காதல் துளிகள்

.
,
அன்பின்  சமுத்திரமென
நான்  நினைத்தது
துளி  நீரென
மாறிவிட்டது
 .
வெறுப்பின்  மேகங்கள்
குளிர்ந்து
அன்பின்  திவலைகள்
என்னை
நனைக்கும்  போது
 .
ஆச்சர்யத்தின்  படகில்  தத்தளித்தபடி
ஒரு துளியும்  சிதறி  விடாமல்
சேகரிக்கின்றேன்
கடலை  நினைத்தபடி
 .
கடலாய்  மாறி
அலையாய்  அலைகையில்
துளி  நீராய்
என்
கண்களில் துளிர்க்கிறது
உன் காதல் .
 
………………………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to காதல் துளிகள்

 1. Naanjilpeter சொல்கிறார்:

  சமுத்திரமென = கடலென‌
  ஆர்ச்ச‌ர்த்தின் = விய‌ப்பின்
  என்று எழுத‌லாமே. ஏன் தாய்த்த‌மிழின் மீது அத்த‌னை கொலைவெறி

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  நீரின்றி அமையாது உலகு…காதலின்றி அமையாது பிரபஞ்சம்..வெறுப்பு கூட காதலில் திவலைகளாக மாறும் மாய சக்தி..தான் கடலில் நனைந்தாலும் , துளி துளியாய் காதலை சேகரிக்கும் பண்பு , தன்னை விட காதல் மேல் உள்ள பாசத்தை வெளிகாட்டும் இடம் , வெள்ளி பனி மலையாக பிரகாசிகின்றது..இங்கு துளி ,கடலை விட பெரிது என்பது ஆழகாக , பன்னீர் துளி நம் மேல் படும்போது ஏற்படும் உணர்வாக அமைகின்றது ..

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 4. Steve சொல்கிறார்:

  What sort social responsibility you have as a woman? You can write poem about Love, love and Love but still you can go beyond the boundary to use your skills and talents for the betterment of the society. That is the basic and utmost duty of any artist. Greetings

 5. M.SHANMUGAM சொல்கிறார்:

  அருமையான வரிகள்

 6. கவியருவி ம. ரமேஷ் சொல்கிறார்:

  என்றும் கண்ணீராய்த் துளிர்த்துக்கொண்டிருந்தால்தான் அது காதல்…

  காதலின் சுகந்தமும் அதுதான்…

  கவிதைக்குப் பாராட்டுகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s