மீட்சி

.
.
மலை முகட்டிலிருந்து
வழியும்
நீர்  வீழ்ச்சியாய்
 .
ப்ரியங்களைப் பொழிகிறாய்
 .
இலக்கின்றிப் பயணிக்கும்
காற்றைப்  போல
.
உன் அன்பு
பள்ளத்தாக்கை  அடைகையில்
 .
கால்களும் கைகளும்
செய்வதறியாது  திகைக்க
 .
முத்தங்கள்
ஊற்றெடுக்கும் நிலத்தில்
 .
கடலெனப் பெருகிய
காதல்
உன்னை மீட்கிறது .
……………………………………………………………………………………………..சக்தி ஜோதி 
This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to மீட்சி

 1. Naanjilpeter சொல்கிறார்:

  ப்ரியங்களைப் ‍ ஏனம்மா தமிழ்ச்சொற்களே கிடைக்க வில்லையா? அல்லது வேணுமென்றே வடமொழிக்கு வாழ்வு கொடுக்கிறீரிகளா?

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  ப்ரியங்கள் , நீர்விழ்ச்சியாய் விழும் தருணம் .. காற்று இலக்கு இல்லாது வீசினாலும் , அது அன்பு என்னும் பள்ளத்தாக்கை நோக்கும் தருணம் ..என்ன நேரிடும் ? க்ஷ்ண நேரம் , காதல், நாணத்துடன் அசைவின்றி நிற்க அனைத்தும் அசைவு இல்லாது …நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம் என அன்பு கடல் பொங்கும் பொழுது , உயிர்ப்பு மீண்டும் ஆரம்பமாக . காதல் , நம்மை மீட்டு….கவிதை , பொங்குமாங் காதல் ….

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  மலை முகட்டில் இருந்து விழும் வித்து ஒன்று , காற்றால் இலக்கின்றி பயணம் செய்து ,நிலம் என்னும் நல்லாளின் பள்ளத்தாக்கை அடைகின்றது..
  க்ஷ்ண நேரம் கழித்து, அது புதிய நிலத்தில் திகைத்து நிற்க,..அங்கு பொங்கும் , கடல் போன்ற நீரால் நிலத்துடன் முத்தமிட்டு , அதன் உயிர்ப்பு மீட்கப்பட்டு , ஜனிக்க தொடங்குகின்றது …கவிதை , உயிர்க்கும் வித்து ..

 4. G.Pandiyan சொல்கிறார்:

  nice one

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 6. sudhakar சொல்கிறார்:

  கவிதை படித்த உடன் காதல் என்னை மீண்டும்
  கொள்கிறது என் காதலின் நினைவுகளாக ……..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s