காதலின் மௌனம்

மாலை நேரத்தில்
கோபுரத்திற்கு  திரும்பிக்  கொண்டிருந்தன  புறாக்கள்
 .
மழைத்துளிகளில்
மலையினருகே வானவில்லில்
சற்று  பிறகு வரும் நிலவொளியில்
மற்றும்
நட்சத்திரங்களில்
உன் ஞாபகங்களை   மீட்க  முயல்கிறேன்
 .
இரவில்
ஒளிரும்  நட்சத்திரங்கள்
என்
வார்த்தைகளை மட்டுமே
உன்னிடம்  சேர்க்க  மினுங்கிக்கொண்டிருக்கின்றன
 .
என்னிடம்  பேசாமலிருப்பவன் நீ
அல்லது
என்னிடம்  பேசமுடியாமலிருப்பவன்
 .
முடிந்த  இசையின்  மௌனம்
காதலைச்  சொல்கிறது
 .
புறாக்களின்  கூடடையும்  சப்தம்
சொல்லத்  தூண்டுகிறது
பிரிவின் வேதனையை .
…………………………………………………………………………………………...சக்தி ஜோதி
This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to காதலின் மௌனம்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    இசையின் மௌனம் காதலைச் சொல்கிறது ..when love becomes music only when two hearts reads the same wavelength..great words on love..mounam s more powerful thro’ ur poem..

  2. Naanjilpeter சொல்கிறார்:

    நட்சத்திரங்கள் என்பது விண்மீன்கள் எனவும், வார்த்தைகளை என்பது சொற்கள் எனவும் இருந்தால் உங்கள் கவிதைக்கு இன்னும் மெருகு கூடும்.
    தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன் நாஞ்சில் இ. பீற்றர்
    http://www.fetna.org

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    அற்புத வடிப்பில் உள்ள சிலைகள் மௌனத்தையா சொல்கின்றது ? ..அது சொல்லுமே ஆயிரம் ஆயிரம் ….என்ன ஒரு காதல் கம்பீரம் ” ஒளிரும் நட்சத்திரங்கள் என் வார்த்தைகளை மட்டுமே உன்னிடம் சேர்க்க மினுங்கிக்கொண்டிருக்கின்றன” என்று சொல்ல..இங்கு, மௌனம் என்பது ‘பாவனா சந்தோசம்”..காதல் வான வில்லாகவும் , நிலவின் மூலம் குளுமையும் தொட்டு தென்றல் என நம்மை வருடும் , இக்கவிதை ‘அர்த்தமுள்ள பொருள் பொதிந்த மௌனம் ‘..

  4. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  5. Surekaa சொல்கிறார்:

    நயம்பட உரைக்கப்பட்ட நற்கவிதை.!!

  6. G.Pandiyan சொல்கிறார்:

    arumai

  7. தி. குலசேகர் சொல்கிறார்:

    மனதை என்னமோ செய்கிறது. அது உணர்தலின் மொழி. பேசாமலிருப்பவன் நீ என்கிற பாரா இல்லாமலே அந்த மௌனத்தின் ஆர்ப்பரிப்பு உணர முடியும் என்று தோன்றுகிறது. தி. குலசேகர். 9941284380

பின்னூட்டமொன்றை இடுக