பறவையின் விருட்சம்


சிறகுகளின் அசைவில் உருவாகும் ஒளியால்
என்னை அழைக்கிறாய்
.
உனக்கான சிறகசைப்பு அது
என்பது நீ அறிந்ததே
.
உயிர் கசிந்து
பேரார்வத்துடன் விண்ணில் பறக்கும் தருணம்
விருட்சங்களில் பூக்கள் மலர்கிறதை
நீ அறிந்து தானிருப்பாயா
இல்லையேல்
நான் ஒரு பறவை என்பதையாவது
.
என் சிறகுகளின் அசைப்பில் உருவாகும் ஒளியால்
நீ
திரும்பத் திரும்ப அழைக்கிறாய்
.
பூக்கள்
மரங்கள்
இலைகள்
வான் வெளி எங்கும்
அவ்வொளியை ஒளிரச் செய்கிறேன்
.
ஒரு பக்க இறகு காதலையும்
மறுபக்க இறகு தூய்மையான நேசத்தையும்
சிறகடித்து விரிக்கிறது
 .
ஒரு பெண்ணை
வானிலிருந்து தரையிறக்குவதுதானே
உனது விருப்பம்
என்றபோதிலும்
உனக்கான
சிறகசைப்பு அதுவென நீயறிவாய்.
……………………………………………………………………………சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to பறவையின் விருட்சம்

 1. vittalan சொல்கிறார்:

  நல்ல கவிதை வாழ்த்துக்கள்

 2. G.Pandiyan சொல்கிறார்:

  Kavithaiyini is PUDHUPARAVAI, contributing her efforts for creating new version of poems which
  express true love of all creatures and mixing of affection to all human beings.

 3. R Balakrishnan சொல்கிறார்:

  உனக்கான சிறகசைப்பு அது
  என்பது நீ அறிந்ததே

  அசைவின் அசைப்பில் அசைந்தாடும் கிளையைப்போல் ஆனந்தத் தாண்டவம் ஆடும் உங்கள் அசைவுகளின் அர்த்தங்கள் ஏராளாம். அது உங்களுக்கான உங்களுக்கேவான அசைவு விருட்சமாக்கவே. விளைந்திடுங்கள், விளைத்திடுங்கள். வாழ்த்துக்கள் தோழி. சக்தியின் ஜோதி சகலருக்கும் ஒளி தரட்டும்.

 4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  கவிதை இரு வேறு அமைப்பில் உள்ளது..முதல் பகுதி என்றும் உள்ள கவியாக , இறுதிபகுதி , கவிக்கான உள்ளர்த்தத்தை அற்புதமாக வடிக்கின்றது..சிறகுகளின் அசைவு என்பது மனதை குறிப்பதாக உள்ளது..அன்புக்குரியவன் , விருச்சங்களின் மலரும் மலர்கள் + மனசு என்னும் சிறகை அசைக்கும் அன்பு பறவை என்பதை புரிது கொள்ளும்போது , அங்கு அற்புதமாக எழும் உணர்வை , ‘ உயிர் கசிந்து’ என்று மொழியாடுவதை , வேறு எந்த வார்த்தைகளும் ஈடு செய்ய இயலாது …அன்பின் ஒளி, பிரபஞ்சம் முழுவதும் பஞ்ச பூதங்களின் உயிர்ப்பான , ‘ பூக்கள் மரங்கள் இலைகள் வான் வெளி எங்கும்’, பிரகாசமாக ஒளிர்கின்றது….மனது இரு இறக்கைகளாக , காதல் மற்றும் நட்பு ஊடே அற்புதமாக சிறகை விரித்து , நம்மை மேலே மேலே பஞ்சாக நம் மனதை …சிறகுகள், நம்மை வசிகரிகின்றது..

 5. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  பறவை என்பது பெண்ணாகவும், இயற்கை நியதிப்படி, மரம் அதனுடன் என்றும் தொடர்பு உள்ள ஆணாகவும் –ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கி , உலகை உயிர்ப்பு உள்ளதாக மாற்றும் சிறகுகள் என காதலும் நட்பும் இங்கே அற்புதமாக ஜொலிகின்றது..

 6. கவியருவி ம. ரமேஷ் சொல்கிறார்:

  நட்பும்
  காதலும்
  பறவையின் இரு சிறகுகள் போல்
  இணைந்தே இருக்கிறது…
  காதலர்கள் வாழ்க்கையில்
  வேறு ஒருவருடன் திருமணமானப்பின்பும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s