நாட்டியமாடும் நாள்


வழக்கத்திற்கு மாறாக
அதிகாலையில் எழுந்து கொண்டாள்
அந்தச் சிறுமி
.
பள்ளி நாட்களின் சோம்பலிலிருந்து
நாட்டியமாடப் போகிற நாள்
.
குளிர்ந்த நீரில் குளித்து
நீள் கூந்தலை உலர்த்தினாள்
ஒப்பனைகள் ஒவ்வொன்றாய்
நடந்து முடிந்தன
நீள் விழிகளை விரித்து மையிட்டுக்கொண்டாள்
உதடுகளில் சாயம் பூசிக்கொண்டாள்
இறுதியாக
நாட்டிய உடையினை அணிந்து கொண்டாள்
.
தன் முன்னிருக்கும் உலகிலிருந்து
வெளியேறி
தன்னுள் இயங்கும் உலகிற்குள் நடந்து செல்கிறாள்
.
ஆடை மாற்றுவதென்பது
மனதினை மாற்றுவது என்று
அறியாத சிறுமியவள்
.
நடந்து செல்கிறாள்
மனதிற்குள்ளும்
தாளகதியின் சப்தத்திற்குள்ளும்.
……………………………………………………………………………………………………சக்தி ஜோதி
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கவிதை, காற்றில் மிதக்கும் நீலம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நாட்டியமாடும் நாள்

  1. Ponnambalam Kalidoss Ashok சொல்கிறார்:

    அன்றாட படிப்புதான் ,தன்னுடைய வாழ்க்கை என்று பாடம் புகட்டப்பட்ட சிறுமி,..தனக்காக , தன் மகிழ்ச்சிக்காக , என ஒவ்வொரு அழகையும் , ரசித்து , புதிய உலகில் காலடி எடுத்து வைக்கும் நிகழ்வை , நாமே உணர்ந்து கொள்வது போல் வரைந்த அற்புத அஜந்தா ஓவியம் …மெல்ல, மெல்ல தன்னுள் எழும் அற்புத மாற்றத்தை உணரும் நாள் , சிறுமிக்கு ஒரு பொன்னாள்,…poem—சுதந்திரத்தை நோக்கி பறக்கும் ஒரு வெண்புறா

  2. suresh சொல்கிறார்:

    dough rough indeed the rims which is good to the nation

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s