Category Archives: எனக்கான ஆகாயம்

காற்றில் அசையும் கனவு

This gallery contains 1 photo.

செங்காந்தள் மலர்ச்செடியினருகே சிவப்பு நிறப் பூக்களின்  வசீகரத்தை அன்பின்  வரிகளாக்கி கடிதம்  சுமந்து  நிற்கிறான்  . அவனது தாமரை  விழிகள் இரண்டும் அவளை  அருகாமைக்கு  அழைக்கின்றன  . புங்கை  மரத்தின் கிளைகள்  அசைய கொலுசுகள்  சப்தமிட  . ஊஞ்சலாடுபவளின்  கண்கள் மானின்  மிரட்சியாய்  உருள்கின்றன .  இருவரும் ஊஞ்சலாட்டத்தை பகல் கனவாய்  காணுகின்றனர்  . இரவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நீலநிறக் காதல்

This gallery contains 1 photo.

அந்த நிழற்குடை பிரிவின்  அடையாளமாக பின்பொரு  நாளில்  மாறிவிடும்  என்பதை அவர்கள்  அறிந்திருக்கவில்லை  . நீலநிறப்  பூக்கள்   பூத்திருந்த  பூங்காவில் அமைந்திருந்த  நிழற்குடை காதல்கள் இணைந்ததையும் காதல்கள்  பிரிந்ததையும் உணர்ந்திருக்கிறது  . அந்த  நிழற்குடையே அவர்களின் நீலநிறக்  காதலின்  சாட்சி  . பூக்களையும் தென்றலையும் மேலும் நிலவையும்  காதல்  குளிர்விக்கிறது  . காதலின் அந்திப்  பொழுதுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நினைவுகளின் வாசனை

This gallery contains 2 photos.

வாசனைகள் அவனை  ஞாபங்கொள்ளச்  செய்கின்றன  . பனித்திவலை  படிந்த பசும்புற்களின் வாசனை அவனுடனிருந்த   அதிகாலையை  நினைவூட்டுகிறது  . உருளும்  பனித்துளிகளில் அவன் கண்கள்  மூடி  இமைக்கும்  காட்சி மனதில்  எழுந்து   அடங்குகிறது  . முந்தைய  முற்பகல்  தினத்தில் ஒருநாள்  அவளது  இருப்பிடம்  வந்திருந்தான் பகலின்  வாசனை தேனீராக மாறியிருந்தது  . பகலிலிருந்து அவனுடைய வாசனையை பிரிக்கவியலாது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அதிகாலைச் சூரியன் வருகையில்

This gallery contains 1 photo.

தூக்கத்தை இழப்பதற்கு உன்  வார்த்தைகள் தேவையில்லை  எனக்கு நீ என்னை நினைப்பதைத்  தவிர்த்துவிட்டாலே  போதும் மனத்தின் சஞ்சலத்தை மேலும் அதிகப்படுத்தும் உன் மௌனம் என்னுடல் வெளிறி ஒளியிழந்து  போக உன் வருகை  நிகழாத  என் வாசல் போதும் நம்  மகிழ்வான நாட்களில் சிரிப்பும்  குதூகலக்  கண்ணீரும் இன்று காதலை  உருமாற்றியிருக்கிறது நெடுநாள்  உறக்கம்  இழந்தபின்பு துயிலும்  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கடந்து செல்லும் காலம்

This gallery contains 1 photo.

இந்தப்  பயணம்தான் எத்தனை  எளிதாய்  துவங்கிவிட்டது  . மலைகள் குன்றுகள் நதிகள் உருப்பெற்று நிலைபெறும்  முன் நிலவெளியில் காற்றெனத் துவங்கியது  . அவளால் அவனது  பொழுதுகள்   முழுமையடைந்திருந்தன  . வெம்மை குளிர்மை  என அவளை  உணர்ந்திருந்தான் .  அப்பொழுதெல்லாம் ஒருபோதும்  முடிந்துவிடாத  பயணத்தை யாவருடனும் துவங்கிவிட  இயலாது  என்பதை அவன்  அறிந்திருக்க  வில்லை  . காற்றைப்  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றில் மிதக்கும் துயரம்

This gallery contains 1 photo.

என்ன  செய்வது கரங்களில்   மயங்கிச்   சரிந்த  மனதினை  . என்ன  செய்வது மனதில்  மயங்கிச்  சரிந்த  உடலினை  . என்ன செய்வது துயரத்தில்  தோய்ந்த  காதலை  . ஒரு  புன்னகை அதற்கு ஈடான  ஒரு சொல் அல்லது அருகாமை  உணரவைக்கும் ஏதேனும்  ஒன்று  . அன்பைப்  பெற காத்திருக்கையில் மௌனத்தின்  ஊடே கடந்து செல்கின்ற  காற்றில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அரும்புகள் மலரும் பருவம்

This gallery contains 1 photo.

  அதிகாலை  பெருமழையில் முற்றத்து  முல்லை  அரும்புகள் தன்  இதழ்களிலிருந்தும் நீர்த் துளிகளைக் சொட்டிக்  கொண்டிருக்கின்றன . தெப்பம் போல நீரில்  மிதக்கிறது உனது  உருவம் . காகங்கள் வீடுதோறும்  அமர்ந்து  கரைகின்றன . மலர்ந்திருக்கும் முல்லைப் பூக்களைச் சூடிக்கொள்வதற்கு நீ இன்னமும்  வரவில்லை . துளிநீரை தன் இதழ்களில்  ஏந்தி மொட்டவிழும்  அரும்புகளின்  வாசனை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நிலவாகும் பறவை

This gallery contains 1 photo.

பறவைகளற்ற  ௬ண்டில் நிலவின் ஒளி நிரம்பிக் கொண்டிருக்கிறது . சற்று  முன்பாகத்தான் கூண்டிலிருந்த   பறவைகளை கொண்டு  சென்றனர் . வழிநெடுக அப்பறவைகள் இசைத்துக்  கொண்டிருக்கின்றன . உதிர்ந்த ஒற்றைச்  சிறகினை எறும்புகள்  மொய்க்கத்  தொடங்கிவிட்டன காதல்  நினைவுகளை . கூண்டினைத் திறக்கின்றேன் பறவைகள்  போல வெளியேறுகிறது  நிலவு . பின் தொடர்கிறேன் வழி  தவறிய  பறவையைப்  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சுழற்சி

This gallery contains 1 photo.

பச்சைப் புல்வெளியின்  மேல் மிதக்கின்ற  நீலவானத்தில்  பறந்து  செல்கிறது பஞ்சுப்  பொதிகள் . பஞ்சுப் பொதிகளில்  இருந்து  கசிகின்றன அன்பின் துளிகள் . பச்சைவெளியின் ரகசியங்களை சுமந்து செல்கின்ற  பொதிகள் நிலத்தின்  வழியாக கடலைச்  சேர்கின்றன . பறவைகள் பறக்கின்ற  வானம் நிலத்தில்  அடங்குகிறது . ……………………………………………………………………………………………….சக்தி ஜோதி 

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

உன்னுடன் வரும் எனது பொழுது

This gallery contains 1 photo.

நம்மை மழை நனைத்த  பொழுது இன்னும் நீர்த்திவலைகளாக மனதில்  படிந்திருக்கிறது . புத்தக  அடுக்குகளிலிருந்து தலை  நீட்டித்   தெரியும் நான்காய்  மடிந்த காகிதம் முழுமையாய்  சொல்கிறது உனது  துயரங்களை . விம்மியடங்கும் ஓசைகள் மெலிதாய்  எழுகின்றன  . கடிதம் புத்தகத்தினுள்  வைக்கப்பட்டவுடன் மழை  தொடங்கிவிட்டது . இங்கு வேறு  யாருமில்லை புத்தகத்தைப்  பெற்றுக்கொண்ட எனது  விரல்களில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குளத்து நீர்

This gallery contains 1 photo.

குளத்தின் நீர்ப்பரப்பு ஆம்பல்  இலைகளினால் போர்த்தப்பட்டிருக்கிறது . நிலத்தைத்  தொடமுயன்று தோற்றுத் திரும்பும் சூரியனின்  ஒளிக்கற்றைகளில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது . இலைகள் அங்கொன்றும்   இங்கொன்றுமென காற்றில்  புரளும் ஆம்பலின்  இலைகளில் செம்மை படர்ந்திருந்தன . நெடுதூரம்  கடந்து வந்த களைப்பிலும் தாகத்திலும் பாசி படர்ந்திருந்த நீர்ப்பரப்பில் தாகம்  தணித்துக்கொண்ட . நீர்ப்  பறவைகளின்  பாதம்பட்டு   கலைந்த  … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பனிப்பொழுதைக் கடந்து

This gallery contains 1 photo.

நெடுச்சாலையில் பனிமூடி  நிற்கின்ற  வாகனங்களைப்  பார்க்கின்றேன் நினைவுகள்   உறைந்து  என்னுள்  கிடப்பதுபோல ஒவ்வொரு  வாகனமும்   வரிசை  தவறி  நிற்கிறது  . பனிபொழியும்  அந்த மாலையில் விளக்கொளியில் நின்றிருக்கிறாய்  . உன்னைக் கடக்கவேண்டுமென்ற  தயக்கத்தில் பனித்துண்டுகளைத்   தட்டிவிட்டபடி நின்றிருந்தேன்  . இடைவெளியில் காற்றும்   பனியும்  நிரம்பியிருக்கிறது  . மஞ்சள்  நிறவெளிச்சத்தில் உன்  பார்வையை  அறியமுடியவில்லை அல்லது என்னைத்  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கல் மீன்

This gallery contains 1 photo.

அன்றைய  நாளுக்கான சொற்களை அவளிடமிருந்து  பெற்றுக்கொண்டேன் . நதிக்கரை நாணல் கரும்புத் தோட்டம் தரிசு நிலம் ஆகியவற்றோடு பேசுகையில் அல்லது  பேசுவதற்காக அந்தச் சொற்களை  செலவிட்டான் . இறுதியில் தன்னிடத்திலிருந்த சொற்கள் தீர்ந்து  போக அவளுக்காய்   வாசலில்  காத்திருக்கிறான் . முற்றத்தில் வார்த்தைகளை   இறைத்துக்  கொண்டிருக்கும் அவள் . அவனுக்கான வார்த்தைகளை நதியில்  மறைத்து வைக்கிறாள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

காற்றில் கிளை அசைகிறது

This gallery contains 1 photo.

  மலைப் பாதையில்  ஒரு வளைவில் தனியாக நின்றிருக்கிறேன்   என்னிடம்  வர  சற்றுத்  தாமதமாகியது மாலைக்காற்று வழக்கமாக  கடந்து  செல்லும் மஞ்சள்  விளக்கிட்ட   வாகனங்கள்  வரவில்லை காட்டெருமைகள்  வரக்கூடுமென  வேகமெடுக்கும்  பள்ளி மாணவர்கள்  வரவில்லை   எப்போதாவது மான்கள்  கடந்து  செல்லும் பாதையில் தனியாக  நின்றிருக்கிறேன்   என்னுடன்  உறவாடும்  மாலைக் காற்றை பரிசளிப்பவனும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறவையின் நிழல் தரும் துயரம்

This gallery contains 1 photo.

  மலையடிவாரத்தில் பசுக்களின்  மணியோசைகளுக்கு ஊடே அவர்கள்  பிரிகின்றனர்   ஆவினங்களின்  நடை ஆடுகளின்  மேய்ச்சல்  குரல் அவனது   நிழலைக்   கடந்து  பின்செல்கிறது   பசுக்கள் மடிநிறைந்து பாறைகளில்   கசிய  விட்டிருந்த  பால் துளிகளில் அவளின்  கண்ணீர்த்  துளிகளும்  படர்கிறது   மலை அடிவாரத்தில்  விரிந்திருந்த   வயலின் ஒற்றைப்   பாதையில்  செல்கிறான் அவன்   பறவையின்  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்