தனிமையின் வெளி

மௌனத்தால்
தன்னை
உணர்த்தவியலவில்லை
.
ப்ரியங்களுக்கு
இணையான  வார்த்தைகள்  எதுவும்
இல்லையென  மொழி உணர்த்துகிறது
.
குரலின்  வழி
உதிர்ந்த சொல்
சற்றுமுன்
கண்களில் நீர்த்துளியாக
மிதந்து  கொண்டிருந்தது
.
ஒற்றை  வார்த்தையாய்
மௌனமாக  வந்தடைந்த
அது
.
இவ்விடத்தை
இச்செயலை
இப்பொழுதைக்
கடந்திருக்க வேண்டும்
.
நூலகத்தின் அமைதியென
மௌனம்
இடைவெளிகளில் நிரம்பி  வழிகிறது
எல்லாவற்றையும்  அகற்றியபடி .
………………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to தனிமையின் வெளி

 1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  மௌனம் தன்னை களைத்து மெல்ல மெல்ல ,பிரியங்களுடை பயணம் செய்கின்றது ..மௌனத்தை மொழி பெயர்க்கும் வார்த்தைகள் , பிரியங்களுடன் வந்து நீரோடை போல் செல்லும்போது , அங்கு மொழி , காதலை செதுக்குகின்றது..கண்களில் நீர்த்துளி , அது அனந்த ச்யனமாக விழாது இருக்கட்டும் ..ஏன்? அந்த துளி, குரலின் மகிழ்ச்சி வெளிப்பாடு.. அந்த ஒற்றை வார்த்தை , எதை கடந்தாலும் , இதயத்துக்குள் அல்லவா நிரம்ப .. நூலகத்தின் மௌனம் அறிவால் நிரம்பி வழிகின்றது ..இன்று , காதலும் பிரியமுடன் இன்று அறிவு வார்த்தைகளால் நிரம்பி , இடைவெளிகளை அகற்றி ,,மெல்ல இருவடன் காதலை சமன் செய்கின்றது ..தனிமை,,வெளி..அர்த்தம் பொதிந்து ..

 2. Naanjilpeter சொல்கிறார்:

  மௌனம் = அமைதி
  வார்த்தை = சொற்கள்
  பிரியம் = பாசம்
  உங்கள் பாடல் கவிதை அருமையாக உள்ளது.
  வடமொழிச் சொற்களுக்கு பதில் தமிழ்ச் சொற்கள் இருந்தால் இன்னும் மேன்மை அடையும்.
  http://www.fetna.org

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 4. Steve சொல்கிறார்:

  Is it called poem? It doesn’t have any quality to be called as poem. Not crafted words, no imagination, no message..it is as good as dead. No life in it. Sorry to be sharp, Sister. All creations are beautiful and bringing out is painful. But it should be presented nicely.

 5. varadharajan சொல்கிறார்:

  kavithaikal mika mika azhakaullathu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s