பிணி தீர்த்தல்

.

.

அந்த
மழைக்கால
கரிய இரவில்
 .
மின்னல்
சிமிட்டிய  கணத்தில்
என்
கண்களில் வந்தமர்ந்தாய்
 .
உன்னால்
சிவந்தன  கண்கள்
என்பதறியாத
என் தாய்
செய்யும்
மருத்துவம்  கண்டு நகைக்காது
 .
உன்னால்
வாடிக் கொண்டிருக்கும்
என்னருகில்  வந்தால்
 .
உன்
மார்பில் முகம் புதைத்து
கைகளில்  கட்டுண்டு
 .
தீர்த்துக் கொள்ளப் போவது
என்
நோயை  மட்டும்  அல்ல.
……………………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள். Bookmark the permalink.

5 Responses to பிணி தீர்த்தல்

 1. Naanjilpeter சொல்கிறார்:

  அழ‌கான‌ க‌விதை. வ‌ட‌மொழி சொற்க‌ள் இல்லை. வாழ்த்துக்க‌ள்.
  http://www.fetna.org

 2. durai சொல்கிறார்:

  அருமையான கவிதை

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  மின்னல் . க்ஷண நொடி , வந்து மறைந்தாலும் , பிரகாசமும் சக்தியும் அபாரமானவைகள்..அது போல்தான் காதலும் ..மின்னல் வரும் நேரமும் குளிரான இதமான சூழல்..காதல் வரும் நேரமும் அப்படிதானே ..என்னதான் , பிணிக்கு யார் மருந்து தடவினாலும் , உரியவர் உரிய முறைப்படி சிகிட்சை அளித்தால் மட்டுமே பிணி மறையும் ..இங்கு மனதிற்கு உகந்தவன் , மருத்துவன் ,தழுவலே மருந்து ..கவிதை உள்ளடக்கம் மட்டுமல்ல ,இங்கு கவிதை கூட, வாசிப்போர் மனதை மின்னலாய்…

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 5. கவியருவி ம. ரமேஷ் சொல்கிறார்:

  எல்லா கவிஞர்களுக்கும் ஒரு மழைக்காலம் மற்கக முடியாமல் இருப்பது உண்மைதான்…

  எனக்கும் உண்டு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s