காதல் வழி

.
.
ஆற்றின்  கரைகளுக்கு
இடையில்
இருக்கின்றேன்
 .
வெள்ளம்  என் மீது
புரண்டோடுகின்றது
 .
தொண்டை  வறண்டு
தாகத்தில்  தவிக்கின்றேன்
 .
கால்கள்
நீரில்  மிதக்கின்றன
 .
ஆற்றின்  போக்கை
எதிர்க்க
இயலாமல்
மீனாய்  மாறுகின்றேன்
 .
தப்பிக்க  இயலாது
இனி
நானும்
 .
என்னிடம்  இருந்து
நீரும் .
…………………………………………………………………………………………..சக்தி ஜோதி 
This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to காதல் வழி

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 2. dhanasekar சொல்கிறார்:

  நீர் என்று உயர் தினயையையும் நீர் குறிப்பிட்டு நீரையும் ,தாபத்தையும் ,தாகத்தையும் குறியீடாக பயன்படுத்தி இருகரைகளுக்கிடையே வழிந்து ஓடுகிறீர் “காதல் வழி” கவி வழி .

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  வாழ்கை என்பதே கரைகளுக்கு …இங்கு , வெள்ளம் புரண்டு ஓடினாலும், மனமின் தவிப்பு என்னவோ , தொண்டையை நனைக்கும் அன்பாலான வார்த்தைகளை நோக்கி மட்டுமே ..ஏழே வாக்கியங்களில் அற்புதமான காதல் தவிப்பு , காதலின் விசித்திரம் ..மார்கழி பொழுது , சூடி கொடுத்த சுடர் கொடியாள் தவிப்பு, ரங்கா மன்னாரை நோக்கி பாடுவது போல் பக்தியாகவும் இங்கு பரிணாமம் கொள்கின்றது ..அன்பின் வழியாக நீந்தி செல்வது என்பது அவ்வையாரின் ஒப்புரவு ஒழுகு ‘ என்ற பொருளில் எளிமையாக வருகின்றது .. கவிதை , சங்கத் தமிழ் வழி பக்தியாக நம்மை மென்மை ‘நீரால் ‘ பன்னிராக தெளிக்கின்றது …

 4. G.Pandiyan சொல்கிறார்:

  lively poem,love is expressed in very good sense

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s