காதல் விதி


எத்தனை முறைதான்  இந்தக் குளிர்நிலவில் நனைவது
மேலும்
இந்தக் குளிர்காற்று
ஏன் என்னைத் துன்புறுத்துகிறது
 .
நான் உன்னால் நிலவாகக் குளிர்ந்து கொண்டிருக்க
என்னால் நீ ஏன் தகித்துக் கொண்டிருக்கிறாய்
எதிர் எதிர் திசைகளில் பயணிக்கும் நாம் எவ்வாறு
ஒருவரை ஒருவர் ஆகர்ஷிக்கிறோம்
 .
சுழன்று கொண்டிருக்கும் இந்தப் பூமி
விதிகளால் நிரம்பியது
.
எந்த விதிகளுக்கும்  ஆட்படாதது
.
நிலவில் காய்ந்து கொண்டிருக்கும் நாம்
ஒரு புள்ளியில் இணையும் போது
உதிக்கத் தொடங்குகிறோம்.
…………………………………………………………………………..சக்தி ஜோதி 
This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to காதல் விதி

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    ‘நிலவின் குளிர் , தகிக்கும் வெப்பம் ‘–இரண்டு எதிர் முனைகள்…இயற்பியல்,நியூட்டன் மூன்றாம் விதி…’எதிர் முனைகள் ஆகர்ஷிக்கும்’ ..என்னதான் , காதல் இயற்கை என்றாலும், அதுவம் அறிவியல் தத்துவத்திற்கு உற்பட்டதுதான்..எப்பொழுது , ஒரு புள்ளி இரு மனங்களை ஒன்றாக …அப்பொழுது , ‘உன்னில் நான்’ ,என்னில் நீ;’ ..என அத்வைதம் பிறக்கின்றது…
    POEM, TASTE OF FRIED ICE-CREAM….

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

  3. G.Pandiyan சொல்கிறார்:

    love is compared to kulir nilavu fantasic,really i have enjoyed this poem

  4. ravi (swiss) சொல்கிறார்:

    nice.

பின்னூட்டமொன்றை இடுக