காற்றில் மிதக்கும் நீலம்

.

.

ஆதி நாள் துவங்கி
அந்த நிலம் வெப்பத்தினால்
கனன்று கொண்டிருந்தது
.
வெண்மையால் தும்பைப் பூக்கள்
மஞ்சளாய் ஆவாரம் பூக்கள்
.
காட்டுச் சுண்டைகாயின்
மகரந்தம் மினுங்கும் பூக்கள்
என செழித்திருந்த
அந்த தரிசு நிலம் எங்கும்
துளசியின் வாசம் பரவியிருக்க
.
ஏர் பிடித்து உழப்படாமலும்
பண்படுத்தி விவசாயம் செய்யப்படாமலும்
தனித்திருந்தது
.
நிழல் தரும் மரங்களற்று விரிந்திருந்த
அந்த நிலம்
அந்த வெப்பம்
அவனை நினைவூட்டியபடியிருக்க
.
பெயர் தெரியாத அந்தக் காட்டுப் பூ
சூரியனிடம் தனக்கான நீலநிறத்தைப் பெற்று
தன் இதழ்களை
அகல விரிக்கத் துவங்கியது.
………………………………………………………………………………...சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to காற்றில் மிதக்கும் நீலம்

 1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  நிலம் என்பது மலர்ந்து கொண்டே இருத்தல் வேண்டும்… அந்த மலரில் இருந்து பிரசவிக்கும் உயிர்கள் உலகை இயக்கும்..நிலம் என்பது வெப்பம் கனன்று உள்ளது..உயிர்பிக்க வேண்டியதும் இயற்கை தான்..குளிர்விக்க வேண்டும்..வெப்பம் தணிக்க அன்பு மிகுந்த அவனால் மட்டுமே முடியும்..ஆனால் வெப்பம் உண்டாக காரணமும் அவன்தான் .. அவன் சூர்யன் ..இயற்கை இதழ்கள் விரித்து ,தன் உயிர்ப்பை தொடங்கியபோது ,கனன்ற வெப்பம் தணிய தொடங்கியது.. நிலம் இயற்கையாக மினுமினுத்ப்படி உள்ளது..அங்கு வாசம் இயற்கை ..நிலம் என்னும் நல்லாள் , இயற்கை வாழ்வு வாழ்பவள் ..புவி பந்தை ஜிவிப்பவள்..” காட்டுச் சுண்டைகாயின் காட்டுப் பூ”–மனதை அள்ளி செல்கின்றது …

 2. G.Pandiyan சொல்கிறார்:

  In fertile land money yielding flowers are blooming,but dry land un noticable flowers like THUMBAI,
  AVARAM,KATTU SUNDAI are blooming and adding beauty to world,and making ecological balance.
  same way rich or poorman they are doing their mite for this word,but poor peoples are unnoticed like TH
  UMBAI flower. kavithaini nicely expressed her view of social imbalance in her kavithai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s