கனவுகள் புதைந்த வீடு

என் மனஅறையில்
உன்  நினைவுகள்  மட்டுமே
நிரம்பியிருந்த  ஒரு  மாலைப்பொழுது  அது
அடர்வனம்  சூழ்ந்திருக்கும்
அந்த வீட்டிற்குள்
நான்
அடியெடுத்து வைக்கின்றேன்
 .
கனத்த வெற்றிடத்தை
நிரப்பவியலாத
பெரும் சுவர்களும்  ஜன்னல்களும்
அற்புத  வேலைபாடுகளினால்
நிரம்பியிருக்கின்றன
 .
கனவுகள்
புதைக்கப்பட்ட
பிரம்மாண்டமான
அவ்வீட்டிற்குள்
வழிப்போக்கனைப்  போன்று
பார்வையாளனாகிறேன்
 .
காலங்காலமாக
வாழ்வோமென்ற நம்பிக்கையில்
கட்டப்பட்ட
மூதாதையரின் வீடு
சலனங்களேதுமற்றிருக்கின்றது.
…………………………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to கனவுகள் புதைந்த வீடு

 1. N.Rathna Vel சொல்கிறார்:

  நல்ல கவிதை.
  வாழ்த்துகள்.

 2. kalai சொல்கிறார்:

  வழிப்போக்கனைப் போன்று
  பார்வையாளனாகிறேன்
  நல்ல சிந்தனை.வாழ்த்துக்கள்.

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  மனுசுகுள் , அன்பு நினைவுகள் தாலாட்டும் போது, அன்புக்குரியவன் நாம் நுழையும் வீட்டில் இல்லாவிட்டால் எந்த ஒரு வீடும் என்னதான் பிரமாண்டமாக இருந்தாலும், வீடு அடர் வனம்தான் ..அன்பு மனசு என்றுமே ஜன்னல்களும் அற்புத வேலைபாடுகளினால்’ ஆன வீட்டை விரும்பாது ,. , என்னதான் பழைய பெருமை கட்டிடமாக இருந்தாலும் மனசு உள்ளே செல்லாது தவிக்கும்…நாம் ,நம் வீட்டில் அந்நியனாய் வாழ்வோம்… அன்பான நினைவால் ஆராதிக்கும் இல்லத்தை விரும்பும் மனசு , வீடும் இல்லமாகும் என்ற நம்பிக்கையோடு வசந்தத்தை நோக்கி.. poem, அன்பு இல்லம்…

 4. keezhai.a.kathirvel சொல்கிறார்:

  thangalin thalathirkku entruthaan varugai sirantha pataippu paaraattukkal

 5. Jesus moris ravi சொல்கிறார்:

  ya this is practical,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  but …………………………………

 6. ராச.கணேசன் சொல்கிறார்:

  அருமை :
  கனவுகள்
  புதைக்கப்பட்ட
  பிரம்மாண்டமான
  அவ்வீட்டிற்குள்
  வழிப்போக்கனைப் போன்று
  பார்வையாளனாகிறேன்

  காலங்காலமாக
  வாழ்வோமென்ற நம்பிக்கையில்
  கட்டப்பட்ட
  மூதாதையரின் வீடு
  சலனங்களேதுமற்றிருக்கின்றது.
  -சக்தி ஜோதி

  நெருப்பாலும் சாம்பலாக்க முடியாத
  மூதாதையாரின் நினைவுகள்
  நம் பாதையில்
  பயணித்துக்கொண்டே இருக்கும்
  ஒரு இரவின் கருமையாய்
  ஒரு பகலின் ஒளியாய்
  ராச.கணேசன்
  ………………………
  ………………………………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s