இருவேறு வாசனைகளுள்ள மலர்

காற்றில் மிதந்து வருகிற
ஒரு முத்தத்தை எதிர்கொள்வது சாத்தியம்
ஒரு பெண்ணுக்கும்
ஓர் ஆணுக்கும்
.
செல்பேசிகள்
ஒரே கணத்தில் ஒரு கோடி இணைப்புகளை
செவிகளுக்கு எடுத்துச் செல்கின்றன
பெண் மனங்களைப் போல
.
ஒரு பெண்
எவ்வாறு ஒரு முத்தத்தை எதிர்கொள்வாள்
அது
முத்தத்தை எதிர்கொள்ளும்
வெட்கத்தைப் பொறுத்ததே
.
காதல் அறிந்ததில்லை
ஒரே சமயத்தில்
துக்கத்தையும் மகிழ்ச்சியையும்
.
காதலில் துவங்கும் முத்தம்
காமமாக மாறுகையில்
.
ஓர் ஆடை அவிழ்வது போல
ஒரு நிர்வாணத்தை பார்ப்பதுபோல
.
முத்தத்தை தரிசிப்பது அத்தனை எளிதல்ல.
……………………………………………………………………………………….சக்தி ஜோதி

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to இருவேறு வாசனைகளுள்ள மலர்

 1. G.Pandiyan சொல்கிறார்:

  love at the time it will not face both tragedy and happieness,how deeply you have thought,very good line

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  கவிதை , ஒரு வாழ்வின் முக்கிய சம்பவத்தை வெகு அழகாக , ஒரு மொட்டு மலர்வதுபோல் செப்புகின்றது ..காற்று,காதல்.முத்தம், ஆடை ..என ஒவ்வன்றாக…இறுதியாக பரிபூரணத்தில் திளைக்கும்போது ,..பரிமாறப்படும் அன்பு ..கவிதை , கம்பி மேல் நடக்கும் பெண்ணின் மனம் போல் , அளவாக ,அழகாக பார்த்து நடப் ….செதுக்கப்பட்டுள்ளது..காதல் , ஒன்று மகிழ்ச்சி அல்லது சோகம் என்று ..புரிந்து கொண்ட அன்பில். மகிழ்ச்சி சாத்தியம்தான் ..தன் மனதில் உள்ளவன் என்றால், வெட்கம் என்பது…இங்கு, வெட்கம் கூட ஒரு அழகு மலர்தான்…இன்றைய அறிவியல் அற்புதம் அலைபேசி கூட , பெண் மனதுடன் …..இங்கு . முத்தம் என்பது ஒரு அன்பு வாழ்வின் …தொடர்ந்து…அன்பின் கூர்மையுள்ள வெட்கம் கூட , அழகுதான்..

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

 4. ராச.கணேசன் சொல்கிறார்:

  யோசிக்க வைக்கிறது :

  காதல் அறிந்ததில்லை
  ஒரே சமயத்தில்
  துக்கத்தையும் மகிழ்ச்சியையும்
  .சக்தி ஜோதி

  சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்ல -நான்
  அழுகுறேன் அழுகுறேன் அழுகவல்ல
  கண்ணதாசன்

  சிரிப்பு வரும் அழுகை வரும்
  காதலில் இரண்டுமே கலந்து வரும்
  நா.முத்துக்குமார்
  (கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை)

 5. kannan சொல்கிறார்:

  ஒரு பெண்
  எவ்வாறு ஒரு முத்தத்தை எதிர்கொள்வாள்
  அது
  முத்தத்தை எதிர்கொள்ளும்
  வெட்கத்தைப் பொறுத்ததே

  சத்தியமான உண்மைகள் …..முத்தத்தின் உணமையான …அர்த்தத்தை இதில் காண்கிறேன் ….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s