நிலவென்று சொல்லாதே

நிலவென்று சொல்கிறார்கள்
என்னை  நிலவென்று சொல்கிறார்கள்
எனக்கு விருப்பமில்லாப் பெயர் அது
இரவல் ஒளியில்  ஒளிர்ந்து  கொண்டிருப்பது
எப்படி நானாக முடியும்
 .
நான்
எனது  சொற்களால்  ஆனவள்
எனது விரல்களிருந்து  கசிவது
என் இரத்தம்
அது
என்  முதுகுத்தண்டில் உற்பத்தியாகி
உலகெங்கும்  பரவுவது
 .
நான் பெண்
நிலவல்ல
நான்
உயிர்ப்புடனிருப்பவள்
நிலவல்ல
ஆயிரம்  ஆயிரம் சூரியன்களைப் பெற்றேடுக்கும் பெண்
நிலவல்ல
 .
நிலவு
அது ஒரு போலி
மாதர்
கண்களைக்  கட்டும்
ஒலித்தீற்று
மேலும்  அது  ஒரு சூன்யம்
 .
என்றென்றும்
பெண் நிலவாயிருக்க  விரும்பவே மாட்டாள்
அவள்
சூரியன்களைப்  பிரசவிப்பவள் .
………………………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடலோடு இசைத்தல், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to நிலவென்று சொல்லாதே

 1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  பெண் என்பவள் சக்தியுடன் கூடிய சூரிய கிரணங்களை ஜோதியாக உலகிற்கு அள்ளி கொடையாக வழங்குபவள்..அவள் ,ஆதி சக்தி ..அவளே உலகின் ஆதாரம். அவளிடமிருந்து மட்டுமே உயிர் பிறக்கின்றது..அவள் , பின் எப்படி இரவல் ஒளியாக முடியும்? ரௌத்திர கேள்வி ..பாயும் புலியாக இருந்தாலும், ஆதார சக்தி அருகில் … ”எனது விரல்களிருந்து கசிவது..என் இரத்தம்”–sentences have powerful meaning..
  .poem, ரௌத்திர சூரியன் …

 2. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமை.
  எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

 3. manimuthu.s சொல்கிறார்:

  இரவல் ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருப்பது
  எப்படி நானாக முடியும்
  ஆயிரம் ஆயிரம் சூரியன்களைப் பெற்றேடுக்கும் பெண்
  சொற்களால் ஆனவள்
  எனது விரல்களிருந்து கசிவது
  என் இரத்தம்
  உலகெங்கும் பரவுவது
  நான
  நிலவல்ல
  பெண்.
  பெண்.பெண்.பெண்.
  ——————————-
  சிறப்பு

  வாழ்த்து

 4. mohanamoorthy சொல்கிறார்:

  indha kavithayin varigal uyirperumbothu pengalin ella avamanangalum udaitheriyapadum. vaaztukal

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s