான  கதைகள் குவிந்திருந்தன சிதையாமல்  தப்பியிருந்த உயர்ந்த  சுவரைக்காண சென்று கொண்டேயிருந்தனர் சுவர்  இடுக்குகள் புறாக்களின்  வாசஸ்தலமாய்  மாறியிருக்க புறாக்கள் காண்போரின்  முகங்களில் அன்பையும்  சமாதானத்தையும் தேடிக் கொண்டேயிருந்த ஆயிரமாயிரமாண்டுகளாய்  காற்றில்  கரைந்திருந்த குருதியின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

விதை

This gallery contains 1 photo.

கையிலிருக்கும் சில விதைகளைத் தருகிறேன் உங்களுடைய நிலத்தின் இடுவதற்காக   இன்று மேலும் இரண்டு மரங்களுக்கு   நீர் ஊற்றியிருக்கிறேன்   யாரோ  விதைத்து வளர்ந்த  மரத்தில் வயதானவர்கள்  ஓய்வெடுத்துச்  செல்கின்றனர்   காய்த்துக் குலுங்கும் மரத்தினடியில் சிறுவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர்   என்னிடம் மேலும் சில விதைகள்  இருக்கின்றன  என்னிடம் மேலும் சில பறவைகள்  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள்

This gallery contains 1 photo.

  . வண்ணத்துப் பூச்சிகள்தான் இந்த பூமிக்கு நிறங்களைத் தருவதாக நம்பிக்  கொண்டிருக்கிறாள்  ஒரு  சிறுமி . இறந்த வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளைப்  பார்த்தாள் பின்பு வண்ணத்துப் பூச்சிகளற்ற வீட்டுத்  தோட்டத்தைக் கற்பனைசெய்யத்  துவங்கினாள்  . தனது சிறிய இறகுகளில் வண்ணங்களாய் இன்பத்தைச்  சுமந்து  திரியும்  அவைகளை ஒரு நாளும் சந்திக்காமல்  இருந்ததில்லை  அவள்  . இதுவரையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வானத்திலிருந்து உதிரும் நட்சத்திரங்கள்

This gallery contains 1 photo.

  வானத்திலிருந்து உதிர்ந்து கொண்டேயிருந்தாய் நட்சத்திரங்களென  . ஒவ்வொன்றாய் சேகரித்து  சேகரித்து கோத்துக் கொண்டேயிருந்தேன்  . அது காதலாக மலர்ந்தது  . உனது  கண்கள் உனது  உடல் உனது  தோற்றம் எதையும்  அறியாது மாலையாக  உருமாறிக்கொண்டிருந்தது   . மௌனம்போல் வானில் ஒளிரும்  நட்சத்திரங்கள் மாலையின்  மணிகளாக சேகரமாகிக் கொண்டிருந்தன ஒவ்வொரு இரவிலும்  . உதிரும் எரிநட்சத்திரங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆசீர்வதிக்கப்பட்ட மாலைப்பொழுது

This gallery contains 1 photo.

ஒற்றைக்  குயிலோசையோடு அந்த  மாலை   முடிவடைகிறது . குயில் வந்தடைகிறது தனித்த  மரத்தின்  கிளையொன்றில் . சற்றுமுன் முத்தத்தைப் பற்றியும் நீ சொல்லிவிட்டுச்  சென்றிருப்பது நினைவிற்கு  வருகிறது . உன் பயணம்  முழுக்க இனி குயிலோசையை  அனுப்பவும் பின் தொடரவும்  செய்யும் வழிமுறை  என்னிடம்  இல்லை . குயிலோசையையும் பெறப்பட்ட  முதல்  முத்தத்தின் சப்தத்தையும் சில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பணிப் போர்வைகள்

This gallery contains 1 photo.

பணிப் போர்வைகள் உன்னைப்  போர்த்திக்  கொண்டிருக்கின்றன என்ற உன்  நிலையறிந்தும் என்னைக்  கடக்கும் வெயில் நிழலும் சிதறிய  நீரில்  கலைந்த  ஓவியமும் சிதைந்த  சுவரின்  மாய  உருவங்களும் உன்னை உருவாக்கிக்  கொண்டிருக்கின்றன ஆயிரம்  மாயக்கரங்  கொண்டணைக்கும் வெளிச்சம் என்னை ஒளிச்சிற்பமாக்குகிறது பனிக்குளிர்   இருளோ நான்  கடக்கும்  பருவங்களென வெறுமையில் விழ்த்துகிறது எப்போதாவது உன்னைப் பார்த்து  விடுவேனென்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்