ஒரு கடிதத்தை எளிதாக
எழுதத் தொடங்கி விடுகிறார்கள்
நிறைய கடிதங்களை வாசித்திருக்கிறேன்
பிறர்
பிறருக்கு எழுதிய கடிதங்களை
நண்பர் நண்பருக்கு எழுதிய கடிதங்களை
எழுத்தாளர் வாசகருக்கு எழுதிய கடிதங்களை
வாசகர் எழுத்தாளருக்கு எழுதிய கடிதங்களை
ஒரு
தூக்குத் தண்டனை கைதி
அவனுடைய தாய்க்கு எழுதிய கடிதங்களையும்
வாசித்திருக்கிறேன்
மட்டுமல்லாமல்
ஒரு கடிதம்
எவ்வாறு எழுதப்பட வேண்டுமெனச் சொல்கின்ற
நூல்களையும் வாசித்திருக்கிறேன்
என்றாலும்கூட
என்
அன்புக்குரியவருக்கு
எழுத வேண்டிய ஒரு கடிதத்தை
எவ்வாறு தொடங்க வேண்டுமென்பதை
அறியாமல் இருக்கிறேன்
அறிந்துகொள்ள விரும்பாமலும் இருக்கிறேன்.
…………………………………………………………………………………………………..சக்தி ஜோதி
Advertisements
வழக்கொழிந்த கடிதம் என்கிற வடிவம் ஒவ்வொன்றும் ஒரு இலக்கியம் ,அன்புள்ள என்று ஆரம்பிக்கிற போதே அதில் ஆத்மார்த்தம் கலந்து வழியும் வரிகள் மனதை வருடி ,நெருடி ,மகிழ்வுற என பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறது ,இன்றும் நான் இருபது வருடங்களுக்கு முன்பு எனக்கு எழுதப்பட்ட கடிதங்களை பாதுகாத்து வைத்து படிக்கும் போது அவர்களை கண்முன் நிறுத்தி பார்க்கிறேன் .கடிதத்தின் ஆத்மார்த்தம் இன்றைய ஹாய் ! ரக குறுஞ்செய்தி ,மின்னஞ்சலில் கிடைப்பதரிதாகிறது ,நமக்கும் செய்திக்கும் மிகப்பெரிய இடைவெளியை தருகிறது .தோழர் சக்தி ஜோதி அரிதாகி போன விஷயத்தை அருமையாக வடித்திருக்கிறார் .அன்புக்குரியவருக்கு தொடங்க அவர் தவிப்பதுவும் ,அது புதுமையாக இருக்க வேண்டும் ,தெரிந்து கொண்டு எழுதினால் ,அதாவது பிறரை பார்த்து அதை போல் எழதினால் அது இலக்கியமாக புதிய படைப்பாக இருக்காது ,எனவே அது மன ஊற்றில் ஊறி வெளிப்பட வேண்டும் என காத்திருக்கிறார் போலும் .காத்திருப்போம் அவரின் அன்புக்குரியவரின் கடித்தத்திற்க்காக.
புது புத்தகத்தின் அற்புத அட்டைப்பட அமைப்புக்கு முதலில் ஒரு பாராட்டு ..ஒரு அன்பு கடிதம் எழுதவதை , இப்படி அழகாக மென்மையாக இனிமை தமிழில் சொல்ல முடியுமா ? இதை படித்தாலே போதும் ..பின் கடிதம் எதற்கு ? இந்த அன்பிலும் , ஒரு நெகிழ வைக்கும் தூக்கு தண்டனை கைதி , அவனுடைய அம்மாவின் சுழலான சூழல்..பாரதிதாசன் ‘இதுவரை தன்னலம் பற்றியே சிந்தித்தோம் ..பொதுநலத்துக்கு என்ன சிந்தித்தோம் ‘ என்று கூறுவதை , ‘அழகன்’ படத்தில் மம்முட்டி கொஞ்சும் தமிழில் கூறுவதை , என் மனம் நினைக்கின்றது …சில நேரங்களில், poem , அறிந்தும் அறியாமலும் கூட ,ஒரு விசித்ரமான அழகுதான்..
அவருக்கு எதுக்கு கடிதம்?
இது உங்கள் புதிய தொகுதியா சக்தி?. வாழ்த்துக்கள்.
அருமை.
வாழ்த்துகள்.
கடிதம் என்கின்றபோதுதான் ஞாபகம் வருகின்றது ,ஆத்திரத்தில் எழுதப்பட்ட கடித்தத்தால் சொந்தங்களிடையே பகைமை ஏற்பட்டு,பின்பு ஒரு மறை உறவுகள் மீட்டப்பட்டபோது மனதிற்குள் வெட்கித்துக்கொண்டு,…..சீ …ஆத்திரம் பொல்லாததுதான்.சிலவேளை புத்தியைக்கூட மழுங்கடித்து விடுகின்றது