அதிகாலைச் சூரியன் வருகையில்

தூக்கத்தை இழப்பதற்கு
உன்  வார்த்தைகள் தேவையில்லை  எனக்கு
நீ
என்னை
நினைப்பதைத்  தவிர்த்துவிட்டாலே  போதும்
மனத்தின் சஞ்சலத்தை
மேலும் அதிகப்படுத்தும்
உன் மௌனம்
என்னுடல்
வெளிறி
ஒளியிழந்து  போக
உன் வருகை  நிகழாத  என் வாசல் போதும்
நம்  மகிழ்வான நாட்களில்
சிரிப்பும்  குதூகலக்  கண்ணீரும்
இன்று
காதலை  உருமாற்றியிருக்கிறது
நெடுநாள்  உறக்கம்  இழந்தபின்பு
துயிலும்  மயக்கத்தை
உன் அழைப்பே தரும்
மேலும்
உன் வருகையின்  ஒளி
வாடிய  குன்றுகளில்   கொண்டாட்டத்தை  உருவாக்கும்
…………………………………………………………………………………….சக்தி ஜோதி
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எனக்கான ஆகாயம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அதிகாலைச் சூரியன் வருகையில்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    சில நேரங்களில் , நினைவுகள், வலி உண்டாக்கும்..சில நிறங்களில் வழி உண்டாக்கும்..அற்புத உணர்வுடன் கூடிய படைப்பு ..
    ‘உன் வருகையின் ஒளி வாடிய குன்றுகளில் கொண்டாட்டத்தை உருவாக்கும்’ –மனம் வருத்தப்பட்ட நேரங்களில் , தேவனின் வருகை , மனதில் மகிழ்ச்சி கொண்டாட்டத்தை ஒப்பாக கொண்டுள்ளது ..poem, ஆரம்ப சோகம், முடிவாக கொண்டாட்டம் ..

  2. RAVICHANDRAN V சொல்கிறார்:

    Pularkalaiyin varavu kurithana kavithai arumai.
    Vazhthukkal.
    Anbudan

  3. N.Rathna Vel சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s