நினைவுகளின் வாசனை

வாசனைகள்
அவனை  ஞாபங்கொள்ளச்  செய்கின்றன
 .
பனித்திவலை  படிந்த
பசும்புற்களின் வாசனை
அவனுடனிருந்த   அதிகாலையை  நினைவூட்டுகிறது
 .
உருளும்  பனித்துளிகளில்
அவன் கண்கள்  மூடி  இமைக்கும்  காட்சி
மனதில்  எழுந்து   அடங்குகிறது
 .
முந்தைய  முற்பகல்  தினத்தில்
ஒருநாள்  அவளது  இருப்பிடம்  வந்திருந்தான்
பகலின்  வாசனை
தேனீராக மாறியிருந்தது
 .
பகலிலிருந்து
அவனுடைய
வாசனையை பிரிக்கவியலாது
என்பதையுணர்ந்த
மழை பொழியும் ஒரு மாலையில்
மலர்களோடு காத்திருந்தாள்
 .
ஈரம்படர்ந்த  மண் வாசம்
காற்றில்  கரைந்து
அவனாக  மாறியிருக்கையில்
அவள்  தனித்திருக்கும்
நிலாப்  பொழுதின்   வாசனை
 .
காதலாக  மாறியிருக்கிறது .
……………………………………………………………………………………சக்தி ஜோதி 
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம், கவிதை and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நினைவுகளின் வாசனை

 1. mohanamoorthy சொல்கிறார்:

  manathai kavarntha varigal, thakathai erpaduthiya karuthuttam

 2. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  ‘பசும்புற்களின் வாசனை , உருளும் பனித்துளிகளில்’ -இரண்டும் அதிகாலை பசுமை, இதம் ,மென்மை என , ஒரு மனதிற்கு இசைவான ஒரு மார்கழி அதிகாலை பொழுது என்ன உணர்வை ஏற்படுத்துமோ , அதனை நம்மை அறியாமலே ,நமக்குள் சிற்றோடை போல் பாய்கின்றது ..பின்னர், அது , மெதுவாக , தேனீர் வழியாக, மலை பகுதிக்கு சென்று , சாரலாய், நம் மீது…மெல்ல,’ மலரு’ம் நிலவாய், மனம் குளிர்ந்து , நறுமணமாய், நம்மை , அள்ளி செல்லுகின்றது ..poem, .பூவினும் மென்மை அன்பு, அதனினும் மென்மை இக்கவிதை..

 3. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

  ‘மழை, மாலை, மலர்,ஈரம்படர்ந்த காற்றில், மண் வாசம்,நிலா’–இங்கு இயற்கை காதலாகி ,கசிந்துருகி ….என்ன ஒரு வார்த்தை துள்ளல்கள் .poem ,.மழை நேரங்களில் மலர்ந்த மலர்…

 4. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 5. ச.இலங்கேஸ்வரன் சொல்கிறார்:

  தங்களின் கவிதை பசுமையான நினைவுகளை (வேதனைகளையும்) மீட்டித்தந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s