ஒற்றைச் சொல்

கேள்விகளுக்கான
பதில்
ஒன்றுமில்லையென
ஒலித்துச்
சிதறுகின்றன  எப்பொழுதும்
 .
அது
மன  வெளியின்
அழுத்தங்களற்று
மிதந்து  நகர்கின்றது
 .
அன்பு
நட்பு
காதல்
காமம்
அனைத்தும்  ஒற்றைச்  சொல்லில்
வெளிப்பட இயலாது
மௌனத்தில்
உறைந்து  கிடக்கின்றது .

 

……………………………………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ஒற்றைச் சொல்

  1. R Balakrishnan சொல்கிறார்:

    அருமையான மொழிகள் தோழி. ஒவ்வொன்றின் புனிதத்தை புனிதம் கெடாது புனைந்தமைக்கு. மெல்லிய சொல்லாக இருந்தாலும் மேன்மையான சொல் என்று சொல்லிய உங்களது ஒற்றைச் சொல்லுக்கு வாழ்த்துக்கள். உறைந்து கிடக்கும் உண்மைகளின் கேள்விகளுக்கு இல்லாத பதில்களா? உங்களுக்கான பதில்கள் உங்களுள்ளே உள்ளது.

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    ஆழந்து நோக்கின், ஒற்றை எழுத்திற்கும் பொருள் உண்டு..சொல் ஒற்றையாக இருக்கலாம். ஆனால்,அதன் வலிமை மேரு மலை போல் பிரமாண்டமாக இருக்கும். ஆழி சுழல் மையம் சிறு புள்ளிதான்.ஆனால், அது உருவெடுக்கும் பொழுது, அதன் பரிமாணம், மிக பெரிது..ஆள் வித்து மிகவும் சிறியது ..வளர்ச்சியோ மிக..கூறப்பட்டுள்ள அனைத்து ஒற்றை சொல்களும் ,வாழ்வின் மிக நுண்ணிய கூறுகள்..இரு பக்கமும் கூர்மையானவை . அந்த புரிதல் இருந்தால், வாழ்கை பொருள்படும்..இக்கவிதை , ஒற்றை சொற்கள் கட்டிய அன்பு மாளிகை.

  4. G.Pandiyan சொல்கிறார்:

    super kavithai,i remember valluvan kural ANBIRGUM ONDOO ADAIKKUM THAZH

  5. rishvan சொல்கிறார்:

    அருமையான கவிதை…நன்றி பகிர்விற்கு… நானும் கதை, கவிதை எழுதுகிறேன்…

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்…

  6. ravi (swiss) சொல்கிறார்:

    // அன்பு

    நட்பு

    காதல்

    காமம்

    அனைத்தும் ஒற்றைச் சொல்லில்

    வெளிப்பட இயலாது

    மௌனத்தில்

    உறைந்து கிடக்கின்றது .//

    ஆம் சக்திஜோதி. இந்த ஒற்றைச் சொற்கள் கட்டுடைந்தால் அதன் அனர்த்தம் அல்லது ஆனந்தம் அளவற்றது… ஈர்ப்பு-பிரிவு, உடன்பாடு-முரண்பாடு, நெருக்கம்-விலக்கம்… என்றெல்லாமுமான முரண்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மனிதஜீவியின் நரம்புகளை சோகத்தாலும் மகிழ்ச்சியாலும், சோர்வாலும் உற்சாகத்தாலும் நரம்புரசி சிலிர்த்துவிடும் உயிர்ப்புகளின் எல்லைகளற்ற தேசம் இந்தச் சொற்களிற்குள் குடிகொண்டு இருப்பது. கவிதையில் சொற்சுருக்கம் அற்புதமாகப் பொருந்தி வருகிறது.

  7. vaseeharan சொல்கிறார்:

    kandukonden

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s