திசைகளுக்கு இடையே

 
எனக்கு ஒரு போதும் தெரியாது
திசைகள் என்பது பெண் என்று
நிலத்தை பெண் என்பார்கள்
கடலை பெண் என்பார்கள்
மொழியை பெண் என்பார்கள்
நிலத்தையும்கூட பெண் என்பார்கள்
ஆனால்
ஒருபோதும் அறியமுடியாத திசையை
எவ்வாறு சொல்ல முடியும்
பெண் என்று

 

ஒருவன் சொன்னான்
திசைகளுக்கு இடையே இருக்குமென
நான்
ஒரு பெண்ணாய் கேட்டுக்கொண்டிருந்தேன்

 

அந்தச் சொற்களை
பெண்ணை அறியாத ஒருவன் சொன்னான்
இடையென்பது பெண்களுக்குத்தானே இருக்குமென்று

 

திசைகளுக்கு இடையே நிரம்பும் வாசம்
அறிந்தவனாம் அவன்

 

நான்
ஒருபோதும் அறிந்ததில்லை

 

என்
வாசனையை அறிந்துகொள்ள முடியாதபடிக்கு
என் நினைவின் நூல்கொண்டு
என் வாசலை தைத்துக் கொண்டிருக்கிறேன்

 

இனி நான் பெண் அல்ல
மேலும் துயரத்தோடு சொல்கிறேன்

 

நான் தாயும் அல்ல.
…………………………………………………………………………சக்தி ஜோதி
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , . Bookmark the permalink.

8 Responses to திசைகளுக்கு இடையே

 1. Naanjilpeter சொல்கிறார்:

  “திசைகள்” அருமையான பாடல். கருத்தாக்கம் உள்ள நல்ல கற்பனைத் திறன்.
  திரு. ஜெயமோகன் கூறுகிறார் ” பாதைகள் இல்லையென்றால் எல்லாத் திசையும் பாதையே.. “.

  வாழ்த்துக்கள். அமெரிக்கா வந்தால் தெரிய படுத்துங்கள். இலக்கிய கூட்டம் ஏற்பாடு செய்யலாம். கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஜூலை திங்கள் வாசிங்டன் வருகிறார்கள்.
  அன்புடன்
  நாஞ்சில் இ. பீற்றர்

 2. G.Pandiyan சொல்கிறார்:

  super kavithai

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  உலகின் திசைகளாய் வாழ்பவர்கள் பெண்கள். ஆதி சக்தி அவர்கள்தான். பல் வேறு சமுக நிறுவனங்கள் தோற்றம். ஆனால், அத்தகைய நிறுவனங்கள் சமுக வளர்ச்சி என்பதை விடுத்து,தங்களை தொடந்து உயர் நிலை வைத்து பாதுகாத்திட, சமுக கட்டுப்பாடு என்ற விதிகளின் பேரில் விளிம்பு நிலை மனிதர்கள் மேல் கடும் தாக்குதலை நடத்துகின்றன . குறிப்பாக , பெண்கள் மேல் மிகவும் கடுமையாக…அவர்களின் , உணர்வுகளை மரத்துபோக செய்து மிகவும் கேவலமாக நடத்தும் சூழலில் இக்கவிதை எழுகின்றது .”..இங்கு உணர்வுகள் அற்று கிடக்குது வேரில் பழுத்த பழா, இதை உணர்வார் இல்லை …”…சுழலுடன் உள்ள சூழல் மாற , மிகவும் வலியுடன் பதியப்பட்ட இக்கவிதை , நம் மனதில் கடுமையாக பதிவுகளை …அதிர்வுகளை ..” சக்தி பிறந்த மூச்சினில் எழுந்த கவிதை ..”..நாம் , வாசித்து,” அறிவு என்ற பொந்தினில் வைப்போம் ..கொடுமை தணிப்போம் ..தீம் த்ரி கட .. .தீம் த்ரி கட..” —பெண்மை பேணுவோம் ..உலகை உயிர்ப்போம்

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

 5. rajeswari சொல்கிறார்:

  yarukum puriathu solavum mudiathu unara mattumea mudium avalai

 6. மதுரைத்தமிழன் சொல்கிறார்:

  முதல் முதலாக உங்கள் தளம் வருகிறேன் நான் படித்த முதல் கவிதை மிக அருமையான கவிதையாக இருக்கிறது வாழ்த்துகள்

 7. tirupurkathir சொல்கிறார்:

  முதல் முதலாக உங்கள் தளம் வருகிறேன் நான் படித்த முதல் கவிதை மிக அருமையான கவிதையாக இருக்கிறது வாழ்த்துகள்

 8. na.jeyabalan சொல்கிறார்:

  அறியமுடியாத திசை அல்ல பெண்! கடுமையாக அதிர்வுகளைபதிவு செய்து இருக்கிறது கவிதை .பெண் சக்தி. கடும் தாக்குதலை நடத்தும் மனிர்தகளும் உணர்வார்கள்!“

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s