நிலா முற்றம்

 

முற்றம் இல்லாத வீட்டில் ஒருபோதும்
நிலவின் வரவு நிகழ்வதேயில்லை
.
முற்றத்தைத் தேடிச் செல்கிறேன்
வீதிதோறும் அலைகிறேன்
.
சின்ன ஜன்னலின் இடையே
வான்வெளியில் ஒளிரும் நிலவை
எனக்குப் பிடிப்பதேயில்லை
.
வீடுகளின் தாழ்வாரத்தில்
கிணற்றடியில்
நீள் வீதியில்
என
எதன் கட்டுப்பாட்டிலும் இல்லாமல்
ஒளியை பரப்பிக் கொண்டேயிருக்கிறது நிலவு
.
ஒரு முற்றம்
தன்னை நிலவொளியில்
நிரப்பிக் கொள்ளவே விரும்புகிறது
.
நிலவும்
தன் முற்றத்தை தேடிக்கொண்டேயிருக்கிறது
.
முற்றம் அடைய முடியாமல்
நானே முற்றமானேன்
நிலாவும் முற்றமாகி விட
.
நாங்கள் சந்தித்துக் கொண்டோம்
…………………………………………………………………………………….சக்தி ஜோதி


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நிலா முற்றம்

 1. Anbushivan சொல்கிறார்:

  முற்றம் வைத்த
  வீட்டைத்தேடி
  முழுநிலவு
  சுற்றியது
  கொஞ்சம்
  இளைப்பாற
  கொஞ்சம்
  கவி பேச

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

 3. Nackeera Norway சொல்கிறார்:

  முற்றிய அகம் முற்றமானதால்
  நிலவின் சந்திப்பு முத்தம்

  முற்றாத அகங்களில்
  சந்திப்பு
  வெறும் நிந்திப்பே.

  நிலவைச் சுமக்கும் முற்றத்தில்
  தாய்மை
  நிலவு நிலவா நிலத்தில் நிகழ்வது
  பேதமை
  பின் வேதனை

  நோர்வே நக்கீரா

 4. Abu Haashima Vaver சொல்கிறார்:

  உங்க நிலா முற்றம் கவிதை நிலாபோல் இதமாக இருந்தது.

  எங்கள் நமது முற்றம் இதழின் வாழ்த்துக்கள்!

 5. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  காதல் வாழ்கை , நிலா=காதல், முற்றம்=காதல் சென்று சேரும் நிலம் …
  ஆன்மிக வாழ்கை . நிலா=ஜீவாத்மா , முற்றம்=பரமாத்மா …
  இங்கு காதலும் ஆன்மிகமும் ஒன்றாக தத்தம் இலக்கை அடைய பயணத்தை தொடர்கின்றது ..
  ஒரு கட்டத்தில், இரண்டும் ஒன்றென கலக்கும் பொழுது,அங்கு ,மிக பெரிய பொருள் ,வாழ்வின் அர்த்தமாக மலர்கின்றது..
  அர்த்தமுள்ள வாழ்கை , மிக எளிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது ..இது , கவிஞரின் எழுத்துகள் மேல் கொண்டுள்ள ஆளுமையையும்
  தத்துவ புரிதலையும் , அழமாக …தத்துவமே வாழ்கை , புரிந்தால் மிகவும் அற்புதமாக மலரும் வாழ்க்கை..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s