காவியா

.
ஒரு முல்லை மொட்டுப் போல
அவளிருக்கிறாள்
அவள் கருப்பு முல்லை
கருப்பு முல்லை எப்பொழுது மலருமென்று
நீங்கள் கவனித்துக் கொண்டிருப்பதுபோலவே
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஒரு மொட்டு பூக்கும் முன் சிரிக்குமா
சிரிக்கும்போது கன்னக்குழி விழுமா
மேலும் அந்த மொட்டிற்கு கண்கள் இருக்குமா
 .
அந்தக் கண்களும் கருப்பாகவே இருக்க
எவ்வாறு ஒரு மொட்டு மலருவதற்கு முன் இத்தனை
மணம் வீசுகிறது
மொட்டின் இமைகள்
ஏன் இவ்வளவு தாமதமாக விரிகிறது
இந்த மொட்டிற்கு உடலுண்டா
 .
ஒன்றும் அறியாமலேயே
அந்த மொட்டு மலரக் காத்திருக்கிறது
எதிர்வரும் ஒரு பௌர்ணமி இரவில்
அவள் தாய் மலர்ந்ததுபோல
அந்த மொட்டின் இதழ்கள் விரிய
அதன் கண்களிலிருந்து ஒளி சிதறும்
 .
அத்தனை மென்மையாக
 .
அத்தனை மென்மையாக
 .
ஒரு மொட்டிற்கு என்ன பெயர் வைப்பது என்பது
அதன் இதழ்களுக்கும்
மேலும் அதன் மணத்திற்கும்
ஒரு பிரச்சினையும் இல்லை
 .
காலம் காலமாய் கடந்து நிற்பது
ஒரு மொட்டு மலர்வதென்றால்
அதன் மணத்தால் உலகம் நிறைவதென்றால்
அது காவியம் என்றால்
 .
அந்த மொட்டின் பெயர் காவியா.
………………………………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to காவியா

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

  2. G.Pandiyan சொல்கிறார்:

    Kaviyavirgu Kaviyam padaitha kavithaine CONGRATS

  3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    ஒரு மொட்டின் காவியம் ..நறுமணம் , கவிதை என்னும் தென்றல் வழியாக , பரவும் பொழுது …அதுவும் ,மென்மையாக , மென்மையாக … தமிழ் வம்சத்திற்கும் தாய்மைக்கும் உறவு சேர்க்கும் தொப்புள் கொடிஉறவு திருவிழா..உறவுகள் என்றும் முழு நிலவுதான் என்பதை தன் பௌர்ணமி வழி சொல்லும்போது , பொருள் இன்னும் மெருகு அடைகின்றது…மலர்களில் ஆயிரம் வண்ணம் ..அதுதான், மலர் வனத்திற்கு பெருமை. .’காவியா காவியம்’ ..தாய் வழி சமுகத்தின் பெருமை மிகு படைப்பு..இக் கலை படைப்பு ,’கொடி வழி மொட்டு காவ்யம்’..தொடரும் வாழ்க்கை ,மொட்டும் கொடியாகி பூ பூக்கும் .. ஆதி தாய் வழி சமுகம், சமுகத்தின் சுவாசம்..சுவாசத்தை நேசிப்போம்…பிரபஞ்சத்தின் அடிநாதம், இந்த சுவாசம் ..உணர்வுடன் சுவாசிப்போம் ..

  4. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    தைமாசம் பூ வாசம்..உழைப்பின் மகிழ்ச்சி வெளிப்படும் நன்னாள்..மங்களம் பொங்கிடும் பொங்கல் திருநாள் ..இன்று படைத்திட்ட , தித்திக்கும் காவிய பொங்கல் , அனைத்து மொட்டுகளின் காவிய நறுமணமாக என்றும் தமிழ் பூந் தோட்டத்தில் தவழும் ..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s