காத்திருப்பு


நீண்ட காலம் கழித்து
இப்போதுதான்  வீடு திரும்பியிருக்கிறான்
அவன் அறையில்
படிப்பதற்காக காத்திருக்கும் புத்தகங்கள்
எழுதும் பேனா
மேஜை நாற்காலி தூசி படிந்திருக்க
இவற்றுடன் என்னுடைய கடிதமும்
.
அவன்
என் கடிதத்தைப் படிக்கையில்
பயணத்தில் தவற விட்டக் காட்சியைக் காண்பது போல
அதிகாலை பூத்த முதல் மலரைக் காண்பதுபோல
அல்லது
நேர்ந்த வன்முறையை ஞாபகம் கொள்வதுபோல
.
அவன்
என்னைக் கடந்து செல்ல விரும்பி
அந்தப் பயணத்தைத் துவங்கவில்லையென்பதை
நான் அறிந்திருந்ததால்
பூட்டிய அறையில் வெகுகாலமாக நான் காத்திருக்கிறேன்.
……………………………………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to காத்திருப்பு

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  இந்த அறையில் உள்ள அனைத்துமே அவன் விரும்பி வாங்கி வைத்ததோ அல்லது தேவைக்காக வாங்கியதோ ..ஆனால், இந்த கடிதம் அவனை விரும்பும் ஆத்மாவால் வரையப்பட்டது ..அவன் அறியாமல் தேடி வந்த அன்புச் சுரங்கம்..அதனை , முதல் முதலில் பார்க்கும்பொழுது , அவன் உள்ளம் வானத்தில் தானே சிறகடிக்கும்..அன்று மலர்ந்த மலரை விட மென்மையானது , இக்கடிதம்….தான், காதலில் வைத்துள்ள நம்பிக்கை ”
  என்னைக் கடந்து செல்ல விரும்பி அந்தப் பயணத்தைத் துவங்கவில்லையென்பதை” , என்ற அற்புத புரிதலின் வழியாக …. ஒரு நாள், ‘ பூங்கதவே தாழ் திறவாய்’ என கவித்து , தன் காதல் செல்வியை , காதல் குதிரை மேல் அமர வைத்து, ‘பூ மழை தூவி ‘ என அன்பித்து அழைத்து செல்வான் , திருவளர்செல்வன் ..அதுவரை ,poem, காத்திருத்தல் சுகமானது.. சொர்க்கமான சிறை..

 3. gandhi m சொல்கிறார்:

  அழகான காத்திருத்தல்

 4. srinivasvenkat சொல்கிறார்:

  SIMPLE AND SUPPER.

 5. mcafareed சொல்கிறார்:

  காத்திருப்ப்தே ஒரு சுகம்தான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s