தாலாட்டு

.
.
என்னை
அவஸ்தைக்குள்ளாக்கும்
எத்தனையோ
காரணங்களில்
நீ
விடுபட்டதே  இல்லை
.
ஒருவேளை
நாம்  உணராதது
மேலும்   உனக்குத்    தெரியாதது
.
வானத்தைப்  பார்க்கும்பொழுது
அது
நீலமாக  இருக்கும்  அல்லது
கருமையை  அப்பிக்கொண்டிருக்கும்
ஜிகினாப்  போல மின்னும்  நட்சத்திரங்கள்
உன்  கண்களையோ
அல்லது  என் கண்களையோ
ஞாபகமூட்டும்
.
நான்
நானாகவே  இருக்க விரும்புகையில்
என்னைத் துன்புறுத்துகிறாய்
.
நான்
நானாக  இருக்க முடியாதென்று
வலியுறுத்துகிறாய்
.
என்னைப்
பிரிந்து  செல்லும்  சிலகணங்களைக்௬ட
தாங்க  முடியாதவளாயிருக்கிறேன்
என்று உணர்ந்து
என்னை  விலகிச்  செல்கிறாய்
.
நடக்கிறாய்
உன்  பாதம்  புண்ணாகிவிடுமென்று
பதறுகிறேன்
.
எதையெதையோ விழுங்குகிறாய்
விக்கிக்கொள்வாய் என
கவலைப்படுகிறேன்
.
இதோ
இன்று ௬ட
நீ
எங்கோ   உறங்கிக்  கொண்டிருக்கிறாய்
நான்
விசிறிக் கொண்டிருக்கிறேன்
இந்தக் காற்று
 உன்னை
தூங்க  வைக்குமென .
…………………………………………………………………………………சக்தி ஜோதி
This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to தாலாட்டு

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  தாலாட்டு இங்கு தாய்மையாக உள்ளது..காதலின் வெளிப்பாடாகவும் ..இங்கு, ‘அவஸ்தைக்குள்ளாக்கும் எத்தனையோ காரணங்களில்’ என வரும்பொழுது , தாய் என்ற இடம் மெல்ல மெல்ல அன்பான …செல்கின்றது..இங்கு படும் ஒவ்வரு வருத்தமும் மூன்று பாலின் வகைக்கும் பொருந்தும் ..
  விக்கல் வரும் பொழுது யாரோ நம்மை நினை..இங்கு , அன்பு வெளிபடும் ஆனந்த கண்ணீரால் நம் மனம் நிறைகின்றது ..அன்பு கொண்ட நபர்கள் எங்கு உறங்கி கொண்டிருந்தாலும் , அன்பு இதயங்கள் இணைந்தே உறங்கும்..அதனாலதான் , அன்பு விசிறி வெளிபடுத்தும் காதல் காற்று மனங்களை வருடி , புவி பந்தை அழகாக அற்புதமாக வான் வீதி வழியாக மிதக்க செய்து ..நம்மை வாழ..இக்கவிதை , சொக்க வைக்கும் காற்று வீசும் அன்பு தாலாட்டு விசிறி

 3. Naanjilpeter சொல்கிறார்:

  அவஸ்தை = துன்பம்
  பாத‌ம் = கால‌டி
  ஜிகினா = மின்மினி
  வ‌ட‌மொழிச் சொற்க‌ளை மாற்றினால் உங்க‌ள் பாட‌ல்க‌ள் த‌மிழ் இல‌க்கிய‌மாகும்.

  அன்புட‌ன்
  நாஞ்சில் இ. பீற்ற‌ர்
  http://www.fetna.org

 4. G.Pandiyan சொல்கிறார்:

  Nice poem.Bharathiyar also used so many samaskirit words in his poem,but you are THAMIZACHI,
  so pl avoid other laungauges in yr poem.I hope you can do,and you can win

 5. ravi (swiss) சொல்கிறார்:

  //நான்
  விசிறிக் கொண்டிருக்கிறேன்
  இந்தக் காற்று
  உன்னை
  தூங்க வைக்குமென .//

  இறகுபோலான வார்த்தைகள். கவிதை மிதக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s