மழைப் பொழுது

அந்த மாலையில்
அடர்மழை பொழிந்தது
என் மகளோடு  மகளாய்
மழையில் நனைந்தேன்
 .
வானமோ
மின்னல்களை உதிர்த்தவாறே
மழையைப் பொழிந்த  வண்ணம்  இருந்து
எங்கள்  உடைகள் நனைந்தன
இரத்தம்  வெதுவெதுப்பாய்
உடலெங்கும்  பரவியது
நான்  மகளாயும்
அவன்  நானாயும்
மாறி
குதித்துக் கொண்டிருந்தோம்
எங்களது   முற்றத்தில்
  .
புற்கள் செடிகள்  மரங்கள்
இன்னும்
வீடு  அனைத்தும்  நனைந்தன
அந்தப் பெருமழையில்
 .
நாங்கள்  வீடு  புகுந்து
ஆடைகளை  மாற்றிக் கொண்டிருக்கையில்
மழையின் ருத்ரதாண்டவம்
இன்னும்  சற்று  கூடியிருந்தது.
………………………………………………………………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to மழைப் பொழுது

 1. N.Rathna Vel சொல்கிறார்:

  நல்ல கவிதை.
  எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

 2. Naanjilpeter சொல்கிறார்:

  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
  அன்புடன் நாஞ்சில் இ. பீற்றர்
  http://www.fetna.org

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  மழை மகள், பூமியா ? , பூமி மகள் , மழையா ? என்று இரு மகளும் மாறி மாறி , நம்மை தாலாட்ட , நனைந்த உடைகளை நாம் மாற்றிட, இயற்கை பூமி , மட்டும் தாயாக மாறி அந்த ஈரத்தை உள் வாங்கி ..நமக்காக உயிராக மாறும் அற்புத ஜாலம் இங்கே கவிதையாக விதைக்க ..விருட்சம் எழும் நேரம்.. poem ,நனைந்த மனசு ..

 4. பீர் | Peer சொல்கிறார்:

  புத்தாண்டிலும் மழை உங்களுக்காக தாண்டவம் ஆட வாழ்த்துகள்.

 5. ராச.கணேசன் சொல்கிறார்:

  புற்கள் செடிகள் மரங்கள்
  இன்னும்
  வீடு அனைத்தும் நனைந்தன
  அந்தப் பெருமழையில்

 6. ராச.கணேசன் சொல்கிறார்:

  உங்கள் புகைப்படத்திற்கும்
  பின்பக்கம்
  கறந்த மலை போல்
  தெரிகிறது

  கறந்த மலையோ சிறு மலையோ -யாம்
  பார்த்து பார்த்து வளர்ந்த மலை
  இப்போது
  தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டும்
  பார்க்கும் மலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s